Tuesday, May 13, 2008

நான் யாரிடம் கேட்பது?

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.

அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்

அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “

அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்

ஓஷோ – ஓம் சாந்தி சாந்தி சாந்தி

என் தோழியின் புதிய பதிவுகள்- ஏரிக்கரையினிலே


ஏரிக் கரைகளிலே....
ஏஞ்சல் அலைகளிலே....
உலவும்..
ஒரு ரோஜா வானம் நான்

தெறித்து விழும் மழை போலே
முன்னே துரத்தி வரும் கடல் அலை போலே
மனம் முழுதும் பரவசங்கள்

தனிவானம்.. என் மெளனம்
புதுவேதம்... என் இன்பம்

தென்றல் அடிக்கும் சுக ஒலியில்,
திசைகளில் நடக்குது என் விழிகள்

ஓரமாய்........
நதி ஓடமாய்.........
வாழ்வில் புது பரவசங்களுடன்
இவள் http://oshoniskriya.blogspot.com/

நீயும் ஒரு போலக்கா ? ஹீ ஹி

ஒரு பிரெஞ்சுக்காரன் ,ஒரு யூதன்,அடுத்து ஒரு போலக் மூவரும் 30 வருடம் சிறை தண்டணையைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கையை வைக்கலாம்.அதை சிறை அதிகாரி நிறைவேற்றி வைப்பார்.

பிரெஞ்சுக்காரான்,”பெண்” என்று கேட்டான்

யூதன்,’” டெலிபோன் “என்று கேட்டான்.

போலக்,”சிகரெட்” என்று கேட்டான்

30 வருடத்திற்கு பிறகு,அந்த பிரெஞ்சுக்காரன் ஒரு பெண்ணோடு
10குழந்தைகள் புடை சூழச் சென்றான்!
அந்த யூதன் டெலிபோன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக பெற்றது சுமார் 10,000 டாலர்!
ஆனால் அந்த போலக்,தெரு வழியே நடந்து சென்று,’நெருப்புப்பெட்டி இருக்கிறதா?’ என்று கேட்டுக் கொண்டே சென்றான்!போலக் போல் அற்ப விஷயங்களுக்காக முட்டாளாக இருக்காதீர்கள்

முதலில் புத்திசாலித்தனம் தேவை.பிறகு கொஞ்சம் சிரிப்புணர்ச்சி
மற்றும் கொஞ்சம் அன்பு மயமான இதயம். இவற்றோடு உன் வாழ்கை அதன் தனித்தன்மையுடன் செல்லட்டும்
.-ஓஷோ

Saturday, May 10, 2008

ஒரு நாள் இரவு கமாலும் கபீரும்....

கபீரின் குடும்பம் மிகவும் கவலைப்பட்டது.அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையானது .அவர் வீட்டிற்கு யார் வந்தாலும்,கபீர் அவர்களை சாப்பாட்டிற்கு அழைப்பார்.தினமும் 200 பேராவது அவரை தரிசிக்க வருவார்கள்.அவர் ஒவ்வொருவரையும் உணவு உண்ண அழைப்பார்.

அவருடைய மகன் கமால் ஒரு நாள் இரவு,”இதையெல்லாம் நிறுத்துஙகள்!நாமோ ஏழை,நாங்களோ பிச்சை எடுக்கிறோம்.கடனும் வாங்கி விட்டோம் .இனி யாரும் எதுவும் கொடுக்கப் போவதில்லை.நீங்கள் எங்களை திருடர்களாக ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறது”என்று கூறினான்.

அவன் கடுப்பாக இருந்தான்.ஆனால் கபீர் சிரித்தார்.”ஏன் இதைப்பற்றி முன்பே யோசிக்கவில்லை?திருடனாக இரு!இது ஒரு நல்ல வழி”என்று கூறினார்

ஆனால் கமால் அவர் மகன் –கபீரின் மகன். ”திருடனாக இரு என்று கூறுவது கபீர்தானா?அவர் சுய நினைவில்தான் உள்ளாரா?,நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அவர் புரியவில்லையோ?”என்று எண்ணினான்.
உடனே அவன் நகைப்பாய் அவரைப் பார்த்து ,”சரி, நீங்கள் அப்படி சொல்வதானால் போய்,நான் திருடுகிறேன்.ஆனால் நீங்களும் என்னுடன் வர வேண்டும்” என்றான்.
கபீர் திருடச்செல்வாரா?இப்போதாவது அவர் உணர்வார் என்று கமால் எண்ணினான்.
ஆனால் கபீர் எழுந்தார்,”சரி நானும் வருகிறேன்” என்றார்

கமாலும் விடுவதாக இல்லை.கடைசி நிமிஷத்திலாவது கபீர் சிரித்துக்கொண்டே”நான் விளையாட்டிற்கு கூறினேன்” என்று கூறுவான் என கமால் நினைத்தான.ஆனால் என்ன நடந்தது
கமால் ஒரு வீட்டினுள் புகுந்தான்.சொந்தக்காரரின் பொக்கிஷங்களில் சிறிது எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.கபீர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்.இதுதான் கடைசி நேரம்.இதற்குப் பிறகு காரியத்தை மாற்ற முடியாது.அப்போது கமால்,”என்ன செய்ய வேண்டும்?இதை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமா?”எனக் கேட்டான்.

அதற்கு கபீர்,”சரி,நீ திரும்பிப்போ, திருடிய வீட்டில் உள்ளவர்களை எழுப்பி சொல்லிவிட்டு வா,”என்று கூறினார்.

கமால்,” இது என்ன திருட்டு?,”என்று கேட்டான்.

அதற்கு கபீர்,”நாம் சொல்லிவிட்டாவது போக வேண்டும்.இல்லையெனில் அவர்கள் அனாவசியமாக வருத்தப்படுவார்கள்”என்றார்.
கமால் அவரிடம் ”அய்யோ!அப்பா!”அப்படியானால் அவர்கள் நம்மைத் திருடர்கள் என்று நினைப்பார்களே” என்று கூறினான்.

அதற்கு கபீர்,”அவர்கள் கூறுவது சரிதான்.ஆமாம் நாம் திருடர்கள் தானே!”என்று கூறினார்
.உடனே கமால்”அப்படியானால் மறுநாளே- உங்களது மரியாதையெல்லாம் பறந்து விடுமே,ஒருவரும் உங்களை மதிக்கமாட்டார்கள்”என்றான்

அதற்கு கபீர்,”அது சரிதான்!ஏன் அவர்கள் திருடர்களை மதிக்க வேண்டும்?” என்றார்

”திருடுவது தவறில்லை ,பாவமில்லை என்றால் மக்கள் அவமதிக்காமல் இருந்தால் திருட நினைக்கிறாய்.இல்லை ,மக்கள்
நீ திருடுவதால் என்னென்ன செய்வார்களோ அதயும் ஏற்றுக்கொள். ”

முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் வாழ்வின் உயிரோட்டமான வழி.எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது எந்த நிலையிலும் மறுத்தல் என்பது கிடையாது-ஓஷோ

Wednesday, May 07, 2008

வருமான வரி ;- ஓஷோ

நான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, நிர்வாகம் எனது சம்பளத்தை உயர்த்தித் தர விரும்பியது , நான் வேண்டாம் என மருத்துவிட்டேன். துனை-அரசரால் அதை நம்ப முடியவில்லை அவர் என்னைப் பார்த்துக் கேட்டார் “ ஏன் வேண்டாம் ? “

நான் “இப்பொழுது வாங்கும் சம்பளத்திற்க்கு மேல் உயர்த்தினால் நான் வருமான வரி கட்ட வேண்டியது வரும் , எனக்கு வரி விதித்தல் (taxation ) எனக்கு வெருப்பானது , அதற்க்கு பதில் நான் வருமானவரி உச்ச வரம்பிற்க்கு குறைவாகவே சம்பளம் பெற்றுக்கொள்கிறேன் “ என்றேன்
நான் அங்கு இருக்கும் வரை வருமானவரி உச்ச வரம்பைத்தாண்டி சம்பளம் பெறவில்லை.

நான் வருமானவரி கட்டியதேஇல்லை, உண்மையில் வ்ருமானமே இருந்ததில்லை . நான் இந்த உலகிற்க்கு கொடுத்துக்கொண்டே இருந்தேன் , இந்த உலகில் இருந்து எதையும் எடுத்துக்கொள்ளவில்லை, இது எனது வாழ்வின் வெளிப்பாடு , வருமானமல்ல , நான் கொடுத்ததெல்லாம் எனது இதயத்திலிருந்தும் இருப்பிலிருந்தும் (being ) தரப்பட்டது.

மலர்வதற்க்கு வரி விதித்தால் மலர்வது நின்றுவிடும்’பனிகளுக்கு வரிவிதித்தால் பொழிவது நின்றுவிடும். - osho
taken from
Glimpses of a Golden ChildhoodChapter #1

விழிப்பு

மாபெரும் ஞான குரு கிசானிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றும் ,கோசு என்பவரால் சமாதி நிலை அடைய முடியவில்லை.

கட்டுப்பாடுகள் பற்றிய ஏழு நாள் பயிற்சி முகாமிற்கு குரு ஏற்பாடு செய்திருந்தார் .கடைசியாகத் தனக்கு அந்த வாய்ப்பு அமையப் போகிறது என்று நினைத்தார் கோசு.

அப்போது அவர்,கோயிலின் உச்சிக்கு ஏறிச்சென்று,அங்கிருந்தபடி ஒரு சபதம் செய்தார்.

”என் கனவு நிறைவேற வேண்டும்.இல்லாவிட்டால்,என் உயிரற்ற உடல்தான் கீழே கிடக்கும்”,என்று கூவினார் அவர்.

உணவு,உறக்கமில்லாமல் அவர் அங்கே ஒரு வாரம் நின்று கொண்டிருந்தார். ”இவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு எதுவும் சித்திக்கவில்லையே! இது ஏன்?என் கர்ம பலன் தான் என்ன?”:என்று அங்கிருந்து கதற ஆரம்பித்தார்.

ஒன்றும் நிகழவில்லை.தாம் தோற்றுப்போனதை உண்ர்ந்த அவர்,கீழே எட்டிக் குதிக்க,ஒரு காலை மெதுவாகத் தூக்கினார்.

அந்தக் கணத்தில் அவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது.

ஆனந்தப் பெருக்கில் அவர் கீழே இறங்கி ஓடினார்.மழையில் நனைந்து கொண்டே குருவின் இல்லம் நோக்கி ஓடினார்.

குருவிடம் அவர் பேச வாய் திறப்பதற்குள்,குரு.’வாழ்க! நீ சாதித்து விட்டாய் ”என்று கூறினார்.


வெளிப்பிரதேசம் முடிந்து போன விஷயம்.அகம் உள்ளே இருக்கிறது.அந்த உலகை காண உங்கள் பார்வை மாறினால் போதும். - ஓஷோ

முல்லாவின் திருமணம்

முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

”ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் “

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் “ இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “

”பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது ” என்றார் முல்லா

பெண்ணின் தந்தை : ???????????

Tuesday, May 06, 2008

முல்லாவும் அவரது மனைவியும்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக்க்கொண்டிருந்தனர் , அதில் ஒரு சுகமளிப்பவர் ( faith healer ) உறை ஆற்றிக்கொண்டிருந்தார் அவர் “ உங்களின் உடம்பில் ஏதாவது பகுதியை குனப்படுத்தவேண்டும் எனில் , உங்களது ஓரு கையை பாதிக்கப்பட்ட உருப்பில் வைக்கவும் மற்றொரு கையை இந்த தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்தால் அந்த உருப்பு ஆண்டவனுடைய கிருபையினாலே குனப்படுத்தப்படும்” என்றார்

இதைக் கேட்ட அவரது மனைவி தன்னுடைய கையை தன்னுடைய இதயத்தில் வைத்தாள்.

முல்லாவோ அவசரமாக தனது கையை அடிவயிற்றை நோக்கி கொண்டு சென்றார்
இதை கவனித்த அவரது மனைவி “ முல்லா ! இவருக்கு பாதிக்கப்பட்ட உருப்பை மட்டுமே குனப்படுத்தவைக்க முடியும். இவரால் இறந்தவைகளை உயிர்த்தெழச்செய்யமுடியாது விட்டுவிடு” என்றாள்