Monday, November 24, 2008

வேலையோடு விளையாடு!!!


கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

Saturday, November 22, 2008

டாஷ்மாக்கில் முல்லா

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?

முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “

நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “

நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்
-------------------------------------------------------------------------------------------------
முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.

ம.மருத்துவர் “ கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “

முல்லா “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

ம.ம “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “
------------------------------------------------------------------------------------------------
-ஓஷோ

இறப்பும் ஒரு கொண்டாட்டம் !

Thursday, November 20, 2008

காதில் மாட்டிய பட்டாணி

கால்பந்துப் பயிற்சியாளர் , பொடாட்டோ ( potato ) என்பவர் தொலைக்காட்சியில் ஒரு கால்பந்து விளையாட்டை ஓய்வாகப் பட்டாணியைக் கொறித்துக் கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மனைவி அங்கே வந்து, அவரது கவனத்தைக் கலைக்க முயன்றாள் . அப்பொழுது தவறுதலாக, ஒரு பட்டாணியை அவருடைய காதுக்குள் போட்டுவிட்டார், பிறகு அவர் எவ்வளவோ முயன்றும் அதை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த சமயம் , அவருடைய மகளும் ,மகளின் நண்பனும் ஓடி வந்து தன் தகப்பனார் தன் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு, காதுக்குள் கையை விட்டுத் தோண்டுவதாக இருப்பதைப் பார்த்தார்கள்.

பிறகு அந்த மகளின் நண்பன் சிப் , “ நான் உதவி செய்கிறேன் “ என்று சொல்லிவிட்டு , மேலும் அவன் , “ இப்போழுது நான் என் இரண்டு விரல்களையும் உங்கள் மூக்குத் துவாரத்துக்குள் விட்டு அடைத்து, உங்களுடைய மறு காதுக்குள் பலமாக ஊதப் போகிறேன் “ என்று சொல்லிவிட்டு , அப்படியே செய்ய , அந்தப் பட்டாணியும் வெளியே வந்து விழுந்து விட்டது, பொடாட்டோ மிகவும் ஆனந்த மடைந்து, மறுபடியும் உற்சாகமாத் தொலைக்காட்டியைப் பார்க்க ஆரமித்தார்.

அன்று இரவு, அவரும் அவரது மனைவியும் படுககையில் படுத்திருக்கும்போது, அவள் , “ அந்த சிப் பையன் நல்லவனாகத் தெரிகிறது . அவன் கல்லுரியை விட்டு வெளியே வந்த பிறகு அவன் என்ன ஆவான் என்று நினைக்கிறீர்கள் ? ” என அவரிடம் கேட்டாள்.

அதற்கு அவர் , ” எனக்குப் புரியவில்லை , இருந்தாலும், அவனுடைய விரல்களின் வாசனையை முகர்ந்த பொழுது, அவன் நமது மருமகனாக வரக்கூடும் என்று கருதுகிறேன் ! “ என்றார்

- ஓஷோ ( ஓம் சாந்தி சாந்தி சாந்தி )

Monday, November 17, 2008

அன்பு ரோஜா

அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது,மலரும் தன்மையுடையது.அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும் ,யாருக்காகவும் இல்லை.உள்ளுக்குள் தனி விருப்பு வெறுப்புகள் உண்டு,மற்றவர்க்கும் அதே.
தனிமையை நாம் விரும்புவதில்லை,அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள்.ஆனால் தனியாக loneliness சுற்றித்திரிவது தனிமையாகாது aloneness .அது பிரக்ஞை நிலையில் உச்சத்தன்மையில் இருப்பதாகும்.அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது உங்கள் அனபை,உங்கள் பாட்டை,உங்கள் இசையை,உங்கள் ஆட்லை மற்றும் இந்த அழகிய மரங்களை,வெகுளி நிறைந்த அந்த பறவைகளின் ஒலியை,இரவில் தெரியும் நட்சத்திரங்களை இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கொண்டாடுங்கள் பிறரோடு உண்மையாகப் பங்கிடுவது எதுவென்றால்,உங்கள் ஆழ்ந்த அமைதி,ஆனந்தம் மற்றும் கொண்டாட்டம்தான்.அப்பொழுது உங்கள் இதயம் மெல்ல மெல்ல உருகி,மற்றவர்களோடு ஒன்று கலக்கும் .அப்பொழுது உங்கள்
அன்பு ஆத்மிகமாக மாறுகிறது
- ஓஷோ
( ஓம் சாந்தி சாந்தி சாந்தி )