Friday, August 09, 2013

கூட்ட மனப்பான்மை

கூட்ட மனப்பான்மை


கலீல் கிப்ரானின் புத்தகத்தில் ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர்.

ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை! அவன் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான்.

தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத் தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.

யாருக்கும் சுயநினைவில்லை! ஏனெனில் எல்லோரும் பைத்தியமாக இருக்கும்போது யாருக்கு சுய உணர்விருக்கும்? ஹிப்பிகள் சொல்வதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள் அம்மணமாக திரிந்தனர், கத்தி கதறி கூக்குரலிட்டனர், பெண்கள் நிர்வாணமாக தெருவில் ஓடினர்! ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியமாகிவிட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லையே!

மந்திரியும் அரச குடும்பத்தினரும் மட்டுமே சோகமாக இருந்தனர். எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப் பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான விஷயம் நடந்தது.

நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர்.

காவலாளிகள், போலீஸ், படைபட்டாளம் ஆகிய அனைத்தும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு,“மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்,” என கூக்குரலிட்டனர்.

அரசர், மந்திரியிடம்,“நமது படைகளுக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!” என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர்,“ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை கொன்றுவிடும்.” என்றார்.

அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே வரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம்,‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது.

Friday, January 04, 2013

ஓஷோ அறிமுக புத்தகம்

"ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்" என்ற ஓஷோ சித்தார்த் புத்தகம் பெரும் பரபரப்போடு விற்பனையாகி வருகிறது.

அதுவும் ஜூனியர் விகடனின் பரபரப்பான விமர்சனத்திற்குப்பின் பலரும்
படித்து ஓஷோ சாஸ்வதத்தின் www.osho-tamil.com மிற்கு வந்து தொடர்புகொள்கிறார்கள் என்று நான் அறிகிறேன்.

ஓஷோவை அறிமுகப் படுத்தும் இந்த புத்தகம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

Sunday, February 06, 2011

சிற்றின்பத்தின் உச்சியில் முக்தி

திரு ஜேயபாலன் அவர்களுக்கு!

( தங்களுக்கான பதிலையே ஒரு பதிவாக்க விரும்புகீரேன் - தலைப்புக்கு நன்றி)
எனக்கு சந்திரானந்தா சாமியை உண்மையில தெரியாது!, ஆனால் தங்களின் நோக்கம் எனக்குத் தெரியவில்லை, சிற்றின்பம் என்பதனை தாங்கள் வெருக்கிறீர்களா ? என்பதும் தெரியவில்லை, மேலும் எனக்கு ( தங்களுக்கும்தான்) சிற்றின்பத்தின் உச்சி(?????) அல்லது முக்தி போன்ற அன்பவங்கள் ஏற்பட்டவுடன் இதற்க்கான பதில் தரும் தகுதி எற்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிரேன்! மேலும் பின்தோடரும் பக்தகோடிகளைப் பற்றி நீஙகள் ஏன் ( proper ) பதிலுக்கு கவலைப் படுகிறீர்கள்! அதற்க்குபதில் தங்களின் முயற்ச்சியை முக்திமேல் திருப்புங்கள் atleaset சிற்றின்பத்தின் குச்சியாவது sorry உச்சியாவது தங்களுக்கு கிடைக்ககூடும்

Saturday, January 08, 2011

ஓஷோ சாஸ்வதம்

ஓஷோ அன்பர்களே,

பெரும்பாலான தமிழ் ஓஷோ அன்பர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி விட்டாலும்
நானும் கூற விரும்புகிறேன்.

ஓஷோ சாஸ்வதம் என்று அவிநாசியில் ஓஷோ அன்பர்கள் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
விவரங்களுக்கு www.osho-tamil.com சென்று பாருங்கள்.

வாருங்கள். மனமாற்றம், கருத்து மாற்றம், ஏன் குணமாற்றம் அடைந்திருந்தாலும் பத்தாது.
நிலைமாற்றத்திற்கான ஞானசக்தி மண்டலத்தை உருவாக்குவோம்.

பாகல்
ஒரு ஜோர்புத்தா ஓஷோ சாஸ்வதத்திலிருந்து.

Monday, November 24, 2008

வேலையோடு விளையாடு!!!


கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

Saturday, November 22, 2008

டாஷ்மாக்கில் முல்லா

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?

முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “

நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “

நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்
-------------------------------------------------------------------------------------------------
முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.

ம.மருத்துவர் “ கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “

முல்லா “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

ம.ம “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “
------------------------------------------------------------------------------------------------
-ஓஷோ

இறப்பும் ஒரு கொண்டாட்டம் !