Showing posts with label வகைபடுத்தபடாதவை. Show all posts
Showing posts with label வகைபடுத்தபடாதவை. Show all posts

Monday, November 24, 2008

வேலையோடு விளையாடு!!!


கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

Tuesday, May 13, 2008

என் தோழியின் புதிய பதிவுகள்- ஏரிக்கரையினிலே


ஏரிக் கரைகளிலே....
ஏஞ்சல் அலைகளிலே....
உலவும்..
ஒரு ரோஜா வானம் நான்

தெறித்து விழும் மழை போலே
முன்னே துரத்தி வரும் கடல் அலை போலே
மனம் முழுதும் பரவசங்கள்

தனிவானம்.. என் மெளனம்
புதுவேதம்... என் இன்பம்

தென்றல் அடிக்கும் சுக ஒலியில்,
திசைகளில் நடக்குது என் விழிகள்

ஓரமாய்........
நதி ஓடமாய்.........
வாழ்வில் புது பரவசங்களுடன்
இவள் http://oshoniskriya.blogspot.com/

Wednesday, May 07, 2008

விழிப்பு

மாபெரும் ஞான குரு கிசானிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றும் ,கோசு என்பவரால் சமாதி நிலை அடைய முடியவில்லை.

கட்டுப்பாடுகள் பற்றிய ஏழு நாள் பயிற்சி முகாமிற்கு குரு ஏற்பாடு செய்திருந்தார் .கடைசியாகத் தனக்கு அந்த வாய்ப்பு அமையப் போகிறது என்று நினைத்தார் கோசு.

அப்போது அவர்,கோயிலின் உச்சிக்கு ஏறிச்சென்று,அங்கிருந்தபடி ஒரு சபதம் செய்தார்.

”என் கனவு நிறைவேற வேண்டும்.இல்லாவிட்டால்,என் உயிரற்ற உடல்தான் கீழே கிடக்கும்”,என்று கூவினார் அவர்.

உணவு,உறக்கமில்லாமல் அவர் அங்கே ஒரு வாரம் நின்று கொண்டிருந்தார். ”இவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு எதுவும் சித்திக்கவில்லையே! இது ஏன்?என் கர்ம பலன் தான் என்ன?”:என்று அங்கிருந்து கதற ஆரம்பித்தார்.

ஒன்றும் நிகழவில்லை.தாம் தோற்றுப்போனதை உண்ர்ந்த அவர்,கீழே எட்டிக் குதிக்க,ஒரு காலை மெதுவாகத் தூக்கினார்.

அந்தக் கணத்தில் அவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது.

ஆனந்தப் பெருக்கில் அவர் கீழே இறங்கி ஓடினார்.மழையில் நனைந்து கொண்டே குருவின் இல்லம் நோக்கி ஓடினார்.

குருவிடம் அவர் பேச வாய் திறப்பதற்குள்,குரு.’வாழ்க! நீ சாதித்து விட்டாய் ”என்று கூறினார்.


வெளிப்பிரதேசம் முடிந்து போன விஷயம்.அகம் உள்ளே இருக்கிறது.அந்த உலகை காண உங்கள் பார்வை மாறினால் போதும். - ஓஷோ

Monday, April 28, 2008

யார் பிச்சைக்காரன்

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “

பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.


ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற தியானம் என்பதனை இழந்துவிடுகிறோம்

Osho :- yoga alpha and omega vlo-10

Wednesday, June 20, 2007

பிரார்த்தணை , தியானம் மற்றும் பகுத்தறிவு எது மிகவும் அபத்தம் ?

பிரார்த்தணை பற்றிய எனது பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களின் தொகுப்பு

Voice on Wings said...
உங்களது இடுகைகளைப் படித்து வருகிறேன். ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்ற அளவில் உங்களுக்கு வெற்றிதான். குறிப்பாக, மதங்கள் / புனிதங்கள் / (அரசியல் கட்சி போன்ற) நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கல்லெறிவது (அல்லது உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் 'பாட்டு பாடுவது :)) என்ற அளவில் முழு உடன்பாடு. ஆனால், நீங்களும் உங்கள் அமைப்பும் மீண்டும் தியானம், குண்டலினி, ஆள் சேர்ப்பு என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் அனைத்து குணாதிசயங்களுடன் செயல்படுவதைப் பார்க்கும்போது, உங்கள் அமைப்புக்கும் சில கற்கள் / பாடல்களைப் பெறுவதற்கான தகுதி வந்து விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தியானம், chakra breathing இவற்றையெல்லாம் செய்யாமலே மனிதனால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்கிறேன்.
11:25:00 AM
ஆனந்த் நிருப் said...
இந்த பதிவகள் ஆள் சேர்ப்பு வேலைகளுக்கல்ல ! அதன் அவசியம் எனக்கிறுப்பதில்லை! இந்த பதிவுகள் தேவை உள்ளவர்களுக்கு பயன் அளித்தால் அதுவே போதும், சில பேருக்கு விஷய ஞானம் போதுமானது, அனுபவம்( தியான ) தேடும் சிலருக்கு மற்ற பதிவுகள் உபயோகபடட்டும் , எனக்குத் தெரிந்து ஓஷோவின் தியான முகாம் மற்றும் தியானம் எங்கு நடைபெருகிறது எனும் தகவல் பலருக்கு உபயோகமாக உள்ளது அதனால் அதன் செய்திகளை இடுகிறேன். ஓஷோவில் அமைப்பு (it is not a religious organaisation )என்று எதுவும் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு தனி மனிதன் மட்டுமே! மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு தியானம் என்பது இல்லாமலே தாங்கள் உண்மையான மகிழ்ச்சியொடு இருந்தால் ( இது இருட்டில் செல்பவன் தனக்கு பயம் இல்லை என்று சொல்வது போல் அல்லாமல் இருந்தால் )
8:05:00 PM
Voice on Wings said...
உங்களைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. (அவ்வாறு நினைத்து விட்டது போலத் தெரிவதால் இதைத் தெளிவுப் படுத்துகிறேன்.)உலக நடப்புகளைப் பற்றி பகுத்தறிவுடன் அணுகும் அதே நேரத்தில், நீங்கள் சாடும் 'பிரார்த்தனை'யை விட அபத்தமான செயல்களைப் பரிந்துரைப்பது போலிருந்ததால், எனது நேர்மையான கருத்துகளை வெளியிடத் தோன்றியது. எனது மகிழ்ச்சியின் நிலவரம் குறித்து நான் எதுவும் கூறவில்லை, அதற்கு இங்கு தேவையிருப்பதாகவும் நினைக்கவில்லை. தியானம், சுழற்சி (whirling), சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுவதால் இல்லாத மகிழ்ச்சியை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தை நான் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன், அவ்வளவே.
8:37:00 PM
ஆனந்த் நிருப் said...
voice on wings அவர்களுக்கு , நான் புன்படவும் இல்லை, என்னை பொருத்தவரை பகுத்தறிவு என்பது சோதனைக்கு உட்பட்டது , எல்லாவிதமான அறவியல் கண்டுபிடிப்புகளுமே சோதனை மூலமாகத்தான் உறுதிசெய்யப்பட்டது என்பது தாங்கள் அறியாததல்ல - இந்த ஓஷோவின் முறைகள் - தாங்கள் சோதித்து அறிவதற்க்கு உட்பட்டது - அதற்க்கு எந்த வித நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியது இல்லை- சோதித்து அறியாமல் கேள்விக்கு உட்படுத்த படுவது சர்க்கரை இனிக்கும்( அதை சுவைக்காமலே ) என்பதை கேள்விக்கு உட்படுத்துவதைப் போன்றது என்பது எனது தாழ்மையான கருத்து! இதை நியாயமான எந்த பகுத்தறிவு வாதியும் செய்யமாட்டார். ஒவ்வொறு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது அறிவியலின் அடிப்படை கருத்தல்லவா? அப்படியானல் நீங்கள் அதை கேள்விக்கு உட்படுத்துவீர்களா ? இந்தச் சுழற்ச்சி/ சக்ரா பிரித்திங் போன்ற விஷயங்களில் நான் கடவுள் உனக்கு அது தருவார் இது தருவார் என்று நான் கூறியிருந்த்தால் அது அபத்தம் , நான் நீங்கள் செய்யும் இந்த செயல் முறை தியானங்கள் தங்களுக்குள் அமைதி ஏற்படுத்தும் என்று தானே சொன்னேன் இது எவ்வகையில் அபத்தம்! பகுத்தறிவு என்ற போர்வைவில் யாரோ சொன்ன கருத்தை மூட நம்பிக்கையாய் பின்பற்றுவதை விட இது அபத்தமா ?( அவர்கள் கடவுள் என்ற உருவமற்றதை நம்புகிறார்கள் - நீங்கள் ஒரு மறைந்த பெரியவரை நம்புகிறீர்கள் எனக்கு விதயாசம் தெரியவில்லை - உங்களுடைய சொந்த அறிவின் மூலம் நீங்கள் எதை பகுத்தறிந்தீர்கள் எனபதே எனது கேள்வி ) நான் யாரையும் புண்படுத்தவில்லை! எனக்கு மகிழ்ச்சி தந்தது என்பதை எப்படி கேள்விக்கு உட்படுத்தமுடியும்! இது தங்களுக்கே அபத்தமாக இல்லையா ? தங்களுக்கு மாறுதல் தருகிறதா என்பதை பகுத்தறிய! நீந்கள்தான் சோதித்து பார்க்கவேண்டும் அதற்க்கான முறைகள் வேண்டுமானால் என்னால் பதிய முடியும்
10:18:00 PM
ஆனந்த் நிருப் said...
மிகவும் நன்றி! இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டும் கேள்வியில்லாமல் ஞானம் பிறப்பதில்லை



ஞாயமான (தனிமனித தாக்குதல் அற்ற ) கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது - இது எனக்கும் படிப்பவர்களுக்கும் இன்னும் ஒரு விளக்கமாகவும் இருக்கலாம்

Monday, June 18, 2007

கிறித்தவ மதமும் , சூனியகாரிகளும்(witch women)

கேள்வி :“Witch woman சூனியகாரி “என்பவள் யார் ? சூனியக்காரியும் நீங்கள் சொல்லும். “ புதிய மனைதரும்” ஒன்றெதானா ?

ஓஷோ :“சூனியக்காரி (witch woman )“என்பது மிகவும் மரியாதிக்குரிய ஒர் சொல் அதைக் கிறிஸ்தவம் கேவலப்பாடுத்தியிருக்கிறது. அதன் மூல அர்த்தம் “ஞானப்பெண்( wise woman ) என்பதே. ஆனால் கிறிஸ்தவ மதம் அதற்க்கு மிகவும் திரிபான அர்த்தத்தைக் கொடுத்தது. ஏனேன்றால் கிறிஸ்த்தவ மதத்தின்படி , சாத்தான் முதலில் ஏவாளின் மனத்தைக் கெடுத்தான் அன்றிலிருந்து அவன் பெண்னுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து வருகிறான் . ஆகவே அவள் ஞானமுள்ளவளாக இருக்க முடியாது . ஏனேன்றால் அவளுடைய ஞானம் கடவுளிடமிருந்து வரவில்லை . சாத்தானிடமிருந்தே வருகிறது . இந்த அர்த்தத்தை அவர்கள் ஏற்றியதுமே பெண்ணை அதிகமாக சபிப்பதற்க்கான வழி செய்ததாகிறது. உண்மையில் ஞானமுள்ள பெண்கள் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக சித்தர் மரபில்/ ரசவாத மரபில் இருந்தார்கள்-இது மறைஞான மரபின் கிளைகளில் ஒன்றாகும்.

கிறித்தவ பாதிரிகளின் கண்களுக்கு இந்த ரசவாத பெண்கள் அவர்களின் போட்டியாளர்களாக தெரிந்தார்கள் . எனவே அவர்களை ஒழித்துக்கட்டவேண்டியதானது . அவர்களை அழிக்க ஒரு நியாயப்பாடு தேட வேண்டியதாயிற்று; அவர்களின் நியாயவாதம் இதுதான் ; அந்த பெண்கள் சாத்தானுடன் உடலுறவு கொள்கிறார்கள். ஒரு சிறப்பு நீதிமன்றத்தை போப் நியமித்தார். “மகா புலன் விசாரனை “ ஆரம்பமானது. இதன் ஒரெ வேலை எல்லா சூனியக்காரிகளையும் கண்டுபிடித்து உயிரோடு கொளுத்துவதுதான் . அவ்ர்களை கண்டுபிடிக்க பயன்படுத்தமுறை இதுதான்- எந்த ஆண் வேண்டுமானாலும் குறிப்பிட்ட பெண் சூனியாக்காரியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதுமானது- அவளை கைது செய்துவிடலாம்.

அவ்ளை சித்திரவதை செய்ய சில முறைகளை புதிதாக கண்டுபிடித்தார்கள். அவை மிகவும் அசிங்கமாக இருந்த்தது ; அதை சகித்து கொள்வது பெண்ணால் இயலாத அளவுக்கு கொடுமையாக இருந்தது . சாத்தானுடன் உடலுறவு கொண்டதாக அவள் அறிக்கையிடாதவரை வாரக்கணக்கில் சித்திரவதை நீடித்தது. அதை ஒத்துக்கொண்டபின் அவள் மகா புலன் விசாரணை மன்றத்தின் முன்னிலையில் அதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கர்தினால்களும் பேராயர்களும் உயர் அந்தஸ்துள்ள பாதிரிகளும் அம்மன்றத்தில் உறுப்பினர்களாகி இருந்தார்கள் . அவர்கள் இந்த பெண்களை சாத்தானுடன் தாங்கள் உடலுறவு கொண்டதாக அறிக்கைவிடும்படி பலவந்தப்படுத்தினார்கள் . அதுமட்டுமல்ல , சாத்தானின் ( ஆண்) குறியானது கவைபோல் இரு கூர் உள்ளதாக உள்ளது ; எனவே ஒரே சமயத்தில் பெண்ணுள் இருபுறமிருந்தும் அதனல் ஊடுருவ முடிந்தது என்றும் சபைமுன் சொல்லும்படி அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள், இந்த பெண்களை உயிருடன் கொளுத்த நீதிமன்றத்துக்கு இதுவே போதுமானதாக இருந்தது. இவ்வாறு முற்றிலும் குற்றமற்ற பெண்கள் ஆயிரக்கண்க்கில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

கிறிஸ்தவ சாமியார்களைவிட அவர்கள் அதிக ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள். இதுதான் அடிப்படையான காரண்ம் . ஆகவே அவர்களை முற்றிலுமாக இல்லாமலாக்க வேண்டியிருந்தது.அப்போதுதான் எந்த போட்டியாளரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

வருங்கால மனிதர் சூனியக்காரராக இருப்பார் என்று சொல்லமாட்டேன். பாதிரி எப்பட்ய் கடந்த காலத்தின் ஒரு பகுதியோ அப்படித்தான் சூனியகாரியும், புதிய மனிதருக்கும் இயற்க்கைக்கும் இடையில் மத்தியஸ்தராக பூசாரிகள்/ சாமியார்கள்- ஆண்களிலும் சரி- பெண்களிலும் சரி - இருக்கமாட்டார்கள். இயற்க்கையுடம் ஆன அவரது தொடர்பு உடனடியானதும் நேரடியானதும் ஆகவே இருக்கும் . வருங்காலத்தில் எந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதத்துக்கும் இடமில்லை.

-பெண் விடுதலை; ஒரு புதிய தரிசனம்

Thursday, June 14, 2007

இராமன் தேடிய பொன்மான்!


மாயப் பொன்மான்

மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது .இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை ; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது.

சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். இராமன் காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறார்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறார். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது( அது மனதில் தோன்றும் ஆசை ). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும் .” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார்.

இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்சியாகும் (witness ). சீதைதான் உங்கள் மனம்(mind ). சீதை பிடிவாதம் பிடித்தாள். அந்த பொன்மான் எனக்கு வேண்டும்,. பிடித்து தாருங்கள் . இராமனும் மானின் பின்னால் ஓடினார். சிக்கலில் மாட்டிக்கொண்டார். அமைதியை இழந்தார்

இப்படித்தான் நம் மனம் ஆசையை துரத்தி செல்லும் போது , அமைதி இழக்கப்படுகிறது.

நீங்கள் இல்லாத ஒன்றைத் தேடிச் செல்லும்போது உங்களிடம் இருக்கும் ஒன்றை தொலைத்துவிடுகிறீர்கள்
.- ஓஷோ

( Taken from : Showering without clouds )

Tuesday, June 12, 2007

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


வணக்கம்

நண்பர்களே , எனது இந்த சிறு முயற்ச்சிக்கு ஆதரவு தந்தமைக்கு மிகவும் நன்றி, இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்க்கும் குறைவாகத்தான் இருக்கும், ஆயினும் தங்களைப்போல உள்ளவர்களின் வருகை எனக்குள் மேலும் ஊக்கத்தை தருகிறது.

எனது குறிக்கோள் என்ன ? எதற்க்காக இதை செய்கிறேன் ?

எனது குறைக்கோள் எனது சந்தோஷமே , இந்த வேலை எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது, அதனால் மட்டுமே செய்கிறேன் !

நான் இப்படித்தான் இதை செய்யவேண்டும் அல்லது இதை நீ செய்யக்கூடாது என சில அனானி நன்பர்களின் ( பின்னூட்டங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புகள் )
வேண்டுகோள் வந்தன.. அதனால் இதை எழுதுகிறேன் ..

இந்த வலைப்பதிவில் காமத்தை மட்டுமே மைய்யமாக வைத்து எழுதுவதாக ஒரு புகார் !
என்னை பொருத்தவரை , ஓஷோவை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் எனது தாயும் ஒரு ஓஷோ சந்நியாசிதான் , அதுவும் முதலில் கடுமையாக எதிர்த்து பின் அவர்களாகவே முழுமையாக அதை ஏற்று கொண்டவர் ( மிகவும் உருக்கமான அந்த நிகழ்வை தனியாக பின் எழுதுகிறேன்) , அதனால் இனி இந்த வாதத்தை மீண்டும் வைப்பது தங்களின் யோசிக்கும் திறமையை மைய்யமாக கொண்டது.

இப்படித்தான் , ஒரு ஆங்கிலேய ப் பெண்மணி ஓஷோவிடம் அவருடைய “ From sex to superconciousness “ என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, ஓஷோவிற்க்கு கடிதம் எழுதினார் “ நீங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தில் இத்தனை முறை இந்த காமம் குறித்த வார்த்தயை பயன்படுத்தி உள்ளீர்கள் இது மிகவும் தவறு எனச்சொன்னார் “ அதற்க்கு ஓஷோ அத்தனை பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே தான் உன்னை கவர்ந்திருப்பது உன்னுடைய மனதின் குறைபாடு மட்டுமே “ என பதில் கடிதம் எழுதச்சொன்னார்.

அது போல நான் நண்பர் மாடசாமி என்பவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் “ நான் முதலில் ஓஷோவைப் பற்றிய தவறான கருத்துகொண்டபுத்தகத்தை ( ஒரு பத்திரிக்கை )படிக்க நேர்ந்தது அதனால் ஒரு தவறான ஒரு எதிர்பார்ப்புடனே நான் முதலில் ஓஷோவிற்க்கு வந்தேன் “என்றார் பின்நாளில் அவர்தான் “ காமத்திலிருந்து கடவுளுக்கு “என்ற தலைப்பில் மிக அருமையாக “ from sex to superconciousness “ என்ற ஓஷோவின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார் . அந்த புத்தகம் தான் தமிழில் வந்த ஓஷோவின் முதல் நூல் ( இந்த புத்தகம் தான் முதல் நூல் என்பது எனது அனுமானம் ) அதனால் அறிமுகம் முக்கியமில்லை என்பது எனது கருத்து.

என்னுடைய இந்த முயற்சி புதிதாக வருபவருக்கும் ஒரு சுவரசியமாக இருக்கட்டும் என்பது எனது நோக்கம் ,

மேலும் எனக்கு அனானிகளிடம் சண்டையிட நேரமில்லை , தங்களுக்கு ஏதாவது திட்டவேன்டும் என்றால் வழக்கம்போல திட்டிக்கொண்டிருக்கலாம் அது தங்களது சுதந்திரம் , முகம் தெரியாமலே நீங்கள் திட்டுவது சற்று சலிப்பாக இருக்ககூடும் அதனால் என்னுடைய இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டே தாங்கள் இனி திட்டலாம்.

மேலும் என்னிடம் இருக்கும் ஓஷோவின் osho audio mp3, video , e-book, meditation music and dance music ஆகிய தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்க , இலவசமாக பகிர்ந்தளிக்க காத்திருக்கிறேன் …




மீண்டும் அன்புடன்


ஆனந்த நிருப்