Friday, August 09, 2013

கூட்ட மனப்பான்மை

கூட்ட மனப்பான்மை


கலீல் கிப்ரானின் புத்தகத்தில் ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர்.

ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை! அவன் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான்.

தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத் தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.

யாருக்கும் சுயநினைவில்லை! ஏனெனில் எல்லோரும் பைத்தியமாக இருக்கும்போது யாருக்கு சுய உணர்விருக்கும்? ஹிப்பிகள் சொல்வதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள் அம்மணமாக திரிந்தனர், கத்தி கதறி கூக்குரலிட்டனர், பெண்கள் நிர்வாணமாக தெருவில் ஓடினர்! ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியமாகிவிட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லையே!

மந்திரியும் அரச குடும்பத்தினரும் மட்டுமே சோகமாக இருந்தனர். எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப் பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான விஷயம் நடந்தது.

நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர்.

காவலாளிகள், போலீஸ், படைபட்டாளம் ஆகிய அனைத்தும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு,“மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்,” என கூக்குரலிட்டனர்.

அரசர், மந்திரியிடம்,“நமது படைகளுக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!” என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர்,“ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை கொன்றுவிடும்.” என்றார்.

அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே வரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம்,‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது.

Friday, January 04, 2013

ஓஷோ அறிமுக புத்தகம்

"ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்" என்ற ஓஷோ சித்தார்த் புத்தகம் பெரும் பரபரப்போடு விற்பனையாகி வருகிறது.

அதுவும் ஜூனியர் விகடனின் பரபரப்பான விமர்சனத்திற்குப்பின் பலரும்
படித்து ஓஷோ சாஸ்வதத்தின் www.osho-tamil.com மிற்கு வந்து தொடர்புகொள்கிறார்கள் என்று நான் அறிகிறேன்.

ஓஷோவை அறிமுகப் படுத்தும் இந்த புத்தகம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

Sunday, February 06, 2011

சிற்றின்பத்தின் உச்சியில் முக்தி

திரு ஜேயபாலன் அவர்களுக்கு!

( தங்களுக்கான பதிலையே ஒரு பதிவாக்க விரும்புகீரேன் - தலைப்புக்கு நன்றி)
எனக்கு சந்திரானந்தா சாமியை உண்மையில தெரியாது!, ஆனால் தங்களின் நோக்கம் எனக்குத் தெரியவில்லை, சிற்றின்பம் என்பதனை தாங்கள் வெருக்கிறீர்களா ? என்பதும் தெரியவில்லை, மேலும் எனக்கு ( தங்களுக்கும்தான்) சிற்றின்பத்தின் உச்சி(?????) அல்லது முக்தி போன்ற அன்பவங்கள் ஏற்பட்டவுடன் இதற்க்கான பதில் தரும் தகுதி எற்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிரேன்! மேலும் பின்தோடரும் பக்தகோடிகளைப் பற்றி நீஙகள் ஏன் ( proper ) பதிலுக்கு கவலைப் படுகிறீர்கள்! அதற்க்குபதில் தங்களின் முயற்ச்சியை முக்திமேல் திருப்புங்கள் atleaset சிற்றின்பத்தின் குச்சியாவது sorry உச்சியாவது தங்களுக்கு கிடைக்ககூடும்

Saturday, January 08, 2011

ஓஷோ சாஸ்வதம்

ஓஷோ அன்பர்களே,

பெரும்பாலான தமிழ் ஓஷோ அன்பர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி விட்டாலும்
நானும் கூற விரும்புகிறேன்.

ஓஷோ சாஸ்வதம் என்று அவிநாசியில் ஓஷோ அன்பர்கள் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
விவரங்களுக்கு www.osho-tamil.com சென்று பாருங்கள்.

வாருங்கள். மனமாற்றம், கருத்து மாற்றம், ஏன் குணமாற்றம் அடைந்திருந்தாலும் பத்தாது.
நிலைமாற்றத்திற்கான ஞானசக்தி மண்டலத்தை உருவாக்குவோம்.

பாகல்
ஒரு ஜோர்புத்தா ஓஷோ சாஸ்வதத்திலிருந்து.

Monday, November 24, 2008

வேலையோடு விளையாடு!!!


கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

Saturday, November 22, 2008

டாஷ்மாக்கில் முல்லா

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?

முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “

நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “

நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்
-------------------------------------------------------------------------------------------------
முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.

ம.மருத்துவர் “ கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “

முல்லா “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

ம.ம “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “
------------------------------------------------------------------------------------------------
-ஓஷோ

இறப்பும் ஒரு கொண்டாட்டம் !

Thursday, November 20, 2008

காதில் மாட்டிய பட்டாணி

கால்பந்துப் பயிற்சியாளர் , பொடாட்டோ ( potato ) என்பவர் தொலைக்காட்சியில் ஒரு கால்பந்து விளையாட்டை ஓய்வாகப் பட்டாணியைக் கொறித்துக் கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மனைவி அங்கே வந்து, அவரது கவனத்தைக் கலைக்க முயன்றாள் . அப்பொழுது தவறுதலாக, ஒரு பட்டாணியை அவருடைய காதுக்குள் போட்டுவிட்டார், பிறகு அவர் எவ்வளவோ முயன்றும் அதை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த சமயம் , அவருடைய மகளும் ,மகளின் நண்பனும் ஓடி வந்து தன் தகப்பனார் தன் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு, காதுக்குள் கையை விட்டுத் தோண்டுவதாக இருப்பதைப் பார்த்தார்கள்.

பிறகு அந்த மகளின் நண்பன் சிப் , “ நான் உதவி செய்கிறேன் “ என்று சொல்லிவிட்டு , மேலும் அவன் , “ இப்போழுது நான் என் இரண்டு விரல்களையும் உங்கள் மூக்குத் துவாரத்துக்குள் விட்டு அடைத்து, உங்களுடைய மறு காதுக்குள் பலமாக ஊதப் போகிறேன் “ என்று சொல்லிவிட்டு , அப்படியே செய்ய , அந்தப் பட்டாணியும் வெளியே வந்து விழுந்து விட்டது, பொடாட்டோ மிகவும் ஆனந்த மடைந்து, மறுபடியும் உற்சாகமாத் தொலைக்காட்டியைப் பார்க்க ஆரமித்தார்.

அன்று இரவு, அவரும் அவரது மனைவியும் படுககையில் படுத்திருக்கும்போது, அவள் , “ அந்த சிப் பையன் நல்லவனாகத் தெரிகிறது . அவன் கல்லுரியை விட்டு வெளியே வந்த பிறகு அவன் என்ன ஆவான் என்று நினைக்கிறீர்கள் ? ” என அவரிடம் கேட்டாள்.

அதற்கு அவர் , ” எனக்குப் புரியவில்லை , இருந்தாலும், அவனுடைய விரல்களின் வாசனையை முகர்ந்த பொழுது, அவன் நமது மருமகனாக வரக்கூடும் என்று கருதுகிறேன் ! “ என்றார்

- ஓஷோ ( ஓம் சாந்தி சாந்தி சாந்தி )

Monday, November 17, 2008

அன்பு ரோஜா

அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது,மலரும் தன்மையுடையது.அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும் ,யாருக்காகவும் இல்லை.உள்ளுக்குள் தனி விருப்பு வெறுப்புகள் உண்டு,மற்றவர்க்கும் அதே.
தனிமையை நாம் விரும்புவதில்லை,அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள்.ஆனால் தனியாக loneliness சுற்றித்திரிவது தனிமையாகாது aloneness .அது பிரக்ஞை நிலையில் உச்சத்தன்மையில் இருப்பதாகும்.அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது உங்கள் அனபை,உங்கள் பாட்டை,உங்கள் இசையை,உங்கள் ஆட்லை மற்றும் இந்த அழகிய மரங்களை,வெகுளி நிறைந்த அந்த பறவைகளின் ஒலியை,இரவில் தெரியும் நட்சத்திரங்களை இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கொண்டாடுங்கள் பிறரோடு உண்மையாகப் பங்கிடுவது எதுவென்றால்,உங்கள் ஆழ்ந்த அமைதி,ஆனந்தம் மற்றும் கொண்டாட்டம்தான்.அப்பொழுது உங்கள் இதயம் மெல்ல மெல்ல உருகி,மற்றவர்களோடு ஒன்று கலக்கும் .அப்பொழுது உங்கள்
அன்பு ஆத்மிகமாக மாறுகிறது
- ஓஷோ
( ஓம் சாந்தி சாந்தி சாந்தி )

Tuesday, May 13, 2008

நான் யாரிடம் கேட்பது?

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.

அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்

அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “

அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்

ஓஷோ – ஓம் சாந்தி சாந்தி சாந்தி

என் தோழியின் புதிய பதிவுகள்- ஏரிக்கரையினிலே


ஏரிக் கரைகளிலே....
ஏஞ்சல் அலைகளிலே....
உலவும்..
ஒரு ரோஜா வானம் நான்

தெறித்து விழும் மழை போலே
முன்னே துரத்தி வரும் கடல் அலை போலே
மனம் முழுதும் பரவசங்கள்

தனிவானம்.. என் மெளனம்
புதுவேதம்... என் இன்பம்

தென்றல் அடிக்கும் சுக ஒலியில்,
திசைகளில் நடக்குது என் விழிகள்

ஓரமாய்........
நதி ஓடமாய்.........
வாழ்வில் புது பரவசங்களுடன்
இவள் http://oshoniskriya.blogspot.com/

நீயும் ஒரு போலக்கா ? ஹீ ஹி

ஒரு பிரெஞ்சுக்காரன் ,ஒரு யூதன்,அடுத்து ஒரு போலக் மூவரும் 30 வருடம் சிறை தண்டணையைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கையை வைக்கலாம்.அதை சிறை அதிகாரி நிறைவேற்றி வைப்பார்.

பிரெஞ்சுக்காரான்,”பெண்” என்று கேட்டான்

யூதன்,’” டெலிபோன் “என்று கேட்டான்.

போலக்,”சிகரெட்” என்று கேட்டான்

30 வருடத்திற்கு பிறகு,அந்த பிரெஞ்சுக்காரன் ஒரு பெண்ணோடு
10குழந்தைகள் புடை சூழச் சென்றான்!
அந்த யூதன் டெலிபோன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக பெற்றது சுமார் 10,000 டாலர்!
ஆனால் அந்த போலக்,தெரு வழியே நடந்து சென்று,’நெருப்புப்பெட்டி இருக்கிறதா?’ என்று கேட்டுக் கொண்டே சென்றான்!போலக் போல் அற்ப விஷயங்களுக்காக முட்டாளாக இருக்காதீர்கள்

முதலில் புத்திசாலித்தனம் தேவை.பிறகு கொஞ்சம் சிரிப்புணர்ச்சி
மற்றும் கொஞ்சம் அன்பு மயமான இதயம். இவற்றோடு உன் வாழ்கை அதன் தனித்தன்மையுடன் செல்லட்டும்
.-ஓஷோ

Saturday, May 10, 2008

ஒரு நாள் இரவு கமாலும் கபீரும்....

கபீரின் குடும்பம் மிகவும் கவலைப்பட்டது.அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையானது .அவர் வீட்டிற்கு யார் வந்தாலும்,கபீர் அவர்களை சாப்பாட்டிற்கு அழைப்பார்.தினமும் 200 பேராவது அவரை தரிசிக்க வருவார்கள்.அவர் ஒவ்வொருவரையும் உணவு உண்ண அழைப்பார்.

அவருடைய மகன் கமால் ஒரு நாள் இரவு,”இதையெல்லாம் நிறுத்துஙகள்!நாமோ ஏழை,நாங்களோ பிச்சை எடுக்கிறோம்.கடனும் வாங்கி விட்டோம் .இனி யாரும் எதுவும் கொடுக்கப் போவதில்லை.நீங்கள் எங்களை திருடர்களாக ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறது”என்று கூறினான்.

அவன் கடுப்பாக இருந்தான்.ஆனால் கபீர் சிரித்தார்.”ஏன் இதைப்பற்றி முன்பே யோசிக்கவில்லை?திருடனாக இரு!இது ஒரு நல்ல வழி”என்று கூறினார்

ஆனால் கமால் அவர் மகன் –கபீரின் மகன். ”திருடனாக இரு என்று கூறுவது கபீர்தானா?அவர் சுய நினைவில்தான் உள்ளாரா?,நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அவர் புரியவில்லையோ?”என்று எண்ணினான்.
உடனே அவன் நகைப்பாய் அவரைப் பார்த்து ,”சரி, நீங்கள் அப்படி சொல்வதானால் போய்,நான் திருடுகிறேன்.ஆனால் நீங்களும் என்னுடன் வர வேண்டும்” என்றான்.
கபீர் திருடச்செல்வாரா?இப்போதாவது அவர் உணர்வார் என்று கமால் எண்ணினான்.
ஆனால் கபீர் எழுந்தார்,”சரி நானும் வருகிறேன்” என்றார்

கமாலும் விடுவதாக இல்லை.கடைசி நிமிஷத்திலாவது கபீர் சிரித்துக்கொண்டே”நான் விளையாட்டிற்கு கூறினேன்” என்று கூறுவான் என கமால் நினைத்தான.ஆனால் என்ன நடந்தது
கமால் ஒரு வீட்டினுள் புகுந்தான்.சொந்தக்காரரின் பொக்கிஷங்களில் சிறிது எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.கபீர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்.இதுதான் கடைசி நேரம்.இதற்குப் பிறகு காரியத்தை மாற்ற முடியாது.அப்போது கமால்,”என்ன செய்ய வேண்டும்?இதை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமா?”எனக் கேட்டான்.

அதற்கு கபீர்,”சரி,நீ திரும்பிப்போ, திருடிய வீட்டில் உள்ளவர்களை எழுப்பி சொல்லிவிட்டு வா,”என்று கூறினார்.

கமால்,” இது என்ன திருட்டு?,”என்று கேட்டான்.

அதற்கு கபீர்,”நாம் சொல்லிவிட்டாவது போக வேண்டும்.இல்லையெனில் அவர்கள் அனாவசியமாக வருத்தப்படுவார்கள்”என்றார்.
கமால் அவரிடம் ”அய்யோ!அப்பா!”அப்படியானால் அவர்கள் நம்மைத் திருடர்கள் என்று நினைப்பார்களே” என்று கூறினான்.

அதற்கு கபீர்,”அவர்கள் கூறுவது சரிதான்.ஆமாம் நாம் திருடர்கள் தானே!”என்று கூறினார்
.உடனே கமால்”அப்படியானால் மறுநாளே- உங்களது மரியாதையெல்லாம் பறந்து விடுமே,ஒருவரும் உங்களை மதிக்கமாட்டார்கள்”என்றான்

அதற்கு கபீர்,”அது சரிதான்!ஏன் அவர்கள் திருடர்களை மதிக்க வேண்டும்?” என்றார்

”திருடுவது தவறில்லை ,பாவமில்லை என்றால் மக்கள் அவமதிக்காமல் இருந்தால் திருட நினைக்கிறாய்.இல்லை ,மக்கள்
நீ திருடுவதால் என்னென்ன செய்வார்களோ அதயும் ஏற்றுக்கொள். ”

முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் வாழ்வின் உயிரோட்டமான வழி.எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது எந்த நிலையிலும் மறுத்தல் என்பது கிடையாது-ஓஷோ

Wednesday, May 07, 2008

வருமான வரி ;- ஓஷோ

நான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, நிர்வாகம் எனது சம்பளத்தை உயர்த்தித் தர விரும்பியது , நான் வேண்டாம் என மருத்துவிட்டேன். துனை-அரசரால் அதை நம்ப முடியவில்லை அவர் என்னைப் பார்த்துக் கேட்டார் “ ஏன் வேண்டாம் ? “

நான் “இப்பொழுது வாங்கும் சம்பளத்திற்க்கு மேல் உயர்த்தினால் நான் வருமான வரி கட்ட வேண்டியது வரும் , எனக்கு வரி விதித்தல் (taxation ) எனக்கு வெருப்பானது , அதற்க்கு பதில் நான் வருமானவரி உச்ச வரம்பிற்க்கு குறைவாகவே சம்பளம் பெற்றுக்கொள்கிறேன் “ என்றேன்
நான் அங்கு இருக்கும் வரை வருமானவரி உச்ச வரம்பைத்தாண்டி சம்பளம் பெறவில்லை.

நான் வருமானவரி கட்டியதேஇல்லை, உண்மையில் வ்ருமானமே இருந்ததில்லை . நான் இந்த உலகிற்க்கு கொடுத்துக்கொண்டே இருந்தேன் , இந்த உலகில் இருந்து எதையும் எடுத்துக்கொள்ளவில்லை, இது எனது வாழ்வின் வெளிப்பாடு , வருமானமல்ல , நான் கொடுத்ததெல்லாம் எனது இதயத்திலிருந்தும் இருப்பிலிருந்தும் (being ) தரப்பட்டது.

மலர்வதற்க்கு வரி விதித்தால் மலர்வது நின்றுவிடும்’பனிகளுக்கு வரிவிதித்தால் பொழிவது நின்றுவிடும். - osho
taken from
Glimpses of a Golden ChildhoodChapter #1

விழிப்பு

மாபெரும் ஞான குரு கிசானிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றும் ,கோசு என்பவரால் சமாதி நிலை அடைய முடியவில்லை.

கட்டுப்பாடுகள் பற்றிய ஏழு நாள் பயிற்சி முகாமிற்கு குரு ஏற்பாடு செய்திருந்தார் .கடைசியாகத் தனக்கு அந்த வாய்ப்பு அமையப் போகிறது என்று நினைத்தார் கோசு.

அப்போது அவர்,கோயிலின் உச்சிக்கு ஏறிச்சென்று,அங்கிருந்தபடி ஒரு சபதம் செய்தார்.

”என் கனவு நிறைவேற வேண்டும்.இல்லாவிட்டால்,என் உயிரற்ற உடல்தான் கீழே கிடக்கும்”,என்று கூவினார் அவர்.

உணவு,உறக்கமில்லாமல் அவர் அங்கே ஒரு வாரம் நின்று கொண்டிருந்தார். ”இவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு எதுவும் சித்திக்கவில்லையே! இது ஏன்?என் கர்ம பலன் தான் என்ன?”:என்று அங்கிருந்து கதற ஆரம்பித்தார்.

ஒன்றும் நிகழவில்லை.தாம் தோற்றுப்போனதை உண்ர்ந்த அவர்,கீழே எட்டிக் குதிக்க,ஒரு காலை மெதுவாகத் தூக்கினார்.

அந்தக் கணத்தில் அவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது.

ஆனந்தப் பெருக்கில் அவர் கீழே இறங்கி ஓடினார்.மழையில் நனைந்து கொண்டே குருவின் இல்லம் நோக்கி ஓடினார்.

குருவிடம் அவர் பேச வாய் திறப்பதற்குள்,குரு.’வாழ்க! நீ சாதித்து விட்டாய் ”என்று கூறினார்.


வெளிப்பிரதேசம் முடிந்து போன விஷயம்.அகம் உள்ளே இருக்கிறது.அந்த உலகை காண உங்கள் பார்வை மாறினால் போதும். - ஓஷோ

முல்லாவின் திருமணம்

முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

”ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் “

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் “ இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “

”பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது ” என்றார் முல்லா

பெண்ணின் தந்தை : ???????????

Tuesday, May 06, 2008

முல்லாவும் அவரது மனைவியும்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக்க்கொண்டிருந்தனர் , அதில் ஒரு சுகமளிப்பவர் ( faith healer ) உறை ஆற்றிக்கொண்டிருந்தார் அவர் “ உங்களின் உடம்பில் ஏதாவது பகுதியை குனப்படுத்தவேண்டும் எனில் , உங்களது ஓரு கையை பாதிக்கப்பட்ட உருப்பில் வைக்கவும் மற்றொரு கையை இந்த தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்தால் அந்த உருப்பு ஆண்டவனுடைய கிருபையினாலே குனப்படுத்தப்படும்” என்றார்

இதைக் கேட்ட அவரது மனைவி தன்னுடைய கையை தன்னுடைய இதயத்தில் வைத்தாள்.

முல்லாவோ அவசரமாக தனது கையை அடிவயிற்றை நோக்கி கொண்டு சென்றார்
இதை கவனித்த அவரது மனைவி “ முல்லா ! இவருக்கு பாதிக்கப்பட்ட உருப்பை மட்டுமே குனப்படுத்தவைக்க முடியும். இவரால் இறந்தவைகளை உயிர்த்தெழச்செய்யமுடியாது விட்டுவிடு” என்றாள்

Monday, April 28, 2008

யார் பிச்சைக்காரன்

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “

பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.


ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற தியானம் என்பதனை இழந்துவிடுகிறோம்

Osho :- yoga alpha and omega vlo-10

Thursday, April 17, 2008

காதில் ஒரு கானாப்பாட்டு

ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது.கடைசியாக அந்த சொற்பொழிவை சங்கராச்சாரியார் சீக்கிரமே முடிக்க வேண்டியது ஆயிற்று. அவர் அந்த பெண்மணியை தனியாக அழைத்து சொன்னார் “ முதலில் அவனுக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக்கொடு! அவனால் இன்று மிக த் தொந்திரவு ஆகிவிட்டது “ என அறிவுறுத்தினார்.உடனே அந்த ப் பெண்மணி “ என்ன பன்னறது சாமி நான் எங்கு போனாலும் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறான் ! அப்படி வந்தாலும் நம்ப நேரம் அவனால் உக்கார முடியாது ! இப்படி ஒன்னுக்கு போகனும் என்று ஆரம்பித்துவிடுகிறான் “என்றாள்சங்கராச்சாரியார் “ நீ அவனிடம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவன் பாட்டு பாடவிரும்புவதாகச் சொல்லச் சொல் அவ்வாறு சொன்னால் சபையில் இருக்கும மற்ற யாருக்கும் தெரியாது. அதனால் எந்த இடையூரும் இருக்காது , இப்படி சபையில் ஒன்னுக்கு போகனும் என்று அசிங்கமாக கேட்டு கொண்டிருக்க மாட்டான் “ என்றார்.சில மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார் அந்த ப் பெண்மணியின் வீட்டில் தங்க நேர்ந்தது அந்த பெண்மனி சங்க்ராச்சாரியிடம் “ சுவாமி ! தற்ச்செயலாக நான் ஒரு நெருங்கிய சொந்தக்காரரின் மறைவிற்க்கு செல்ல வேண்டியுள்ளது காலை எப்படியும் வந்து விடுவேன் , இந்த குழந்தை என்னிடமோ அல்லது அவனது அப்பவிடமோ மட்டும் தான் துங்கி பழக்கமுள்ளவன் , நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இவனை தங்கள் அருகிலே இன்று இரவு வைத்திருக்கமுடியுமா ? “ எனக் கேட்டார்சங்கராச்சாரியார் “ ஒரு பிரச்சனையும் இல்லை ! அவன் என்னிடமே இருக்கட்டும் ! “ என்றார்.நடு இரவில் பிரச்சனை வந்தது அந்த குழந்தை “ நான் பாட்டு பாடவேண்டும் “என தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.சங்கர் “ முட்டாள்! நடு இராத்திரியில் என்ன பாட்டு வேண்டி கிடக்கிறது ! என்னட தூக்கத்தை கெடுத்ததில்லாமல் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுவாய் , எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் , இப்ப பேசம ப் படு “ என்றார்குழந்தை “ முடியாது , நான் இப்பவே பாட வேண்டும் , பாட்டு அடக்கமுடியாமல் பீறீட்டுகொண்டு வேகமாக வருகிறது என்னால் ஒரு நிமிடம் கூட பொறுக்கமுடியாது ! “ என்றதுசங்கர் “ என்னட இது உன்னோட தொந்தரவாப் போச்சு ! இது தான் முதல் முறை நான் கேட்பது பாட்டு வேகமாக பீறீட்டு கொண்டு வருவதை ! அமாம் யாரோட பாட்டு ( யார் பாடிய பாட்டு என்ற அர்த்ததில் ) “ எனக் கேட்1டார்குழந்தை “ என்ன கேள்வி இது ! என்னோட சொந்த பாட்டு “ என்றதுசங்கர் “ அப்படியேன்றால் அது பகவான் பாடலாகத்தான் இருக்கும் , சரி எனது காதில் மெதுவாகப் பாடு ! மற்றவர்களின் உறக்கமும் கெடாது “எனச்சொன்னார்குழந்தை “ நீங்கள் சொல்வதால் நான் செய்கிறேன் !என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூடாது !” என்றதுசங்கர் “ பாட்டுமட்டும்தான பாடப்போகிறாய் ? வேறு ஏதாவது செய்யப் போகிறாய ? எனக் கேட்டார்குழந்தை “ சுத்தமான பாட்டு மட்டும் தான் “ என்றதுசங்கர் “அப்படியென்றால் உடணடியாக பாடிவிட்டு படுத்துவிடு “ என்றார்குழந்தை காதில் அழகாகப் பாடியது சங்கராச்சாரியார்க்கு அது பாட்டு என்று இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தது எது என்று புரிந்தது – ஓஷோTaken from : - Nansen ;- The Point of Departure , Chapter 9