Saturday, May 26, 2007

ஒரு பாதிரியாரின்……………………….?


வாழ்க்கையில் வெறுப்புற்ற வாலிபன் ஒருவன், ஒரு அடுக்கு மாடி கட்டடத்தின் நாற்ப்பதாவது மாடி விளிம்பில் நின்று கொன்டு கீழே குதிக்கத் தயாராக நின்றான். பக்கத்து வீட்டு மாடி அதற்க்கு கிழே பல அடி தூரத்திலேயே நின்று விடுகிறது. போலிஸ் அதன் வழியே சென்று பார்த்தும் அவனைக் காப்பாற்றுவதற்க்கு வழி தெரியவில்லை. கிழே கூடிய மக்கள் , அவனை கிழே இறங்குமாறு பலவாறு சொல்லிக் கெஞ்சினார்கள் . எதுவும் பிரயோசனப்படவில்லை.

பக்கத்திலிருந்த தேவாலயத்தின் பாதிரியார் இதை கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்தார்.

“ மகனே ! உன் தாயாரை நினைத்துப்பார், உன் தந்தையை நினைத்துப்பார், அவர்கள் எல்லாம் உன்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தார்கள் . அதையேல்லாம் நினைத்துப்பார்” என்று அன்பொழுகக் கெஞ்சினார்.

அதற்க்கு அவன், “ அவர்கள் ஒன்றும் என்னிடம் அன்பு செலுத்தவில்லை . நான் கிழே குதிக்கத்தான் போகிறேன் “ என்றான்.

மறுபடியும் அந்த பாதிரியார், “ இல்லை , வேண்டாம்.இப்பொழுது உன் காதலியையாவது நினைத்துப்பார் “ என்று கெஞ்சினார்.

“யாருமே என்னிடம் அன்பு செலுத்தவில்லை . நான் சாகத்தான் போகிறேன் “ என்றான், அவன்.

நீ மறுபடியும் எண்ணிக் கொள். ஜீசஸ், மேரி மற்றும் ஜோசப் உன்னை எவ்வளவு நேசித்தார்கள் தெரியுமா? அவர்களை நினைத்துப்பார் !” என்றார்.

“ஜீசஸ்?, மேரி? , ஜோசப் ? யார் இவர்கள் ?” என்றான்.

உடனே அவர் மிகவும் கோபமடைந்து, “கிழே குதியடா, யூத முண்டமே!” என்று கத்தினார்.


ஓஷோ கூறுகிறார்

“நீங்கள் அன்பைப் பற்றிப் பேசுவது மிகவும் மேலோட்டமானது. போலித்தனமானது“

1 comment: