Friday, June 22, 2007

மூச்சு திணறினாலும்.... இதமான சூட்டில்..

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.

குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோட் அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.

அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாண்ம் போட்டுவிட்ட்ச் சென்றுவிட்டது.

சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாண்த்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாண்த்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

ஓஷோ சொல்கிறார்

இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு: உன்னை சாண்த்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை

மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாண்த்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.

ஓஷோவின் குட்டிக் கதைகள்

Thursday, June 21, 2007

வாரத்தில் மூன்று முறை உடலுறவு !

ஒரு கணவனும் மனைவியும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றனர் . அவரது மனைவியின் இதயத்தை பரிசோதித்த மருத்துவர் “உங்களுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது ,அதனால் வாரத்தில் முன்று நாட்களேனும் தாங்கள் உடலுறவில் ஈடுபடுவது தங்களுக்கு நல்லது “என்றார்

அந்தப் பெண் மிகவும் வெட்க்கப்பட்டு பின் “இதை நீங்களே எனது கணவரிடம் சொல்லிவிடமுடியுமா ? “ எனக் கேட்டார்

உடனே மருத்துவர் வெளியில் வந்து அவளது கணவனை அழைத்து “உங்களுடைய மனைவிக்கு வாரத்தில் மூன்று நாட்களேனும் உடலுறவு அவசியம் “என்றார்.

அந்த கணவர் “ எந்தெந்த நாட்களில் டாக்டர் ? “ என்றார்

அதற்க்கு மருத்துவர் “ திங்கள் , புதன் மற்றும் வெள்ளி சரியாக இருக்கக்கூடும் “ எனச் சொன்னார்

அந்த அப்பாவி கணவரோ “ திங்கள் மற்றும் புதன் அவளை நான் இங்கு அழைத்து வரமுடியும் , ஆனால் வெள்ளிக்கிழமை அவள் தான் பேருந்தில் வந்துகொள்ள வேண்டும் “என்றார்

-ஓஷோ ( modified from osho times june 2007 )

வாரத்தில் மூன்று முறை உடலுறவு !

ஒரு கணவனும் மனைவியும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றனர் . அவரது மனைவியின் இதயத்தை பரிசோதித்த மருத்துவர் “உங்களுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது ,அதனால் வாரத்தில் முன்று நாட்களேனும் தாங்கள் உடலுறவில் ஈடுபடுவது தங்களுக்கு நல்லது “என்றார்

அந்தப் பெண் மிகவும் வெட்க்கப்பட்டு பின் “இதை நீங்களே எனது கணவரிடம் சொல்லிவிடமுடியுமா ? “ எனக் கேட்டார்

உடனே மருத்துவர் வெளியில் வந்து அவளது கணவனை அழைத்து “உங்களுடைய மனைவிக்கு வாரத்தில் மூன்று நாட்களேனும் உடலுறவு அவசியம் “என்றார்.

அந்த கணவர் “ எந்தெந்த நாட்களில் டாக்டர் ? “ என்றார்

அதற்க்கு மருத்துவர் “ திங்கள் , புதன் மற்றும் வெள்ளி சரியாக இருக்கக்கூடும் “ எனச் சொன்னார்

அந்த அப்பாவி கணவரோ “ திங்கள் மற்றும் புதன் அவளை நான் இங்கு அழைத்து வரமுடியும் , ஆனால் வெள்ளிக்கிழமை அவள் தான் பேருந்தில் வந்துகொள்ள வேண்டும் “என்றார்

-ஓஷோ ( modified from osho times june 2007 )

திருடும் கலை ….. தொடர்ச்சி

மகன் “ எங்கிருந்து எனக்கு தொன்றியது என்பது தெரியவில்லை ! ஒரு உள்ளுணர்வு என்னை இயக்கியது ! கண்டிப்பாக அது மனதில் இருந்து வெளிப்படவில்லை! நான் அதன்படியே நடக்கலானேன் . தீடிரேன நான் பூனை போல் உள்ளிருந்து சத்தமிட்டேன் அதை கேட்டு பீரோ வின் கதவை யாரோ திறப்பது தெரிந்தது திறக்கும் வரை காத்திருந்தேன் ஒரு பூனையை எதிர்பார்த்து ஒரு பெண் மிகவும் அலட்ச்சியமாக கையில் மெழுகுவர்த்தியுடன் நின்றிருந்தாள். முதல் வேலையாக அதை ஊதி அனைத்துவிட்டு நான் ஓடலானேன் அவர்கள் சுதாரித்துக் கொண்டு என்னை துரத்தினார்கள் , என்னை விடாமல் துரத்தினார்கள் , நானும் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினேன் இருப்பினும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது , வழியில் ஒரு கிணறு தென் பட்டது, அதன் அருகில் ஒரு பெரிய கல்லும் இருந்தது , அதை சாதாரணமாக தூக்கமுடியாது இருப்பினும் என்னால் எப்படி அந்த் கணத்தில் அதை தூக்கமுடிந்தது என்பதனை நான் அறியேன் அதை தூக்கி அந்த கிணற்றில் வீசினேன் . என்னை துரத்தியவர்கள் நான் கிணற்றில் விழுந்துவிட்டதாக நினைத்திருக்ககூடும் . அவர்கள் கிணற்றடியிலே நின்று விட்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நான் சுலபமாக தப்பிக்க முடிந்தது” என்றான்.

தந்தை “ இது தான் நான் உனக்கு கற்பிக்கிருந்த பாடம் , உள்ளுணர்வுடன் எவ்வாறு செயல் படுவது எண்பதை பற்றித்தான். இனி நீ தனியாக நாளை முதல் செல்லலாம் “ என்றார்

ஓஷோ :” உனது வாழ்க்கை ஆபத்தில் இருக்கும் போது உன்னுடைய முழு சக்தியையும் உன்னால் உபயோகிக்க முடியும் , அப்போது நீ மேலோட்டமாக வாழ்வதில்லை “

திருடும் கலை I

ஜப்பானில் ஒரு மிகத் திறமையான திருடர் வாழ்ந்து வந்தார், அவரை பற்றி அந்த நாட்டில் உள்ள அனைவரும் அறிந்திருந்தனர் – ஆனால் ஒரு முறை கூட அவர் பிடிபட்டதில்லை – இதற்க்கும் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் தான் தான் திருடியது என்பதை உணர்த்த தடயங்களையும் விட்டு வருவார் , ஆயினும் அவரை ஒரு முறை கூட பிடிக்கமுடியவில்லை. அரசனின் அரண்மனை கருவூலம் உட்பட அவர் திருடியது அனைத்தும் மிக புகழ் பெற்ற இடங்களே – சாதாரண இடங்களில் அவர் திருடுவதில்லை , எனவே அவர் ஒரு மிகவும் புகழ் பெற்ற திருடனாகவே வாழ்ந்து வந்தார்.

ஆனால் அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது . ஒரு நாள் அவரது வாலிப வயது மகன் “ அப்பா! தங்களுக்கு மிகவும் வயதாகி விட்டது அதனால் நீங்கள் தங்களது இந்த் திருடும் கலையை எனக்கு சொல்லித்தாருங்கள் , நானும் இந்த கலையை கற்றுக் கொள்கிறேன்” என்றான்.

அதற்க்கு அந்த திருடர் “ இன்று இரவே என்னுடன் வா! நீ தெரிந்து கொள்வாய், நான் இதை உனக்கு சொல்லித் தர இயலாது. ஆனால் நீ அறிவுள்ளவனாக இருந்தால் நீ இந்த கலையை கற்றுக் கொள்வாய் – இது சொல்லிதந்து கற்றுக்கொள்ள கூடிய கலையல்ல , எனவே இன்று இரவு என்னுடன் வா “ என்றார்.

இரவு வந்தது,அவர்கள் இருவரும் ஒரு மாளிகையை தேர்ந்தெடுத்து திருட சென்றனர் . மகன் நடு நடுங்கிய வாறே தந்தையுடன் சென்றான் . அவனது தந்தையோ அந்த வயதிலும் எந்த வித நடுக்கமும் இல்லாமல் கதவை சத்தமில்லாமல் உடைத்தார், அதன் வழியே இருட்டிலும் ஏதோ அவருடைய வீட்டில் நடப்பது போல் மிகச்சாதாரணமாக நுழைந்தார் எந்த பொருளின் மீதும் இடிக்காமல், சத்தமெழுப்பாமல் பூனை போல் நடந்து மிகப் பெரிய ஒரு பீரோவை அடைந்தார் , அதை அடைந்ததும் தனது மகனை கூப்பிட்டு “ உள்ளே என்ன திருடலாம் எனபதனை பார்த்து வா”என்று ச் சொன்னார் மகனும் நடுங்கிய வாரே அதனுள் சென்றான். அவன் உள் சென்றதும் அந்த திருடர் வெளிப்புறமாக அதை பூட்டிவிட்டு “திருடன்! திருடன் !எல்லோரும் எழுந்திருங்கள் !“ என்று குரல் கொடுத்தவாரே அந்த இடத்தை விட்டு தப்பி விட்டார்.

மகனின் நிலையோ மிகவும் சிக்கலாக இருந்தது என்ன தந்தை இவர் தொழில் கற்று தா என்று கேட்டதற்க்கு இப்படி என்னை மாட்டிவிட்டாறே , வெளியில் வேறு பூட்டிவிட்டதால் எப்படி தப்பிக்க முடியும் என நினைக்கலானான். வீட்டில் உள்ள அனைவரும் வேறு விழித்து விட்டனர் அனைவரும் திருடன் எங்கே என தேடிக்கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து எப்படியோ தப்பித்து தனது வீட்டிற்க்கு சென்றான் அங்கு அவனது தந்தை எந்த வித கவலையும் இன்றி குரட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார் . மகன் தனது தந்தையை பிடித்து உழுக்கி எழுப்பி “ என்ன முட்டாள்தனமான வேலையை செய்து விட்டீர்கள் இதுவா தாங்கள் கற்று தரும் இலட்சனம் “ எனக் கேட்டான்.

அவன் தந்தையோ எந்தவித சலனுமும் இன்றி “ ஆக தப்பித்து விட்டாய் ! அப்படியானால் உனக்கு அந்த கலை வந்து விட்டது ! இனி அதைப் பற்றிய பேச்சு வேண்டாம் போய் படுத்துறங்கு , எனக்கு தூக்கம் வருகிறது “என்றார்.

மகன் “ எனக்கு எப்படி தப்பித்தேன் என்பதனை சொல்லா விட்டால் தூக்கம் வராது , அதனால் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் “ என்றான்

தந்தை “ உனக்கு சொல்ல வேண்டும் என்றால் சொல் ! எனக்கு அது அவசியமில்லை ! என்னைப் பொருத்தவரை உனக்கு திருடர்களுக்கு தேவையான விழிப்புணர்வு வந்து விட்டது(உள்ளுணர்வு ) , அதற்க்கு நீ தப்பி வந்ததே சாட்சி , அதற்க்காக நான் மகிழ்கிறேன்! இப்போது சொல் எப்படி தப்பினாய் ? “ ( எப்படி தப்பினான் என்பதை தேவைப்பட்டால் பிறகு எழுதுகிறேன்)

ஒருவகையில் தியானமும் திருட்டைப் போலதான்

ஓஷோ (: taken from – Be still and know chapter #9)

Wednesday, June 20, 2007

பிரார்த்தணை , தியானம் மற்றும் பகுத்தறிவு எது மிகவும் அபத்தம் ?

பிரார்த்தணை பற்றிய எனது பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களின் தொகுப்பு

Voice on Wings said...
உங்களது இடுகைகளைப் படித்து வருகிறேன். ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்ற அளவில் உங்களுக்கு வெற்றிதான். குறிப்பாக, மதங்கள் / புனிதங்கள் / (அரசியல் கட்சி போன்ற) நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கல்லெறிவது (அல்லது உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் 'பாட்டு பாடுவது :)) என்ற அளவில் முழு உடன்பாடு. ஆனால், நீங்களும் உங்கள் அமைப்பும் மீண்டும் தியானம், குண்டலினி, ஆள் சேர்ப்பு என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் அனைத்து குணாதிசயங்களுடன் செயல்படுவதைப் பார்க்கும்போது, உங்கள் அமைப்புக்கும் சில கற்கள் / பாடல்களைப் பெறுவதற்கான தகுதி வந்து விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தியானம், chakra breathing இவற்றையெல்லாம் செய்யாமலே மனிதனால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்கிறேன்.
11:25:00 AM
ஆனந்த் நிருப் said...
இந்த பதிவகள் ஆள் சேர்ப்பு வேலைகளுக்கல்ல ! அதன் அவசியம் எனக்கிறுப்பதில்லை! இந்த பதிவுகள் தேவை உள்ளவர்களுக்கு பயன் அளித்தால் அதுவே போதும், சில பேருக்கு விஷய ஞானம் போதுமானது, அனுபவம்( தியான ) தேடும் சிலருக்கு மற்ற பதிவுகள் உபயோகபடட்டும் , எனக்குத் தெரிந்து ஓஷோவின் தியான முகாம் மற்றும் தியானம் எங்கு நடைபெருகிறது எனும் தகவல் பலருக்கு உபயோகமாக உள்ளது அதனால் அதன் செய்திகளை இடுகிறேன். ஓஷோவில் அமைப்பு (it is not a religious organaisation )என்று எதுவும் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு தனி மனிதன் மட்டுமே! மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு தியானம் என்பது இல்லாமலே தாங்கள் உண்மையான மகிழ்ச்சியொடு இருந்தால் ( இது இருட்டில் செல்பவன் தனக்கு பயம் இல்லை என்று சொல்வது போல் அல்லாமல் இருந்தால் )
8:05:00 PM
Voice on Wings said...
உங்களைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. (அவ்வாறு நினைத்து விட்டது போலத் தெரிவதால் இதைத் தெளிவுப் படுத்துகிறேன்.)உலக நடப்புகளைப் பற்றி பகுத்தறிவுடன் அணுகும் அதே நேரத்தில், நீங்கள் சாடும் 'பிரார்த்தனை'யை விட அபத்தமான செயல்களைப் பரிந்துரைப்பது போலிருந்ததால், எனது நேர்மையான கருத்துகளை வெளியிடத் தோன்றியது. எனது மகிழ்ச்சியின் நிலவரம் குறித்து நான் எதுவும் கூறவில்லை, அதற்கு இங்கு தேவையிருப்பதாகவும் நினைக்கவில்லை. தியானம், சுழற்சி (whirling), சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுவதால் இல்லாத மகிழ்ச்சியை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தை நான் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன், அவ்வளவே.
8:37:00 PM
ஆனந்த் நிருப் said...
voice on wings அவர்களுக்கு , நான் புன்படவும் இல்லை, என்னை பொருத்தவரை பகுத்தறிவு என்பது சோதனைக்கு உட்பட்டது , எல்லாவிதமான அறவியல் கண்டுபிடிப்புகளுமே சோதனை மூலமாகத்தான் உறுதிசெய்யப்பட்டது என்பது தாங்கள் அறியாததல்ல - இந்த ஓஷோவின் முறைகள் - தாங்கள் சோதித்து அறிவதற்க்கு உட்பட்டது - அதற்க்கு எந்த வித நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியது இல்லை- சோதித்து அறியாமல் கேள்விக்கு உட்படுத்த படுவது சர்க்கரை இனிக்கும்( அதை சுவைக்காமலே ) என்பதை கேள்விக்கு உட்படுத்துவதைப் போன்றது என்பது எனது தாழ்மையான கருத்து! இதை நியாயமான எந்த பகுத்தறிவு வாதியும் செய்யமாட்டார். ஒவ்வொறு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது அறிவியலின் அடிப்படை கருத்தல்லவா? அப்படியானல் நீங்கள் அதை கேள்விக்கு உட்படுத்துவீர்களா ? இந்தச் சுழற்ச்சி/ சக்ரா பிரித்திங் போன்ற விஷயங்களில் நான் கடவுள் உனக்கு அது தருவார் இது தருவார் என்று நான் கூறியிருந்த்தால் அது அபத்தம் , நான் நீங்கள் செய்யும் இந்த செயல் முறை தியானங்கள் தங்களுக்குள் அமைதி ஏற்படுத்தும் என்று தானே சொன்னேன் இது எவ்வகையில் அபத்தம்! பகுத்தறிவு என்ற போர்வைவில் யாரோ சொன்ன கருத்தை மூட நம்பிக்கையாய் பின்பற்றுவதை விட இது அபத்தமா ?( அவர்கள் கடவுள் என்ற உருவமற்றதை நம்புகிறார்கள் - நீங்கள் ஒரு மறைந்த பெரியவரை நம்புகிறீர்கள் எனக்கு விதயாசம் தெரியவில்லை - உங்களுடைய சொந்த அறிவின் மூலம் நீங்கள் எதை பகுத்தறிந்தீர்கள் எனபதே எனது கேள்வி ) நான் யாரையும் புண்படுத்தவில்லை! எனக்கு மகிழ்ச்சி தந்தது என்பதை எப்படி கேள்விக்கு உட்படுத்தமுடியும்! இது தங்களுக்கே அபத்தமாக இல்லையா ? தங்களுக்கு மாறுதல் தருகிறதா என்பதை பகுத்தறிய! நீந்கள்தான் சோதித்து பார்க்கவேண்டும் அதற்க்கான முறைகள் வேண்டுமானால் என்னால் பதிய முடியும்
10:18:00 PM
ஆனந்த் நிருப் said...
மிகவும் நன்றி! இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டும் கேள்வியில்லாமல் ஞானம் பிறப்பதில்லை



ஞாயமான (தனிமனித தாக்குதல் அற்ற ) கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது - இது எனக்கும் படிப்பவர்களுக்கும் இன்னும் ஒரு விளக்கமாகவும் இருக்கலாம்

ஒரு தேவதயை கண்டேன்!

ஒரு தேவதை காலையில் காட்டு வழியே பறந்து கொண்டிருந்த போது போலக்கு குள்ளன் ஒருவனைச் சந்தித்தது.

அது அவனை நோக்கி, “ குள்ளனே, நான் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். உண்க்கு என்ன தேவையோ கேள்; உன் தேவை பூர்த்தியாகப்படும்” என்றது

போலக்கு குள்ளன் தன் தலையை சொறிந்து கொண்டான். அது அவனை சிந்திக்கத் தூண்டியது, ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு அவன் கூறினான் :
“ அப்படி யென்றால் எனக்கு ஒரு கேன் நிறைய குளிர்ந்த பீர் வேண்டும்!”

ஒரு டேங்க் நிறைய குளிர்ந்த பீர் அவன் எதிரே வந்தது

தேவதை கூறியது:

“இந்த டேங்க் பீர் வசீகரிக்கப்படுததப் பட்டது. எப்போதுமே காலியாகாது. இதிலிருந்து பீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும், நீ விரும்பும் வரை இதிலிருந்து குடிக்கலாம், இதனால் எந்தவித நொயும் உன்னை அணுகாது, கொஞ்சம் இதிலிருந்து ருசித்தாலும் போதும்; இதன் சுவயை நீ மறக்க மாட்டாய் , உன்னுடைய தாகத்தை இது தணித்துவிடும். மேலும் இதை நீ பருகிக் கொண்டே இருக்கப் போகிறாய் !”

அந்தக் குள்ளன் மிகவும் மகிழ்வுற்றான். சிறிதளவு பீர் எடுத்துப் பருகினான்.தன் நாவை கொண்டு உதடுகளை ருசி பார்த்தான். அவனுக்கு மிக மிக திருப்தி ஏற்பட்டது.

தேவதை அவனைப் பார்த்துச் சொன்னது;

“ இரண்டு வரத்தைக் கொடுத்தேன் , ஒன்றை பெற்றுக் கொண்டாய்; மற்றொன்ரைக் கேள்!”

அந்த குள்ளன் மிகவும் மகிழ்ந்தவனாய் “ அப்படியா?..... இன்னொன்று!... அப்படியென்றால் எனக்கு மற்றோரு பீர் டேங்க் வேண்டும் ! இதே போல! “

ஓஷோ கூறுகிறார்

பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவுப் பூர்வமாகச் செயல் படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான்.“

ஓஷோவின் குட்டிகதைகள்

Monday, June 18, 2007

நான் ஒரு கெட்ட பெண்மணி

ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள் . அதற்க்காக அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, “ நான் ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.
இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள். இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்? அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று “ இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளைகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்த க் கிளி கூறியது . “ நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ,” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “ என்று கூறியது . அவை ஒரு பெண்னுக்காகப் பிராத்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

“ யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு. அவர்கள் பண்த்துக்காக, பெண்ணுக்காக, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு , அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது, “

-ஓஷோ வின் குட்டி கதைகள்

கிறித்தவ மதமும் , சூனியகாரிகளும்(witch women)

கேள்வி :“Witch woman சூனியகாரி “என்பவள் யார் ? சூனியக்காரியும் நீங்கள் சொல்லும். “ புதிய மனைதரும்” ஒன்றெதானா ?

ஓஷோ :“சூனியக்காரி (witch woman )“என்பது மிகவும் மரியாதிக்குரிய ஒர் சொல் அதைக் கிறிஸ்தவம் கேவலப்பாடுத்தியிருக்கிறது. அதன் மூல அர்த்தம் “ஞானப்பெண்( wise woman ) என்பதே. ஆனால் கிறிஸ்தவ மதம் அதற்க்கு மிகவும் திரிபான அர்த்தத்தைக் கொடுத்தது. ஏனேன்றால் கிறிஸ்த்தவ மதத்தின்படி , சாத்தான் முதலில் ஏவாளின் மனத்தைக் கெடுத்தான் அன்றிலிருந்து அவன் பெண்னுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து வருகிறான் . ஆகவே அவள் ஞானமுள்ளவளாக இருக்க முடியாது . ஏனேன்றால் அவளுடைய ஞானம் கடவுளிடமிருந்து வரவில்லை . சாத்தானிடமிருந்தே வருகிறது . இந்த அர்த்தத்தை அவர்கள் ஏற்றியதுமே பெண்ணை அதிகமாக சபிப்பதற்க்கான வழி செய்ததாகிறது. உண்மையில் ஞானமுள்ள பெண்கள் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக சித்தர் மரபில்/ ரசவாத மரபில் இருந்தார்கள்-இது மறைஞான மரபின் கிளைகளில் ஒன்றாகும்.

கிறித்தவ பாதிரிகளின் கண்களுக்கு இந்த ரசவாத பெண்கள் அவர்களின் போட்டியாளர்களாக தெரிந்தார்கள் . எனவே அவர்களை ஒழித்துக்கட்டவேண்டியதானது . அவர்களை அழிக்க ஒரு நியாயப்பாடு தேட வேண்டியதாயிற்று; அவர்களின் நியாயவாதம் இதுதான் ; அந்த பெண்கள் சாத்தானுடன் உடலுறவு கொள்கிறார்கள். ஒரு சிறப்பு நீதிமன்றத்தை போப் நியமித்தார். “மகா புலன் விசாரனை “ ஆரம்பமானது. இதன் ஒரெ வேலை எல்லா சூனியக்காரிகளையும் கண்டுபிடித்து உயிரோடு கொளுத்துவதுதான் . அவ்ர்களை கண்டுபிடிக்க பயன்படுத்தமுறை இதுதான்- எந்த ஆண் வேண்டுமானாலும் குறிப்பிட்ட பெண் சூனியாக்காரியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதுமானது- அவளை கைது செய்துவிடலாம்.

அவ்ளை சித்திரவதை செய்ய சில முறைகளை புதிதாக கண்டுபிடித்தார்கள். அவை மிகவும் அசிங்கமாக இருந்த்தது ; அதை சகித்து கொள்வது பெண்ணால் இயலாத அளவுக்கு கொடுமையாக இருந்தது . சாத்தானுடன் உடலுறவு கொண்டதாக அவள் அறிக்கையிடாதவரை வாரக்கணக்கில் சித்திரவதை நீடித்தது. அதை ஒத்துக்கொண்டபின் அவள் மகா புலன் விசாரணை மன்றத்தின் முன்னிலையில் அதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கர்தினால்களும் பேராயர்களும் உயர் அந்தஸ்துள்ள பாதிரிகளும் அம்மன்றத்தில் உறுப்பினர்களாகி இருந்தார்கள் . அவர்கள் இந்த பெண்களை சாத்தானுடன் தாங்கள் உடலுறவு கொண்டதாக அறிக்கைவிடும்படி பலவந்தப்படுத்தினார்கள் . அதுமட்டுமல்ல , சாத்தானின் ( ஆண்) குறியானது கவைபோல் இரு கூர் உள்ளதாக உள்ளது ; எனவே ஒரே சமயத்தில் பெண்ணுள் இருபுறமிருந்தும் அதனல் ஊடுருவ முடிந்தது என்றும் சபைமுன் சொல்லும்படி அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள், இந்த பெண்களை உயிருடன் கொளுத்த நீதிமன்றத்துக்கு இதுவே போதுமானதாக இருந்தது. இவ்வாறு முற்றிலும் குற்றமற்ற பெண்கள் ஆயிரக்கண்க்கில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

கிறிஸ்தவ சாமியார்களைவிட அவர்கள் அதிக ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள். இதுதான் அடிப்படையான காரண்ம் . ஆகவே அவர்களை முற்றிலுமாக இல்லாமலாக்க வேண்டியிருந்தது.அப்போதுதான் எந்த போட்டியாளரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

வருங்கால மனிதர் சூனியக்காரராக இருப்பார் என்று சொல்லமாட்டேன். பாதிரி எப்பட்ய் கடந்த காலத்தின் ஒரு பகுதியோ அப்படித்தான் சூனியகாரியும், புதிய மனிதருக்கும் இயற்க்கைக்கும் இடையில் மத்தியஸ்தராக பூசாரிகள்/ சாமியார்கள்- ஆண்களிலும் சரி- பெண்களிலும் சரி - இருக்கமாட்டார்கள். இயற்க்கையுடம் ஆன அவரது தொடர்பு உடனடியானதும் நேரடியானதும் ஆகவே இருக்கும் . வருங்காலத்தில் எந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதத்துக்கும் இடமில்லை.

-பெண் விடுதலை; ஒரு புதிய தரிசனம்

Saturday, June 16, 2007

கடவுளும் சாத்தானும் !

ஒரு வயதான் மனிதர் தன் மரணப் படுக்கையில் முதலில் கடவுளைத் தொழ ஆரம்பித்தார். அவர் பெயரை அடக்கடி சொன்னார்.பிறகு திடீரென்று மாற்றி சாத்தானின் பெயரைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவ்ருடைய குடும்பத்தினர் இது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

" என்ன உங்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதா? வாழ்வின் கடைசி நேரத்தில் நீங்கள் சாத்தானின் பெயரை சொல்லுகிறீர்களே ? " என்றார்கள்.

"நான் எந்தவித அபாயத்தையும் இதற்க்கு பிறகு சந்திக்க விரும்பவில்லை . நான் இறந்த பிறகு எங்கே செல்வேன் , யாரைச் சந்திப்ப்பேன் என்பது யாருக்கு தெரியும் ? சாத்தானின் பெயரை சொல்லுவதால் எனக்கு ஒன்றும் கஷ்டம் ஏற்படப் போவதில்லை. இருவரில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பெயர்களை உச்சரித்ததால், அவர்கள் எனக்கு நன்மை செய்யக்கூடும். அப்படி இருவரையும் சந்திக்க இயலவில்லை என்றாலும் ஒன்றும் கஷ்டமில்லை. அப்படி இருவரையும் ஒன்று சேர சந்திக்க நேர்ந்த்தாலும் கவலை இல்லை .

நான் எல்லா சாத்தியக் கூறுகளையும் எண்ணித்தான் இப்பொழுது செயல்படுகிறேன்!". என்றார்


ஓஷோ கூறுகிறார் : " கடவுள் மற்றும் சாத்தான், நன்மை, தீமை என்ற இரண்டு வேறுபாடுகளால் மனிதன் நசுக்கப்படுகிறான். இப்படி மனிதன் நசுக்கப்படாமலும் அடிமையாக இருக்காமலும் தன் சுதந்திரத் துடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் .'

-ஓஷோவின் ஞானக்கதைகள்

Friday, June 15, 2007

சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?!

ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது.

கடைசியாக அந்த சொற்பொழிவை சங்கராச்சாரியார் சீக்கிரமே முடிக்க வேண்டியது ஆயிற்று. அவர் அந்த பெண்மணியை தனியாக அழைத்து சொன்னார் “ முதலில் அவனுக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக்கொடு! அவனால் இன்று மிக த் தொந்திரவு ஆகிவிட்டது “ என அறிவுறுத்தினார்.

உடனே அந்த ப் பெண்மணி “ என்ன பன்னறது சாமி நான் எங்கு போனாலும் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறான் ! அப்படி வந்தாலும் நம்ப நேரம் அவனால் உக்கார முடியாது ! இப்படி ஒன்னுக்கு போகனும் என்று ஆரம்பித்துவிடுகிறான் “என்றாள்

சங்கராச்சாரியார் “ நீ அவனிடம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவன் பாட்டு பாடவிரும்புவதாகச் சொல்லச் சொல் அவ்வாறு சொன்னால் சபையில் இருக்கும மற்ற யாருக்கும் தெரியாது. அதனால் எந்த இடையூரும் இருக்காது , இப்படி சபையில் ஒன்னுக்கு போகனும் என்று அசிங்கமாக கேட்டு கொண்டிருக்க மாட்டான் “ என்றார்.

சில மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார் அந்த ப் பெண்மணியின் வீட்டில் தங்க நேர்ந்தது அந்த பெண்மனி சங்க்ராச்சாரியிடம் “ சுவாமி ! தற்ச்செயலாக நான் ஒரு நெருங்கிய சொந்தக்காரரின் மறைவிற்க்கு செல்ல வேண்டியுள்ளது காலை எப்படியும் வந்து விடுவேன் , இந்த குழந்தை என்னிடமோ அல்லது அவனது அப்பவிடமோ மட்டும் தான் துங்கி பழக்கமுள்ளவன் , நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இவனை தங்கள் அருகிலே இன்று இரவு வைத்திருக்கமுடியுமா ? “ எனக் கேட்டார்

சங்கராச்சாரியார் “ ஒரு பிரச்சனையும் இல்லை ! அவன் என்னிடமே இருக்கட்டும் ! “ என்றார்.

நடு இரவில் பிரச்சனை வந்தது அந்த குழந்தை “ நான் பாட்டு பாடவேண்டும் “என தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

சங்கர் “ முட்டாள்! நடு இராத்திரியில் என்ன பாட்டு வேண்டி கிடக்கிறது ! என்னட தூக்கத்தை கெடுத்ததில்லாமல் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுவாய் , எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் , இப்ப பேசம ப் படு “ என்றார்

குழந்தை “ முடியாது , நான் இப்பவே பாட வேண்டும் , பாட்டு அடக்கமுடியாமல் பீறீட்டுகொண்டு வேகமாக வருகிறது என்னால் ஒரு நிமிடம் கூட பொறுக்கமுடியாது ! “ என்றது

சங்கர் “ என்னட இது உன்னோட தொந்தரவாப் போச்சு ! இது தான் முதல் முறை நான் கேட்பது பாட்டு வேகமாக பீறீட்டு கொண்டு வருவதை ! அமாம் யாரோட பாட்டு ( யார் பாடிய பாட்டு என்ற அர்த்ததில் ) “ எனக் கேட்1டார்

குழந்தை “ என்ன கேள்வி இது ! என்னோட சொந்த பாட்டு “ என்றது

சங்கர் “ அப்படியேன்றால் அது பகவான் பாடலாகத்தான் இருக்கும் , சரி எனது காதில் மெதுவாகப் பாடு ! மற்றவர்களின் உறக்கமும் கெடாது “எனச்சொன்னார்

குழந்தை “ நீங்கள் சொல்வதால் நான் செய்கிறேன் !என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூடாது !” என்றது

சங்கர் “ பாட்டுமட்டும்தான பாடப்போகிறாய் ? வேறு ஏதாவது செய்யப் போகிறாய ? எனக் கேட்டார்

குழந்தை “ சுத்தமான பாட்டு மட்டும் தான் “ என்றது

சங்கர் “அப்படியென்றால் உடணடியாக பாடிவிட்டு படுத்துவிடு “ என்றார்

குழந்தை காதில் அழகாகப் பாடியது சங்கராச்சாரியார்க்கு அது பாட்டு என்று இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தது எது என்று புரிந்தது – ஓஷோ

Taken from : - Nansen ;- The Point of Departure , Chapter 9

Thursday, June 14, 2007

இராமன் தேடிய பொன்மான்!


மாயப் பொன்மான்

மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது .இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை ; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது.

சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். இராமன் காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறார்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறார். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது( அது மனதில் தோன்றும் ஆசை ). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும் .” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார்.

இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்சியாகும் (witness ). சீதைதான் உங்கள் மனம்(mind ). சீதை பிடிவாதம் பிடித்தாள். அந்த பொன்மான் எனக்கு வேண்டும்,. பிடித்து தாருங்கள் . இராமனும் மானின் பின்னால் ஓடினார். சிக்கலில் மாட்டிக்கொண்டார். அமைதியை இழந்தார்

இப்படித்தான் நம் மனம் ஆசையை துரத்தி செல்லும் போது , அமைதி இழக்கப்படுகிறது.

நீங்கள் இல்லாத ஒன்றைத் தேடிச் செல்லும்போது உங்களிடம் இருக்கும் ஒன்றை தொலைத்துவிடுகிறீர்கள்
.- ஓஷோ

( Taken from : Showering without clouds )

Wednesday, June 13, 2007

முல்லாவும் அவரது மனைவியும்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நெடுஞ்சாலையில் சண்டையிட்டு கொண்டே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சில பன்றிகள் சென்றன அதை ப் பார்த்த முல்லா தன்து மனைவியை கடுப்படிக்க " உன்னுடைய சொந்தங்கள் செல்கின்றன பார் " என்று மனைவியை பார்த்து சொன்னார் அதற்க்கு அவர் மனைவி " ஆம் , எனது மாமனாரும் மாமியாரும் செல்கின்றார்கள்" என்றாள்

விண்மீன்கள் பளிச்சிடும் இரவில்….. காதலியுடன்

முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.

ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் : “ கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம் ? “

டாக்டர் ஆலோசனை கூறினார் : “ ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் ! “

முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.

முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் “ அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! “ என்று கூறினார்.

அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை ; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை . “ நஸ்ருதீன் , எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.

முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.


ஓஷோ : எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது

ஓஷோ தமிழ் மாத இதழ் : மார்ச் 2006 ( வெளியிடு : ஓஷோ மெடிட்டேசன் ரிஸார்ட், திருச்சி)

Tuesday, June 12, 2007

ஹிம்.. எத்தனை ஆண்டுகள் நாம் செங்கல்லை தேய்த்துக் கொண்டிருப்போமோ?

ஒரு ஜென் குருவைப்பற்றிய கதை

ஒரு சீடர் இருபது வருடங்களாக தொடர்ந்து மிக கடுமையாக தியானம் செய்து கொண்டு இருந்தார், அவர் அனைத்து முறைகளையும் முயற்சி செய்தார் ( யோகா முத்திரைகள் மற்றும் அனைத்து வகையான தியான முறைகள் போன்றன ) அதாவது இனி செய்ய ஒன்னுமே இல்லை என்ற அளவுக்கு மிக மிக கடுமையாக தன்னை வருத்தி தியானம் செய்து கொண்டிருந்தார்.

அவ்வாரு ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமைதியாக ( வெளிப்புறதோற்றத்திலாவது ) புத்தரை போல் ஆடாமல் அசையாமல் உக்காந்து கொண்டிருந்தார். அதை பார்த்தால் இவர் என்ன சிலையாகி விட்டறோ? என்று என்னுமளவுக்கு அசைவின்றி அமர்ந்திருந்தார் . அப்போது அவருடைய ஜென் குரு ஒரு செங்கல்லை எடுத்துக்கொண்டு அவர்முன் அமர்ந்து அதனை சத்தம் வருமாறு நிலத்தில் தேய்க்க ஆரம்பித்தார்..

அவ்வாறு தேய்த்தது மிகக் கொடிய சத்ததை உருவாக்கியது.. சீடர் பொருத்து பார்த்தார் குரு நிருத்தியபாடாய் தெரியவில்லை . சீடரின் பற்க்கள் எல்லாம் கூச ஆரம்பித்தது கடைசியாக அவர் அந்த குருவை பார்த்து “ நிருத்துங்கள் ! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? “ எனக் கேட்டார்

உடனே குரு அந்த சீடரை பார்த்து “ கடந்த 20 வருடங்களாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? தியானம் என்ற பெயரில் அதே போல் நானும் இந்த செங்கல்லை முகம் பார்க்கும் கண்ணாடி ஆக்க முயற்ச்சிக்கிறேன் என்றார் “

சீடர் “ என்ன முட்டாள் தனமான பேச்சு இது , நீங்கள் காலங் காலமாக இதை தேய்த்துக்கொண்டு இருந்தாலும் இது கண்ணாடி ஆகாது “ என்றார்

“ஆம்! அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் ! கடந்த இருபது வருடங்களாக நீ தியானம் என்ற பெயரில் உனது மனதை அலங்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாய் ! மனதை மாற்றியமைப்பது தியானம் அல்ல ! மனம் அற்று இருப்பதே தியானம்- மனதை கடப்பதே தியானம் , இது நல்லது இது கெட்டது என்று பிரித்து பார்க்கும் இந்த மனதை முற்றிலும் விட்டுவிடுவதே தியானம் “ என்றவாறே தான் தேய்த்துக் கொண்டிருந்த செங்கல்லை தூக்கி எறிந்தார்

அந்த சீடரிடமும் ஒரு ஏதோ ஒன்று தொலைந்து போனது- ஓஷோ

:- the Fish in The Sea is not Thirsty, Chapter 10

(ஹிம்.. எத்தனை ஆண்டுகள் நாம் செங்கல்லை தேய்த்துக் கொண்டிருப்போமோ ? )

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


வணக்கம்

நண்பர்களே , எனது இந்த சிறு முயற்ச்சிக்கு ஆதரவு தந்தமைக்கு மிகவும் நன்றி, இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்க்கும் குறைவாகத்தான் இருக்கும், ஆயினும் தங்களைப்போல உள்ளவர்களின் வருகை எனக்குள் மேலும் ஊக்கத்தை தருகிறது.

எனது குறிக்கோள் என்ன ? எதற்க்காக இதை செய்கிறேன் ?

எனது குறைக்கோள் எனது சந்தோஷமே , இந்த வேலை எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது, அதனால் மட்டுமே செய்கிறேன் !

நான் இப்படித்தான் இதை செய்யவேண்டும் அல்லது இதை நீ செய்யக்கூடாது என சில அனானி நன்பர்களின் ( பின்னூட்டங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புகள் )
வேண்டுகோள் வந்தன.. அதனால் இதை எழுதுகிறேன் ..

இந்த வலைப்பதிவில் காமத்தை மட்டுமே மைய்யமாக வைத்து எழுதுவதாக ஒரு புகார் !
என்னை பொருத்தவரை , ஓஷோவை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் எனது தாயும் ஒரு ஓஷோ சந்நியாசிதான் , அதுவும் முதலில் கடுமையாக எதிர்த்து பின் அவர்களாகவே முழுமையாக அதை ஏற்று கொண்டவர் ( மிகவும் உருக்கமான அந்த நிகழ்வை தனியாக பின் எழுதுகிறேன்) , அதனால் இனி இந்த வாதத்தை மீண்டும் வைப்பது தங்களின் யோசிக்கும் திறமையை மைய்யமாக கொண்டது.

இப்படித்தான் , ஒரு ஆங்கிலேய ப் பெண்மணி ஓஷோவிடம் அவருடைய “ From sex to superconciousness “ என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, ஓஷோவிற்க்கு கடிதம் எழுதினார் “ நீங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தில் இத்தனை முறை இந்த காமம் குறித்த வார்த்தயை பயன்படுத்தி உள்ளீர்கள் இது மிகவும் தவறு எனச்சொன்னார் “ அதற்க்கு ஓஷோ அத்தனை பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே தான் உன்னை கவர்ந்திருப்பது உன்னுடைய மனதின் குறைபாடு மட்டுமே “ என பதில் கடிதம் எழுதச்சொன்னார்.

அது போல நான் நண்பர் மாடசாமி என்பவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் “ நான் முதலில் ஓஷோவைப் பற்றிய தவறான கருத்துகொண்டபுத்தகத்தை ( ஒரு பத்திரிக்கை )படிக்க நேர்ந்தது அதனால் ஒரு தவறான ஒரு எதிர்பார்ப்புடனே நான் முதலில் ஓஷோவிற்க்கு வந்தேன் “என்றார் பின்நாளில் அவர்தான் “ காமத்திலிருந்து கடவுளுக்கு “என்ற தலைப்பில் மிக அருமையாக “ from sex to superconciousness “ என்ற ஓஷோவின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார் . அந்த புத்தகம் தான் தமிழில் வந்த ஓஷோவின் முதல் நூல் ( இந்த புத்தகம் தான் முதல் நூல் என்பது எனது அனுமானம் ) அதனால் அறிமுகம் முக்கியமில்லை என்பது எனது கருத்து.

என்னுடைய இந்த முயற்சி புதிதாக வருபவருக்கும் ஒரு சுவரசியமாக இருக்கட்டும் என்பது எனது நோக்கம் ,

மேலும் எனக்கு அனானிகளிடம் சண்டையிட நேரமில்லை , தங்களுக்கு ஏதாவது திட்டவேன்டும் என்றால் வழக்கம்போல திட்டிக்கொண்டிருக்கலாம் அது தங்களது சுதந்திரம் , முகம் தெரியாமலே நீங்கள் திட்டுவது சற்று சலிப்பாக இருக்ககூடும் அதனால் என்னுடைய இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டே தாங்கள் இனி திட்டலாம்.

மேலும் என்னிடம் இருக்கும் ஓஷோவின் osho audio mp3, video , e-book, meditation music and dance music ஆகிய தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்க , இலவசமாக பகிர்ந்தளிக்க காத்திருக்கிறேன் …




மீண்டும் அன்புடன்


ஆனந்த நிருப்

Monday, June 11, 2007

முல்லாவும் இளம் விதவையும்


முல்லாவும் ஒரு இளம் பணக்கார விதவைப் பெண்னும் காதலித்துவந்தார்கள் . தீடிரேன ஒரு நாள் அந்தப்பெண் தான் நடத்திவந்த தொழில் அடைந்த நஷ்டத்தில் அவளிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்துவிட்டாள் அதை முல்லாவிடம் சொல்லிவிட்டு “அன்பே , நான் செல்வம் இழந்து ஏழையாகிவிட்டேன் இப்போதும் என்னை தொடர்ந்து காதலிப்பாயா ? “

முல்லா “ என்ன இது அசடு மாதிரி பேசிக் கொண்டு! நான் கண்டிப்பாக காதலிக்கிறேன் அனேகமாக இதுவே நான் உண்னை பார்ப்பது கடைசி முறையாக இருக்கக் கூடும் என்ற போதிலும் “

-ஓஷோ

மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் … மாந்தோப்பில்!


ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.

முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்

அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது


ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை

ஓஷோ : ஓஷோவின் குட்டி கதைகள்

காலில் விழுந்த அமரிக்க அமைச்சர்

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு மந்திரிகள் மாநாடு அமேரிக்காவில் நடந்தது அதில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த மந்திரிகள் அழைக்கப்பட்டனர் . நம்முடைய மான்புமிகு ? மந்திரிகளும் அதில் கலந்து கொண்டனர். வழக்கம்போல போன வேலையெல்லாம் விட்டு விட்டு ஒரு வாரம் ஊர் சுத்தி பார்த்தனர். கடைசி நாளும் வந்தது அந்த ஊரில் உள்ள சாலை போக்குவரத்து மந்திரி நம்ம சாலை போக்குவரத்து மந்திரிக்கு தனிப்பட்ட முறையில் விருந்து ஒன்னு ஏற்பாடு செய்தார். ஏற்பாடு செய்த இடமோ மிகப் பெரிய அரண்மனை ஏகப்பட்ட ஐட்டம் ,தடபுடலான செலவு . நம்ம மந்திரி கேக்கவே வேண்டாம் செம ஜாலியா இருந்தார், இருந்தாலும் அவருக்கு ஒரு சந்தேகம் எப்படி இவ்வளவு செலவு செய்ய முடியுது என்று. நம்ம ஆள் அவரை தனியாகத் தள்ளிக்கொண்டு போய் “ ஹீ ஹீ ஒரு சந்தேகம் ! இவ்வளவு பணம் செலவு செய்றிங்களே , நாங்க எப்பவுமே அரசாங்க பணத்துலதான் இப்படி கூத்தடிப்போம் ! தனிப்பட்டமுறையில் இவ்வளவு செய்யறீங்க ! இந்த அரண்மனை வாடகையே ஊருப்பட்டது இருக்குமே ஏது இவ்வளவு பணம் ? “ என்று கேட்டார்.

அதற்க்கு அந்த நாட்டு மந்திரி “ அட இதைக் கேக்கத்தான் இவ்வளவு வழிஞ்சியா ? சரி வா எங்கூட “ என்று மேல் மாடிக்கு ஆழைத்து சென்றார் அங்கு சென்றதும் ஒரு சின்ன சன்னலை காண்பித்து “ அது வழியா பாரு ஏதாவது தெரியுதா? “ எனக்கேட்டார்.

நம்ம மந்திரி மப்பும் மந்தாரமுமாக தேடி பார்த்துவிட்டு “ ஆமா! எதோ மேம்பாலம் மாதிரி ஒன்னு நோம்ப பெரிசா ஒன்னு தெரியுது ! அதுக்கென்ன ? “ கேட்டவாரே தனது நழுவி ச் சென்ற வேட்டியை கட்டிக்கொண்டார்.

அமெரிக்க மந்திரி “ போடாங்க டுபுக்கு ! அது மேம்பாலம் மாதிரி இல்ல மேம்பாலமேதான் ! அதைக்கட்ட காண்ட்ராக்ட் விட்டதில் 10% சதவிகிதம் வாங்கினேன் ; இப்பத்தெரியுதா? இந்த பணம் எப்படி வந்ததுன்னு ! “ என்று சொன்னார்.

அமெரிக்கபயனம் முடிந்து ஊருக்கு நம்ம அமைச்சர் வந்து சேர்ந்தாலும், அந்த அமெரிக்க அமைச்சரின் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தார் நமது அ(ஆமை)ச்சர்
இடையில் மூன்று ஆண்டுகள் கடந்தன. தனது புது மனை புகு விழாவிற்க்கு அந்த அமெரிக்க அமைச்சரை அழைத்தார் ..

தமிழகம் வந்த அமெரிக்க அமைச்சருக்கு ஏகப்பட்ட வரவேற்ப்பு , ( வழக்கம் போல நம்ம கம்யூனிஸ்ட் தோழர்கள் விமானத்தை பார்த்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என தொண்டை கிழிய கத்தியது தனிக்கதை ) அவர் ஆடி போயிட்டார் என்னட இது மூன்றாண்டுகளுக்கு முன் அவ்வளவு பிச்சைக்காரனாட்டம் இருந்த இந்த அமைச்சர் இவ்வளவு சொத்து சேத்திட்டானே என்று !நம்ம அமைச்சரை பார்த்து கேட்டார் “ என்ன மாப்பிளே ஏது இவ்வளவு பணம் ? நானாவது உமக்கு வாடகை அரண்மனையில் தான் விருந்து வைத்தேன் அத விடப் பெரிய மாளிகை நீ சொந்தாமாக கட்டிருக்கே எப்படி ? “ என வியந்து கேட்டார்.

நம்ம அமைச்சர் “ அட வந்ததுமே உமக்கு டவுட்டப்பாரு ? சரி வா மேல வந்து தொலை” என மாடிக்கு கூட்டிக்கொண்டு சென்றார் அங்கிருந்த சன்னலை காண்பித்து “ அது வழியா பாரு மேம்பாலம் ஏதாவது தெரியுதான்னு ? “ அமெரிக்க அமைச்சர் “ ஒன்னுமே தெரிய மாட்டிங்குது வரவர கண்னும் ஒழுக்கமா தெரியரதில்லையாட்ட இருக்கு“ என அந்த ஜன்னல் வழியே பார்த்துவிட்டு சொன்னார்.

நமது அமைச்சர் “ போடங்க ……இவனே ! கட்டியிருந்தாதான தெரியும் ! அப்படியொன்ன உண்மையிலே கட்டிருந்தா எனக்கு ஏது இவ்வளவு பணம் “ என்றார் அடுத்த நொடியில் அந்த அமெரிக்க அமைச்சர் நமது தமிழக அமைச்சரின் காலில் கிடந்தார்..


( இது ஓஷோ கதையல்ல , அமரிக்காவில் வசிக்கும் எனது நன்பன் திரு கன்னன் சொன்னது , )

Sunday, June 10, 2007

எனது மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள் !

அதிகாலை , மனநல மருத்துவ தலைமை அழுவலகத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு “ ஐயா தங்களுடய மருத்துவமனையிலிருந்து ஏதாவது மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? “என க் கேட்டார் ஒருவர் ,

“இல்லை” எனறார் மருத்துவமனை உழியர்

“ அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ? “ என மீண்டும் கேட்டார்.

“ இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வரவில்லை “ என்று பதிலுறைத்தார் ஊழியர்

“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ எனச் சொன்னார் தொலைபேசி ஆழைப்பாளர்

“ யார் சார் நீங்கள் ! காலையில் இப்படி போன் செய்து உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம் பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக் கேட்டார் ஊழியர்.

“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்
- ஓஷோ


( ஆஹா எவ்வளவு நம்பிக்கை தன் மனைவியை அழைத்து சென்றது ஒரு பைத்தியம் தான் என்று )

உன் காதல் வாழ்வை சரிபாதி ஒதுக்கிவிட வேண்டும்

முல்லா நசுருதீன் மிகவும் வயதாகி இளைத்துவிட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர், “ நான் ஒன்று சொல்ல ஆசைப்படிகிறேன். அதாவது , நீ உன் காதல் வாழ்வை சரிபாதி ஒதுக்கிவிட வேண்டும் “ என்றார்.

அதற்கு முல்லா ,” சரி ! ஆனால் எந்தப்பாதி? அதைப் பற்றிப் பேசுவதில் பாதியா? அல்லது அதைப் பற்றிச் சிந்திப்பதில் பாதியா ? “ என்றார்.

-Osho

(ஓஷோவின் குட்டிக்கதைகள் )

Saturday, June 09, 2007

பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு !!!

ஒரு பேராசிரியர் உடற்கூரு வகுப்பில் , “ உணர்வுகளின் தூண்டுதலிலே, பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு எது? “ என்று, ஒரு மாண்வியைக் கேட்டார்.

அந்த பெண் நாணத்துடன் ; “ போங்க சார் அசிங்க அசிங்கமா கேட்கிறிங்க , இதற்கு நான் பதில் கூறமாட்டேன் , எனக்கு வெட்கமாக இருக்குது “ என்றாள்.

பேராசிரியர் அருகில் இருந்த மாணவனைப் பார்த்து “ ஏம்பா உணக்காவது தெரியுமா ? “ எனக் கேட்டார்

அவன், “ கண்ணின் கருவிழி “ என்று கூறினான்.

பேராசிரியர் அந்த மானவியை பார்த்துக் கூறினார்.” உனது குழப்பம் மூன்று விசயங்களை காட்டுகிறது . ஒன்று , நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை. இரண்டு , உனது மனம் அழுக்கானது. மூன்று நீ மிகவும் ஏமாற்றத்திற்க்குள்ளாவாய்,”

-ஓஷோ

( பத்து மடங்கள்ளாம் பெரிசாகுமா ?)

Friday, June 08, 2007

நாம் செம்மறி ஆடுகளே !


ஜார்ஜ் குருட்ஜீப் ஒருகதை சொல்வது வழக்கம் ; மலைகளால் சூழப்பட்ட ஒருவனத்தில் ஒரு மந்திரவாதி நிறையச் செம்மறி ஆடுகளை வைத்திருந்தான்.வேலைக்காரர்களைத் தவிர்க்கவும், ஆடுகள் மேய்ப்பதை த் தவிர்க்கவும், காட்டுக்குள் அவை காணாமல் போனால் தினமும் அவற்றை தேடி அலைவதைத் தவிர்க்கவும் வேண்டி , ஆடுகள் அனைத்தையும் அவன் வசியம் செய்துவிட்டான். ஒவ்வொன்றிடமும் ஒவ்வொரு விதமான் கதையைச் சொல்லி வைத்தான். ஒவ்வொரு ஆட்டுக்கும் வெவ்வேறு விதமான் மனதைக் கொடுத்தான்.

ஒன்றிடம் அவன் சொன்னான் ,” நீ ஆடல்ல .மனிதன்.எனவே ஒருநாள் மற்ற ஆடுகளைப் போல நீ கொல்லப்படுவாய் , பலியிடப்படுவாய் என்று பயப்பட வேண்டாம். அவை ஆடுகள். எனவே வீட்டுக்கு திரும்பிவருவது குறித்து நீ யோசிக்க தேவையில்லை “ வேறு சிலவற்றிடம் அவன் சொன்னான் , “ நீ ஆடல்ல, சிங்கம் “ இன்னும் சிலவற்றிடம் “ நீ ஒரு புலி “ என்றான். அன்றிலிருந்து அந்த மந்திரவாதி நிம்மதியாக இருந்தான் . செம்மறியாடுகள் தமக்கு வழங்கப்பட்ட மனதின்படி நடந்துகொள்ள தொடங்கின.

அவன் ஒவ்வொரு ஆடாக பிடித்துக் கொல்ல முடிந்தது . ஒவொரு நாளும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் உணவுக்காக ஆடுகளை க் கொல்வது அவன் வழக்கம். அதைபார்த்து , தன்னை ஒரு சிங்கம் அல்லது மனிதன் அல்லது புலி என நம்பிவந்த ஆடுகள் சிரித்துக்கொள்ளும் ; “ ஆடாயிருந்தால் இந்தக் கதிதான் .” ஆனால் பழைய காலத்தைப்போல் அவை பயப்படவில்லை. அப்போதெல்லாம் அவன் ஒரு ஆட்டை பிடித்து கொல்லும் போதெல்லாம் எல்லா ஆடுகளும் நடுநடுங்கின. “ நாளைக்கு நாமும் இவ்வாறு கொல்லப்படலாம். எவ்வளவுநாள் தப்பிபிழைக்க முடியும் ? “ எனப் பயந்தன. என்வேதான் மந்திரவாதியிடமிருந்து தப்பிக்க அவை காட்டுக்குள் ஓடிபோவது வழக்கமாயிருந்தது.

ஆனால் இப்போது எந்த ஆடும் தப்பி ஓடவில்லை, அவை புலிகள்,சிங்கங்கள், இப்படி , அவற்றில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த எல்லாவித மனங்களாகவும் அவை இருந்தன.
- ஓஷோ

( நாமும் அப்படித்தான், எவனோ சொன்னதை நம்பி மனிதம் என்பதை மறந்து பார்ப்பனாகவும், பகுத்தறிவுப் புலிகளாகவும், செஞ்சட்டை சிங்கங்கள் மற்றும் கழக கண்மனிகள் என பல்வேறு செம்மறிக்கூட்டங்களாக நம்மைத் தொலைத்துக்கொண்டுள்ளோம் )

ஒரு பெண் திருமணமே செய்துகொள்ளவில்லை

ஒரு பெண் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவள் சாகும் தருவாயில் ஒரு நண்பர் கேட்டார் , “ இவ்வளவு அழகாக இருந்தும் நீங்கள் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை ?“

அவள் சொன்னாள் , “ என்ன தேவை ? நான் பயிற்சி தருவதற்கு என் நாய் இருக்கிறது- அது ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை ! தினம்தோறும் நான் பழக்குவித்தும்கூட அது இன்னமும் இரவில் ஊர் சுத்திவிட்டு நேரம் கழித்தே வீடு வருகிறது. என்னிடம் ஒரு கிளி இருக்கிறது. ஒரு கண்வனிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் அதுவே சொல்லிவிடுகிறது. காலயில் எழுந்ததும் அது “ ஹலோ டார்லிங் ! “ என்கிறது. திருடுவதற்க்கும் ஓயாமல் பொய் சொல்லவதற்க்கும் என்னிடம் ஒரு வேலையாள் இருக்கிறான். இவை அனைத்தையும் மட்டும் செய்வதற்க்காக எனக்கு எதற்க்கு கணவன் ? எல்லாமே பூர்த்தியாகி இருக்கிறதே? “ என்றாள்

ஓஷோ மனதின் இயல்பும் அதைக்கடந்த நிலைகளும்

இரண்டு வெள்ளெலிகள்

இரண்டு வெள்ளெலிகள் டாக்டர் ஸ்மித் என்பவருடைய சோதனைச்சாலைக் கூண்டுகளின் கம்பிகளுக்குள் இருந்து உரையாடிக்கொண்டிருந்தன.

முதல் வெள்ளெலி கேட்டது : “ டாக்டர் ஸ்மித்தின் முன்னேற்றம் உன்னைப் பொறுத்தவரை எப்படி உள்ளது ?”

“நல்ல முன்னேற்றம்” எனறது இரண்டாம் எலி.” கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால் இறுதியாக நான் அவரைப் பயிற்றுவித்துவிட்டேன். இப்போது நான் மணியை அழுத்தும் போதெல்லாம் அவர் எனக்கு உணவுகொண்டு வருகிறார் .”

ஓஷோ : “ இது இத்தகைய வினோத உலகம் டாக்டர் தான் தான் எலிகளை பயிற்றுவிப்பதாக் நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் எலிகளைப்பொருத்தவரை ?”

ஓஷோ : மனதின் இயல்பும் அதைக்கடந்த நிலைகளும்

Thursday, June 07, 2007

தியான முகாம்-meditation camp

திருச்சியில் தியான முகாம்

மூன்று நாள் தியான முகாம் சுவாமி மோகன் பாரதி அவர்களால் நடத்தப்படுகிறது

நாள் :15-17 June

இடம் : ஓஷோ தர்மதீர்த் தியான வளாகம் ,
தஞ்சாவூர் சாலை, துவாக்குடி, திருச்சி - 620015,


தொடர்பு கொள்ள : 94434 - 24065

தியான முகாம் பற்றி :

மிகவும் - பயனுள்ள ஒரு தியான முகாம் , இதில் ஓஷோவின் பல்வேறு செயல்முறைதியானங்கள் (Active meditation) (dynamic, kundalini,Natraj, Mandala etc )
இடம் பெரும்

தங்கும் வசதி மிகவும் நன்றாக உள்ளது, அருமையான சூழல் , அன்பான உபசரிப்பு மற்றும் சுவாமி மோகன் பாரதியின் அனுபவபட்ட நடத்தும்முறை அனைத்தும் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை

Dharm Tirtha Sannyas Ashram 48 & 51 Jaffersha Street G.M.R. Jain Bhavan, 3rd Floor Tiruchchirappalli 620008 Tamil Nadu ...

Tuesday, June 05, 2007

ஒரு பொண்னு கடல்ல முழ்கப்போனபோது

இரு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்

" நம்ம முல்லாவிற்க்கு என்னாச்சு ? பார்த்து நம்ப வ்ருசமாச்சு ! "

" அடப்பாவி ! உனக்குத் தெரியாதா ? அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான் , அத்வும் ஒரு பொண்ணு கடல்ல முழுகப்போன போது காப்பாத்தி கல்யாண்ம் பண்ணிக்கிட்டான் "

" அப்படியா ? சந்தோசமாத்தான இருக்கான் ? "

" அது எனக்கு தெரியாது ! ஆனா அவன் கடல்ன்னு சொன்னாவே கடுப்பாய்விடுகிறான்"

-ஓஷோ

கம்யூனிஸ்ட் கட்சி தான் எனது தாய் !!!!


குருச்சேவ் ரஷ்யாவில் பொருப்பில் இருந்தபோது ஒரு பள்ளி மாணவனை பார்த்து

“உன் தந்தை யார் ?” எனக் கேட்டார்

“ நிச்சயமாக குருச்சேவ்தான் எனது தந்தை “

“ நன்று உனது தாய் ? “
“ கம்யூனிஸ்ட் கட்சி தான் எனது தாய் “

குருச்சேவுக்கு மிகவும் மகிழ்ச்சி மீண்டும் அந்த குழந்தையை பார்த்து கேட்டார் “ மிகவும் மகிழ்ச்சி! இப்படித்தான் சொல்லவேண்டும் , இப்போது சொல் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் ? “

“ அநாதையாக” என்றது குழந்தை


OSHO


The Dhammapada : The Way of the Buddha , Vol -8, Chapper 13

என் பரம்பரயே ஒரு கம்யூனிஸ்ட்

ஒரு முறை முல்லா ரஷ்ய அரசின் நீதிமன்றத்தின் முன் ஏதோ குற்றத்திற்க்காக் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி : " நீங்கள் எத்தனை காலமாக கட்சியில் உள்ளீர் ? "

முல்லா " பல ஆண்டுகளாக ?

நீதிபதி : " உமது தந்தை ? "

முல்லா : " அவரும் தான் அவர்மட்டும் அல்ல அவ்ரது தந்தை அவரது தாத்தா அனைவரும் கம்யூனிஸ்ட்கள்தான் "

நீதிபதி : " கவனி ! அப்போது கட்சியே ஆரம்பிக்கபடவில்லை ! "

முல்லா : " அதனால் என்ன ? அவர்கள் அப்போதே திருடிக்கொண்டும் பிச்சையெடுத்து கொண்டும்தான் இருந்தனர்."




-ஓஷோ

Monday, June 04, 2007

மிகச்சிறந்த நடிகன் யார் ?


ஒருவன் ஒரு சினிமா அரங்கில் உட்காந்திருந்தான், மனைவி தொடர்ச்சியாக அவனிடம் கதாநாயகன் தன் மனைவியை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறான் எண்பதனை சொல்லிக்கொண்டே இருந்தாள், “ நிறுத்து உன் உளறலை ! அதற்காக அவனுக்கு எவ்வளவு தொகை தரப்படுகிறது என்பது உனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல நடிகன் என்பது மட்டும் நிச்சயம் “

மனைவி சொன்னாள் , “ வாழ்க்கையிலும் அவர்கள் கணவன் மனைவிதான் என்பது ஒருவேளை உங்களுக்கு தெற்யாது போல “

அவன் சொன்னான் , “அடக்கடவுளே! அது உண்மை என்றால், நான் இதுவரை பார்த்த நடிகர்களிலேயே மிகச்சிறந்த நடிகன் இவன்தான். இல்லாவிட்டால்,தன் சொந்த மனைவியிடம் இந்தளவு அன்பைத் திரையிலும் காட்டுவது மனித சக்திக்கு மீறியது ஆகும். நடிப்பை பொற்த்தவரை அவன் ஒரு மாமேதைதான் “

ஓஷோ : காதல் என்பது நடிகர்களுக்கு மட்டும் என மக்க்ள் நினைக்கிறார்கள்
- ஓஷோ
- மனதின் இயல்புகளும் அதைக் கடந்த நிலைகளும்

காதலும் திருமணமும்

ஒரு பெண் முல்லா நசுருதினிடம் “ நீ என்னை காதலிக்கிராயா ? “ எனக் காதில் கிசு கிசுத்தாள்.

முல்லா “ கண்டிப்பாக , நாண் உண்னை காதலிக்கிரேன், இதில் என்ன சந்தேகம் ? “ என பதில் கூறினாள்

“அப்படியானால் என்னை திருமணம் செய்துகொள்வாயா ?” என அந்தப் பெண் கேட்டாள்

“ நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தை விட்டுவிட்டு ஏன் வேறு விசயத்திற்க்கு மாறுகிறாய் ? எனக்கேட்டார்

ஓஷோ : “ ஆம் ! காதல் என்பது வேறு , திருமணம் என்பது வேறு , திருமணம் காதலை க் கொலை செய்வது , காதல் சுதந்திரமானது, திருமணம் என்பது சிறை”


-ஓஷோ

சக்ரா ப்ரித்திங் ( Chakkra Breathing )

04-6-07 திங்கள் முதல் கோவை R.S.Puram, Osho prem veena meditaion center தியான மைய்யததில் மாலை 6.30 - 7.30 வரை ஓஷோ சக்ரா பரித்திங் (osho Chakkra Breathing )தியானம் தொடர்ந்து 21 நாட்களுக்கு நடைபெரும்


தொடர்பு கொள்ள: ஞயான் ரிக்தா:98432 - 37793 , வீத் ப்ரயாஸ் : 94431-64565

Center Address : no: 128, T.V.Samy Road,R.S.Puram,Coimbatore, tamil nadu-641006

Saturday, June 02, 2007

ஏர்கலப்பை பாகம் 1

கிராமம் ஒன்றிலே ஒருவன் தன் உழவைக்கொண்டு தம் வாழ்வை ஓட்டி வந்தான். அவன் மிகவும் துன்பத்திலே உழன்று கொண்டு இருந்தான். மற்றவர்கள் போலவே.

ஒரு நாள் அவன் மீது புத்தரின் கருணைப் பார்வை விழ்ந்தது. அவன் சந்நியாசியாகிவிட்டான். அவன் சந்நியாசத்தை ஏற்க்கும்போது தான் பயன்படுத்தி வந்த ஏர்கலப்பையை ஆசிரம வாசலிலேயே ஒரு மரக்கிளையில் தொங்கவிட்ட்லிருந்தான். கடந்த கால சம்பந்தங்களை விட்டு விடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதில் எவ்வித பயனும் இல்லாவிட்டாலும் சரியே.அவ்வாறு பயனில்லாத விஷயங்களை விட்டு விடுவதென்பது தான் மிகவும் கடினமானதும்கூட.

சந்நியாசத்தை ஏற்ற பிறகு சிலநாட்கள் வரை அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அதன் பிறகு மீண்டும் துயரம் தொற்றிக் கொண்டது. மனதின் சுபாவமே இது போலத்தான், இரண்டுகெட்டான் நிலை, ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை. இந்த துயர் நிலையிலிருந்து ஒரு வைராக்கியம் கிளம்பி நின்றது. அவன் சிந்திக்க துவங்கினான்-இந்நிலையைவிட இல்லற நிலையே மேலாக இருந்ததே, ஒரு அலாதியான தொல்லையை விலை கொடுத்து வாங்கி விட்டது போலாகி விட்டதே, இந்த சந்நியாஸ் நிலையிலே என்னதான் பயனிருக்கிறது ?

இந்த விரகத்தால் பீடிக்கப்பட்ட அவன் வைராக்கிய நிலையை நோக்கி நடந்து அந்த ஏர்கலப்பையை எடுத்து மீண்டும் இல்லறத்தை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அம்மரக்கிளையை நெருங்கி நின்றான்……

தொடரும்


( இந்த கதை மிகவும் அருமையான செய்திகளை கொண்டது , ஓஷோவின் விளக்கத்துடன் )

நன்றி ( தமிழ் ஓஷோ டைம்ஸ்- மே 1999)

Friday, June 01, 2007

தியானச் செய்திகள்

1-6-07 வெள்ளி முதல் கொவை அவிநாசி சாலை ஓஷோ தியானம் தியான மைய்யத்தில் தினசரி மாலை 6.30 - 7.30 ஓஷோ குண்டலினி தியானம் நடைபெரும் மேலும் பிரதி ஆங்கில மாதம் 2 வது சனி/ ஞாயிறுகளில் ( ஒரு நாள்) தியான முகாம் நடைபெரும்.
அனுமதி இலவசம்

தொடர்பு கொள்ள : 0422 - 4204739 ( தேவ அசிஸ் )
: 9362040886,9842290654 ( அருண் )

Address : osho dhyanam, Avinashi Road, coimbatore, tamil nadu
- தேவ அசிஸ்

ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும்

ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் தங்களது மதத்தை அடுத்த நாட்டிலும் பரப்பும் நோக்கோடு ஒரு ஒட்டகத்தில் பயனம் மேற்க்கோண்டனர், அவர்கள் பாலைவனதின் வழியாக நெடும் தூரம் செல்லவேண்டியிருந்தது, பயனம் மிக கடுமையாக இருந்தது-வழியில் பாலைவனப்புயல் , அதனால் பயனம் நீண்டுகொண்டே சென்றது.. அவர்கள் பயனித்த ஒட்டகமும் மயங்கி விழுந்து மடிந்தது.

அவர்களிடம் இப்போது போதுமான உணவும் இருக்கவில்லை, அந்த பாதிரியால் பசியை பொருக்கமுடியவில்லை , இறப்பு சிறிது சிறிதாக அவருக்கு ஏற்ப்பட்டு கொண்டிருந்தது.

கன்னியாஸ்த்திரி அவரது இறப்பை இனி தடுக்கமுடியாது என்பதை உணர்ந்தார், எனவே அவரை நோக்கி “ பாதர் ! உங்களுக்கு ஏதாவது நிறைவெராத ஆசை ஏதேனும் உள்ளதா ? “ எனக் கேட்டார்

பாதர் “ ஆம் , நான் இதுவரை நிர்வாணமாக எந்த பெண்னையும் பார்த்ததில்லை அது தான் எனது ஆசையாக் இருக்கிறது “ என்று பிட்டை போட்டார்.

கன்னியாஸ்த்திரி உடனே “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு! சாக கிடக்கும் இந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றவே நான் எனது உடைகளை அவிழ்க்கிறேன் “ என்று சொல்லிவிட்டு அந்தம்மா துனிகளை அவிழ்த்து நிர்வாணமாகியது .

பாதர் “Thank you sister ! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிந்தால் செய்கிறேன் என்னவேண்டுமோ கேலுங்கள்” என்றார்

கன்னி “ ஹி ஹி ஒன்னுமில்லை , நானும் இதுவரை எந்த ஆனையும் அப்படிப் பார்த்ததில்லை ஹி… “ என்றார்.

பாதர் “ அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லிவிட்டு பரலொகத்தில் இருக்கும் ஏசுவிற்க்கு வழக்கம் போல் “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு!” என்று sms அனுப்பிவிட்டு அவர் துனிகளை கலைந்த்தார்.

கன்னி “ மிகவும் நன்றி பாதர் ! வித்யாசமாக இருக்கிறது ஆனால் அந்த உருப்பு எதற்க்கு? எனத்தெரியவில்லை என கையை நீட்டி சுட்டி காட்டினார் “

பாதர் “ ஓ! இதுவா இது உயிர் கொடுக்கும் கருவி ! இதை இயக்கினால் ஒரு உயிரை உருவாக்கமுடியும்” எனக்கூறி சமாளித்தார்.

உடனே “ அப்படியானல் இதை உடனடியாக இயக்கி அந்த ஒட்டகத்திற்க்கு உயிர் கொடுங்கள் நானவது எனது பயனத்தை தொடரமுடியு ம் “ என்றார் அந்த கன்னி

-ஓஷோ ( In search of truth – video )