Monday, June 11, 2007

காலில் விழுந்த அமரிக்க அமைச்சர்

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு மந்திரிகள் மாநாடு அமேரிக்காவில் நடந்தது அதில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த மந்திரிகள் அழைக்கப்பட்டனர் . நம்முடைய மான்புமிகு ? மந்திரிகளும் அதில் கலந்து கொண்டனர். வழக்கம்போல போன வேலையெல்லாம் விட்டு விட்டு ஒரு வாரம் ஊர் சுத்தி பார்த்தனர். கடைசி நாளும் வந்தது அந்த ஊரில் உள்ள சாலை போக்குவரத்து மந்திரி நம்ம சாலை போக்குவரத்து மந்திரிக்கு தனிப்பட்ட முறையில் விருந்து ஒன்னு ஏற்பாடு செய்தார். ஏற்பாடு செய்த இடமோ மிகப் பெரிய அரண்மனை ஏகப்பட்ட ஐட்டம் ,தடபுடலான செலவு . நம்ம மந்திரி கேக்கவே வேண்டாம் செம ஜாலியா இருந்தார், இருந்தாலும் அவருக்கு ஒரு சந்தேகம் எப்படி இவ்வளவு செலவு செய்ய முடியுது என்று. நம்ம ஆள் அவரை தனியாகத் தள்ளிக்கொண்டு போய் “ ஹீ ஹீ ஒரு சந்தேகம் ! இவ்வளவு பணம் செலவு செய்றிங்களே , நாங்க எப்பவுமே அரசாங்க பணத்துலதான் இப்படி கூத்தடிப்போம் ! தனிப்பட்டமுறையில் இவ்வளவு செய்யறீங்க ! இந்த அரண்மனை வாடகையே ஊருப்பட்டது இருக்குமே ஏது இவ்வளவு பணம் ? “ என்று கேட்டார்.

அதற்க்கு அந்த நாட்டு மந்திரி “ அட இதைக் கேக்கத்தான் இவ்வளவு வழிஞ்சியா ? சரி வா எங்கூட “ என்று மேல் மாடிக்கு ஆழைத்து சென்றார் அங்கு சென்றதும் ஒரு சின்ன சன்னலை காண்பித்து “ அது வழியா பாரு ஏதாவது தெரியுதா? “ எனக்கேட்டார்.

நம்ம மந்திரி மப்பும் மந்தாரமுமாக தேடி பார்த்துவிட்டு “ ஆமா! எதோ மேம்பாலம் மாதிரி ஒன்னு நோம்ப பெரிசா ஒன்னு தெரியுது ! அதுக்கென்ன ? “ கேட்டவாரே தனது நழுவி ச் சென்ற வேட்டியை கட்டிக்கொண்டார்.

அமெரிக்க மந்திரி “ போடாங்க டுபுக்கு ! அது மேம்பாலம் மாதிரி இல்ல மேம்பாலமேதான் ! அதைக்கட்ட காண்ட்ராக்ட் விட்டதில் 10% சதவிகிதம் வாங்கினேன் ; இப்பத்தெரியுதா? இந்த பணம் எப்படி வந்ததுன்னு ! “ என்று சொன்னார்.

அமெரிக்கபயனம் முடிந்து ஊருக்கு நம்ம அமைச்சர் வந்து சேர்ந்தாலும், அந்த அமெரிக்க அமைச்சரின் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தார் நமது அ(ஆமை)ச்சர்
இடையில் மூன்று ஆண்டுகள் கடந்தன. தனது புது மனை புகு விழாவிற்க்கு அந்த அமெரிக்க அமைச்சரை அழைத்தார் ..

தமிழகம் வந்த அமெரிக்க அமைச்சருக்கு ஏகப்பட்ட வரவேற்ப்பு , ( வழக்கம் போல நம்ம கம்யூனிஸ்ட் தோழர்கள் விமானத்தை பார்த்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என தொண்டை கிழிய கத்தியது தனிக்கதை ) அவர் ஆடி போயிட்டார் என்னட இது மூன்றாண்டுகளுக்கு முன் அவ்வளவு பிச்சைக்காரனாட்டம் இருந்த இந்த அமைச்சர் இவ்வளவு சொத்து சேத்திட்டானே என்று !நம்ம அமைச்சரை பார்த்து கேட்டார் “ என்ன மாப்பிளே ஏது இவ்வளவு பணம் ? நானாவது உமக்கு வாடகை அரண்மனையில் தான் விருந்து வைத்தேன் அத விடப் பெரிய மாளிகை நீ சொந்தாமாக கட்டிருக்கே எப்படி ? “ என வியந்து கேட்டார்.

நம்ம அமைச்சர் “ அட வந்ததுமே உமக்கு டவுட்டப்பாரு ? சரி வா மேல வந்து தொலை” என மாடிக்கு கூட்டிக்கொண்டு சென்றார் அங்கிருந்த சன்னலை காண்பித்து “ அது வழியா பாரு மேம்பாலம் ஏதாவது தெரியுதான்னு ? “ அமெரிக்க அமைச்சர் “ ஒன்னுமே தெரிய மாட்டிங்குது வரவர கண்னும் ஒழுக்கமா தெரியரதில்லையாட்ட இருக்கு“ என அந்த ஜன்னல் வழியே பார்த்துவிட்டு சொன்னார்.

நமது அமைச்சர் “ போடங்க ……இவனே ! கட்டியிருந்தாதான தெரியும் ! அப்படியொன்ன உண்மையிலே கட்டிருந்தா எனக்கு ஏது இவ்வளவு பணம் “ என்றார் அடுத்த நொடியில் அந்த அமெரிக்க அமைச்சர் நமது தமிழக அமைச்சரின் காலில் கிடந்தார்..


( இது ஓஷோ கதையல்ல , அமரிக்காவில் வசிக்கும் எனது நன்பன் திரு கன்னன் சொன்னது , )

No comments: