Monday, June 18, 2007

நான் ஒரு கெட்ட பெண்மணி

ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள் . அதற்க்காக அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, “ நான் ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.
இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள். இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்? அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று “ இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளைகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்த க் கிளி கூறியது . “ நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ,” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “ என்று கூறியது . அவை ஒரு பெண்னுக்காகப் பிராத்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

“ யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு. அவர்கள் பண்த்துக்காக, பெண்ணுக்காக, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு , அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது, “

-ஓஷோ வின் குட்டி கதைகள்

8 comments:

அரு.மாணிக்கம் said...

மிக அருமையான கதைகள் கட்டுரைகள்.
வாழ்க உங்கள் பணி...

You email add pls.

ஆனந்த் நிருப் said...

மிகவும் நன்றி அரு.மாணிக்கம் அவர்களே

Voice on Wings said...

உங்களது இடுகைகளைப் படித்து வருகிறேன். ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்ற அளவில் உங்களுக்கு வெற்றிதான். குறிப்பாக, மதங்கள் / புனிதங்கள் / (அரசியல் கட்சி போன்ற) நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கல்லெறிவது (அல்லது உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் 'பாட்டு பாடுவது :)) என்ற அளவில் முழு உடன்பாடு.

ஆனால், நீங்களும் உங்கள் அமைப்பும் மீண்டும் தியானம், குண்டலினி, ஆள் சேர்ப்பு என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் அனைத்து குணாதிசயங்களுடன் செயல்படுவதைப் பார்க்கும்போது, உங்கள் அமைப்புக்கும் சில கற்கள் / பாடல்களைப் பெறுவதற்கான தகுதி வந்து விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தியானம், chakra breathing இவற்றையெல்லாம் செய்யாமலே மனிதனால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்கிறேன்.

ஆனந்த் நிருப் said...

இந்த பதிவகள் ஆள் சேர்ப்பு வேலைகளுக்கல்ல ! அதன் அவசியம் எனக்கிறுப்பதில்லை! இந்த பதிவுகள் தேவை உள்ளவர்களுக்கு பயன் அளித்தால் அதுவே போதும், சில பேருக்கு விஷய ஞானம் போதுமானது, அனுபவம்( தியான ) தேடும் சிலருக்கு மற்ற பதிவுகள் உபயோகபடட்டும் , எனக்குத் தெரிந்து ஓஷோவின் தியான முகாம் மற்றும் தியானம் எங்கு நடைபெருகிறது எனும் தகவல் பலருக்கு உபயோகமாக உள்ளது அதனால் அதன் செய்திகளை இடுகிறேன். ஓஷோவில் அமைப்பு (it is not a religious organaisation )என்று எதுவும் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு தனி மனிதன் மட்டுமே!

மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு தியானம் என்பது இல்லாமலே தாங்கள் உண்மையான மகிழ்ச்சியொடு இருந்தால் ( இது இருட்டில் செல்பவன் தனக்கு பயம் இல்லை என்று சொல்வது போல் அல்லாமல் இருந்தால் )

Voice on Wings said...

உங்களைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. (அவ்வாறு நினைத்து விட்டது போலத் தெரிவதால் இதைத் தெளிவுப் படுத்துகிறேன்.)

உலக நடப்புகளைப் பற்றி பகுத்தறிவுடன் அணுகும் அதே நேரத்தில், நீங்கள் சாடும் 'பிரார்த்தனை'யை விட அபத்தமான செயல்களைப் பரிந்துரைப்பது போலிருந்ததால், எனது நேர்மையான கருத்துகளை வெளியிடத் தோன்றியது.

எனது மகிழ்ச்சியின் நிலவரம் குறித்து நான் எதுவும் கூறவில்லை, அதற்கு இங்கு தேவையிருப்பதாகவும் நினைக்கவில்லை. தியானம், சுழற்சி (whirling), சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுவதால் இல்லாத மகிழ்ச்சியை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தை நான் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன், அவ்வளவே.

ஆனந்த் நிருப் said...

voice on wings அவர்களுக்கு , நான் புன்படவும் இல்லை, என்னை பொருத்தவரை பகுத்தறிவு என்பது சோதனைக்கு உட்பட்டது , எல்லாவிதமான அறவியல் கண்டுபிடிப்புகளுமே சோதனை மூலமாகத்தான் உறுதிசெய்யப்பட்டது என்பது தாங்கள் அறியாததல்ல - இந்த ஓஷோவின் முறைகள் - தாங்கள் சோதித்து அறிவதற்க்கு உட்பட்டது - அதற்க்கு எந்த வித நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியது இல்லை- சோதித்து அறியாமல் கேள்விக்கு உட்படுத்த படுவது சர்க்கரை இனிக்கும்( அதை சுவைக்காமலே ) என்பதை கேள்விக்கு உட்படுத்துவதைப் போன்றது என்பது எனது தாழ்மையான கருத்து! இதை நியாயமான எந்த பகுத்தறிவு வாதியும் செய்யமாட்டார்.

ஒவ்வொறு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது அறிவியலின் அடிப்படை கருத்தல்லவா? அப்படியானல் நீங்கள் அதை கேள்விக்கு உட்படுத்துவீர்களா ? இந்தச் சுழற்ச்சி/ சக்ரா பிரித்திங் போன்ற விஷயங்களில் நான் கடவுள் உனக்கு அது தருவார் இது தருவார் என்று நான் கூறியிருந்த்தால் அது அபத்தம் , நான் நீங்கள் செய்யும் இந்த செயல் முறை தியானங்கள் தங்களுக்குள் அமைதி ஏற்படுத்தும் என்று தானே சொன்னேன் இது எவ்வகையில் அபத்தம்! பகுத்தறிவு என்ற போர்வைவில் யாரோ சொன்ன கருத்தை மூட நம்பிக்கையாய் பின்பற்றுவதை விட இது அபத்தமா ?( அவர்கள் கடவுள் என்ற உருவமற்றதை நம்புகிறார்கள் - நீங்கள் ஒரு மறைந்த பெரியவரை நம்புகிறீர்கள் எனக்கு விதயாசம் தெரியவில்லை - உங்களுடைய சொந்த அறிவின் மூலம் நீங்கள் எதை பகுத்தறிந்தீர்கள் எனபதே எனது கேள்வி ) நான் யாரையும் புண்படுத்தவில்லை!

எனக்கு மகிழ்ச்சி தந்தது என்பதை எப்படி கேள்விக்கு உட்படுத்தமுடியும்! இது தங்களுக்கே அபத்தமாக இல்லையா ? தங்களுக்கு மாறுதல் தருகிறதா என்பதை பகுத்தறிய! நீந்கள்தான் சோதித்து பார்க்கவேண்டும் அதற்க்கான முறைகள் வேண்டுமானால் என்னால் பதிய முடியும்

ஆனந்த் நிருப் said...

மிகவும் நன்றி! இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டும் கேள்வியில்லாமல் ஞானம் பிறப்பதில்லை

ஆனந்த் நிருப் said...

அரு மாணிக்கம் அவர்களுக்கு எனது Email : anandnirup@yahoo.co.uk, anandnirup@gmail.com ( நான் அப்போது கவணிக்கவில்லை )