Wednesday, July 11, 2007

காமம்- சூத்திரம்-2 பகுதி2-சும்மா அதிருதில்லே

அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்நதால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது; உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது; உடலின் ஒவ்வொரு அண்வும் பங்கேற்கிறது.ஒவொரு அணுவும் செக்ஸ் அணுதான் .

நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன, அந்த இரண்டு காம உயிரணுக்கள் உன் உடல் முழுவதும் பரவி கிடக்கின்றன. உன் உடலை நீ காதலியுடன் சேர்ந்து இருக்கும்போது அதிரச்செய்தால், உன் உடலுக்குள் ஒவ்வொரு உயிரணுவும் அதன் எதிர்மறையான அணுவுடன் சந்திக்கிறது. இந்த அதிர்வு அதை காட்டுகிறது. இது விலங்கு தன்மை உடையதாகத் தோன்றும் . ஆனால் , மனிதனும் விலங்குதான்-ஏதும் தவறு இல்லை.

இந்த இரண்டாவது சூத்திரம் சொல்கிறது. “ இப்படிபட்ட அரவணைப்பில் உன் புலன்கள் இலைகளைப் போல அதிர்ந்தால்…..

ஒரு பெருங்காற்று வீசி மரத்தை அசைக்கின்றது. வேர்கள் கூட அசைகின்றன- ஒவொவொரு இலையும் அசைகிறது– ஒரு பெரிய மரத்தைப் போல ; ஒரு பெருங்காற்று வீசுகிறது, காமம் ஒரு பெருங்காற்று ; பெரும் சக்தி உன் வழியாகப் போகிறது-அதிர் ; அசை ; உன் உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் ஆட விடு, அதிர விடு , அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் சந்திக்க முடியும் . அந்த சந்த்திப்பு மனதளவில் நிகழ்வதாக இருக்காது- உங்களின் உடற் சக்திகளின் சந்திப்பாக இருக்கும்.

இந்த அதிர்வின் உட்செல் , அதிரும் போது பார்வையாளனாக இருக்காதே; மனம்தான் பார்வையாளனாக இருக்கிறது. அந்த அதிர்வாக மாறிவிடு , உன் உடல் அதிர்கிறது என்பதல்ல- நீயே அதிர்வாக மாறி உன் முழுமையும் ஈடுபட வேண்டும் . அப்போழுது நீங்கள் இரண்டு உடல்களாக , இரண்டு மனங்களாக இருக்க மாட்டீர்கள், முதலில் இரண்டு அதிரும் சக்திகள் பிறகு இரண்டும் மறைந்து ஒரு வட்டம் மட்டுமே எஞை நிற்கும்.

இந்த வட்டத்துள் என்ன நிகழும் ? ஒன்று நீ இருந்த இருத்தலின் சக்தியின் ஒரு அங்கமாகி விடுவாய்- ஒரு சமுதாய மனமாக இல்லாமல் இயற்க்கை சக்தியின் அங்கம்மாகி விடுவாய். நீ இந்த அண்டத்தின் ஒரு பகுதியாகிவிடுவாய். இந்தக் கணம் ஒரு பெரும் படைப்பு ஆகும். மனம் மறைந்து விடுகிறது –பிரிவுகள் இல்லாது போய் விடுகின்றன்-நீங்கள் ஒன்றாகி விட்டீர்கள் .

இதுதான் அத்வைதம்-பிரிவில்லாத தன்மை . இந்தப் பிரிவின்மையை நிங்கள் உணராவிட்டால் எல்லா அத்வைததத்துவங்களும் பயனற்றதாகிவிடும் . ஒரு முறை இந்தப் பிரிவு படாத ஒருமையின் கணத்தை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டால் , பிறகுதான் நீ உபநிடதங்களை , ஞானிகளை , அவர்கள் கூறுகிற அண்டத்தின் ஒருமையை, முழுமையை உண்ர்ந்து கொள்ள முடியும். நீ உலகத்திலிருந்து வேறு அல்ல, அதற்க்கு வித்தியாசமானவன் அல்ல இந்த அண்டம் முழுவதும் உன் வீடு.
இந்த அண்டம் என் வீடாகி விட்டது என்னும் எண்ணத்தால் உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். பிறகு கவலைகள் , போராட்டம், பிளவு ஏதுமில்லாமல் போய்விடும். லாத்சூ இதை தாவோ என்கிறார் . சங்கரர் அத்வைதம் என்கிறார். நீ உனக்கு இஷ்டப்பட்ட வார்த்தையை த் தேர்ந்தேடுத்து கொள்ளலாம், ஆனால் இதை ஆழமான அன்பின் அரவணைப்பில் உண்ர்வது எளிது. உயிரோட்டமுள்ளவனாக அதிர், அந்த அதிர்வாக மாறு

( மூன்றாவது சூத்திரம் அடுத்த பதிப்பில் )
-ஓஷோ;- தந்திரா ஆன்மிகம் பாலுண்ர்வும்

4 comments:

Anonymous said...

idiot!!!!!!!!! stop writing this kind of stuff........doesnt make any sense........

Anonymous said...

சார் தொடருங்க. பள்ளியில செக்ஸ் சொல்லிக் கொடுக்கிறாங்க. நாம முதியோர் கல்வியில் படிச்சா என்ன?

புள்ளிராஜா

Anonymous said...

Dear anand,
I think this is the best part so far you have writen.Please continue with such article rather than just jokes

Anonymous said...

Anand, Keep writing......topics are vibrating......