Thursday, May 31, 2007

எனது தாத்தாவுக்கு ஆறு இஞ்ச்!

முல்லா நசுருதீன் ஒரு பரம்பரை பிரியர்.

குளிருக்காக ஒரு அதிசய கருப்பு நிறக் கோட்டை அணிந்திருந்தார் இதை கண்ட அவரது நண்பன் , “ என்ன முல்லா உனது கோட் மிகவும் பழையதாக் உள்ளது “ என்று கேட்டான்.

முல்லா “ இதை அணிந்து கொள்ளும் பழக்கம் எங்கள் இல்லத்தில் பரம்பரையாக உள்ளது ,என்னுடைய தாத்தாவும் இதை அணிந்திருந்தார். என்னுடைய தந்தையும் இதையே அணிந்திருந்தார்; இப்போது இதனை நான் அணிந்துள்ளேன் “ என்று பெருமையுடன் கூறினார்.

“நீ ஏன் தாடி வைத்துள்ளாய் ? “என்று கேட்டான் முல்லாவின் நண்பன்.

“ தாடி வளர்ப்பதும் எமது பரம்பரை வழக்கமே ! எனது தாத்தாவிற்க்கு ஆறு இஞ்ச் தாடி இருந்தது . எனது தந்தைக்கும் ஆறு இஞ்ச் தாடி இருந்தது!”. என்றார் முல்லா.

“ முல்லா, இதுவரை நீ ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை ? அது கூட உன்னுடய குடும்பத்தின் ஏதாவது பழைய பரம்பரை பழக்கமா ? “ என்று கேட்டான் நண்பன்.
“ அதில் என்ன சந்தேகம் ! “ என்ற முல்லா உணர்ச்சிவசப்பட்டு , “ என்னுடைய தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவராக இருந்தார். பிறகு எனது தந்தையும் அவ்வாறு திருமணம் இல்லாதவராக இருந்தார். நானோ எனது பரம்பரை பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன்!”என்றார் பெருமையுடன்!

-ஓஷோ

No comments: