Thursday, May 31, 2007

துண்டைக் காணோம் துணியைக் காணோம்


முல்லா தனது நன்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார், வழியில் ஒரு சிங்கத்தை அவர்கள் கண்டுவிட்டனர், அந்த சிங்கமும் இவர்களைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். ஆனால் பாவம் முல்லாவினால் சிங்கத்தின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை, சிங்கம் அவரை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

நண்பர்கள் முல்லாவின் கதை முடிந்தது என்றே நினைத்தனர். மிகவும் கவலையுடன் ஊருக்குள் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்னால் முல்லா ஊருக்குள் வந்து சேர்ந்திருந்தார்,நண்பர்களுக்கு தங்களின் கண்களையே நம்ப முடியவில்லை . அவர்கள் முல்லாவை பார்த்து “அடப்பாவி! எப்படி சிங்கத்திடம் இருந்து தப்பித்தாய் ! ” என வினவினர்

முல்லா “ நான் வந்த திசையிலே விடாமல் துரத்தி வந்தது சிங்கம் ! நானும் விடாமல் ஓடிவந்தேன் , எனக்கும் சிங்கத்திற்க்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது, சிங்கம் என் மிக அருகில் நெருங்கி என் மீது பாயும் சமயம் ஒரு சிறிய பள்ளத்தாக்கு குருக்கிட்டது , நான் அதை உயிரைக்கொடுத்து தாண்டினேன் ! சிங்கம் தாண்டும் போது வழுக்கிவிழுந்தது! “ எனச் சொன்னார்

அப்போது அந்த நண்பரில் ஒருவர் “ முல்லா நீங்கள் மிகவும் தைரியசாலி , நாங்களாக இருந்தால், பயத்தில் பேன்டு ஒழப்பியிருப்போம் “ என்றார்

முல்லா “ பின்னே சிங்கம் எப்படி வழுக்கிவிழுந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் ?! “ என்றார்


-ஓஷோ

No comments: