முல்லாவும் அவரது நன்பர் ஷேக் அப்துல்லாவும் அடர்ந்த காட்டில் வழிதவறி மாட்டிக்கொண்டனர், மாலை கடந்து இரவும் வந்தது. அந்தக் காடு மிகவும் கொடிய மிருகங்கள் நிறைந்த காடு , அதனால் அன்று இரவு முழுதும் அவர்கள் முழித்திருக்க வேண்டிய கட்டாயம், அல்லது ஏதாவது மிருகங்கள் அவர்களை கொன்றுவிடக்கூடும். அதனால் அவர்கள் இருவரும் நாம் முழித்திருப்போம் என உறுதி கொண்டனர்.
நேரம் கடந்து கொண்டிருந்தது , அவர்கள் எவ்வள்வோ முயன்றும் தூக்கம் வந்தது. முல்லா சொன்னார் “ நாம் இப்படியே இருந்தால் தூக்கம் வருவதை தடுக்க முடியாது ! அதனால் இதற்க்கு ஏதாவது கண்டுபிடி , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது பகல் முழுதும் நடந்த களைப்பு ! “
அப்துல்லா “ என்னை என்ன செய்ய சொல்கிறாய் ? “எனக் கேட்டார்
அதற்க்கு முல்லா “ நாம் இப்படி செய்தால் என்ன ? நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம், கண்டுபிடிக்கும் விளையாட்டு – ஏதாவது ஒரு நடிகையைப் பற்றிய குறிப்பு சொல்வது அதை மற்றவர் கண்டுபிடிப்பது ! “ என சொன்னார்
அப்துல்லா “ சூப்பர் ஐடியா ! இதை எப்படி ஆரம்பிப்பது ? “ எனக் கேட்டார்
முல்லா “ ம்.. முதலில் நீ உன்னை ஒரு நடிகையாக நினைத்து விவரி நான் கண்டுபிடிக்கிறேன், பிறகு நான் விவரிக்கும் போது நீ கண்டுபிடி “
அப்துல்லா “okey! wait “என்றார் பிறகு சிறிது நேரம் யோசித்துவிட்டு “ எனது கண்கள் சிநேகாவின் கண்கள் போன்றது, இடை சிம்ரன் போன்றது , தொடை ரம்பா போன்றது மற்றும் எனது இத்யாதி இத்யாதி “என விவரித்தார்
அவரது வர்ணனை கேட்க கேட்க முல்லா மிகவும் உண்ர்ச்சிவயப்பட்டார்,அவரது இரத்த நாளங்கள் துடித்தது . இருட்டிலும் அவரது கண்களில் அது பிரதிபலித்தது . அப்துல்லா மேலும் தொடர்ந்தார் “ எனது உடம்பின் அளவுகள் 36-24-36 இப்போது சொல் நான் யார்” என்று அப்துல்லா முடிக்கும் முன் முல்லா எழுந்து அப்துல்லாவின் மீது பாய்ந்தார்.
அப்துல்லா “ பொறு ! நான் யார் கண்டுபிடி “ என்று சொன்னார்.
முல்லா “ கண்டுபிடிப்பதைப் பற்றி யாருக்கு கவலை! நீ யார் என்பது பற்றிய கவலை எனக்கில்லை ! முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!” என்றார்
ஓஷோ கூறுகிறார் : “மனிதனின் மனதின் நிலை இதுதான் , கனவு மற்றும் ஆசைகளால் உண்மையை உண்ர்வதில்லை ! மனிதன் கனவுகானத் துவங்குகிறான் பிறகு அதன் பிடியில் மாட்டிக்கொண்டு தன்னை இழக்கிறான்! “
தழுவல் : osho
Vedanda : Seven Steps to Samathi
(குறிப்பு :- இந்தக்கதையை என்னால் முடிந்த வரை மொழி மாற்றம் செய்தேன் – நடிகைகள் பெயரையும் தற்க்காலதிற்க்கு ஏற்ப்ப மாற்றினேன் – உங்களுக்கு இந்த கதையின் சாரம் புரிந்ததா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும், )
Tuesday, May 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கதையின் சாரம் நன்றாகவே புரிகிறது.
தொடர்ந்து ஓஷோவின் புத்தகங்களிலிருந்து நகைச்சுவைப் பகுதிகளைத் தமிழில் தருகிறீர்கள். இதுவே பலரை அவருடையப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டலாம். சில பிழைகளைத் தவிர்த்தால் படிக்க எளிதாகஇருக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி முல்லாவின் தம்பி "அம்மா கூரை மேல் விளையாடிக் கொண்டிருக்கிறாள்" என்பது..
சமீபத்தில் ஒரு பதிவர் (http://koothaadi.blogspot.com/2007/03/2.html) இந்த இணைப்பைச் சுட்டிக் காட்டியிருந்தார். http://youtube.com/watch?v=6D7rWLzloOI அது உங்களுக்கும் பிடிக்கலாம்.
தயவுசெய்து WORD VERIFICATION ஐ நீக்கவும்.
உங்கள் உழைப்பிற்கு நன்றி.
மிகவும் நன்றி உங்களுக்கும் இதை தங்களுக்கு பரிந்துரைத்தவருக்கும்
நிங்கள் கூறியவற்றைச் செயல் படுத்துகிறேன்
அன்புடன் நிருப்
மிகவும் நன்றாக் உள்ளது
Post a Comment