Saturday, June 09, 2007

பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு !!!

ஒரு பேராசிரியர் உடற்கூரு வகுப்பில் , “ உணர்வுகளின் தூண்டுதலிலே, பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு எது? “ என்று, ஒரு மாண்வியைக் கேட்டார்.

அந்த பெண் நாணத்துடன் ; “ போங்க சார் அசிங்க அசிங்கமா கேட்கிறிங்க , இதற்கு நான் பதில் கூறமாட்டேன் , எனக்கு வெட்கமாக இருக்குது “ என்றாள்.

பேராசிரியர் அருகில் இருந்த மாணவனைப் பார்த்து “ ஏம்பா உணக்காவது தெரியுமா ? “ எனக் கேட்டார்

அவன், “ கண்ணின் கருவிழி “ என்று கூறினான்.

பேராசிரியர் அந்த மானவியை பார்த்துக் கூறினார்.” உனது குழப்பம் மூன்று விசயங்களை காட்டுகிறது . ஒன்று , நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை. இரண்டு , உனது மனம் அழுக்கானது. மூன்று நீ மிகவும் ஏமாற்றத்திற்க்குள்ளாவாய்,”

-ஓஷோ

( பத்து மடங்கள்ளாம் பெரிசாகுமா ?)

6 comments:

Subramanian said...

ஓஷோவின் எழுத்துக்கள் அனைத்தையும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் முன்னரே படித்தவன் என்ற தகுதியில் இப்பின்னோட்டமிடுகிறேன்.
உங்கள் பதிவுகள் அனைத்தையும் கவனமாகப் படித்தேன்.
ஓஷோவை எவ்வளவு கேவலமாக இளைய தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்?இதை விட அருமையான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவரின் காமத்துப்பாலை மட்டும் எடுத்துக்கொண்டு வரி வரியாக விமர்சித்து இவை தான் திருவள்ளுவர் உலகத்துக்குப் போதித்தது என்று எழுதினால் கல்லெடுத்து அடிக்க வருவார்கள்--உங்களை.
ஒருக்கால் நீங்கள் ஓஷோவுக்கும் அவர்தம் கொள்கைகளுக்கும் கடும் எதிர்ப்பாளர் என்பதால் இப்படியெல்லாம் கேவலப்படுத்தவேண்டி இவ்வலைப்பூவை ஆரம்பித்துள்ளீர்கள் என்றால்--
சீச்சீ,நாய் பிழைக்கும் இப்பிழைப்பு.

Anonymous said...

பேராசிரியர் நமது சர்வாதிகாரியை பார்த்து கூருகிறார் " உனது குழப்பம் மூன்று விஷயங்களைக் காட்டுகிறது . ஓன்று நீ சரியாக ஓஷோ புத்தகங்களை படித்ததில்லை, இரண்டு , உனது மனம் அழுக்கானது . மூன்று நீ மிகவும் ஏமாற்றத்திற்க்குள்ளாகி இருக்கிறாய் "

ஆனந்த் நிருப் said...

ஐயா ,

மிகவும் சந்தோசம் தங்களுடைய ஆதங்கத்திற்க்கு , கடைசியில் தங்களிடம் ஏதோ ஒரு உணர்வையாவது( மற்ற உணர்வுகள் தங்களுடைய வயதிற்க்கு மடிந்திருக்கலாம் ) இந்த தளம் தட்டி எழுப்பியது கண்டு மகிழ்ச்சியே

உங்களுடைய இந்த பின்னூட்டம் மற்றவர்களை ஓஷோ மற்றகருத்துக்களையும் படிக்க தூண்டலாம்

தியானமில்லாமல் புத்தகத்தை மட்டும் படித்தால் அந்த கதையில் வந்த பெண்ணைப் போல எல்லாமே தவறாகத்தான் தோன்றும்!

தங்களுக்கு தேவை சிறிது ஓய்வு,சிறிது தியானம் மற்றும் மனம் விட்டு சிரிக்கும் குணம்.

என்ன செய்வது சிரிக்க தெரிந்த மனத்திற்க்கு சர்வதிகாரியாக இருக்கமுடியாது என்பது உண்மை

பார்த்தீர்களா நமக்குள் வேற்றுமையை நானோ ஆனந்த நீருப் நீங்களோ சர்வாதிகாரி, சர்வாதிகாரிக்கு ஆனந்தம் பிடிக்குமா? ( அதுவும் மற்றவரிகளின் )

இவ்வளவு காலம் கடந்தும் காமம் தங்களை பாடாய் படுத்துகிறது , ஏன் அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எதிர்மறையாகவேனும் , இது உண்னா விரதம் இருப்பவன் உணவை பற்றியே சிந்திப்பது போல ஆகும். காமத்தை தலைக்கு கொண்டு போகாதிற்கள்!

என்னுடய பதிலுரை தங்களை பதிலுக்கு புண்படுத்தவேண்டும் எனபது அல்ல ! உங்களுடய பின்னுட்டங்கள் கண்டிப்பாக எனக்கு த் தேவை

மிகவும் நன்றி ஐயா , மீண்டும் மீண்டும் வருக

sankar dubai said...

என்து வாத்தியாரும் ஒரு கேள்வி கேட்டார்.
உலகிலேயே பெரிய அறிவாளி யார்? என கேட்டார்.அதற்கு நான் நீங்கள்தான் என்று சொன்னேன்.ஏனென்றால் நான் பொய் மட்டுமே பேசக்கூடியவன்.

Subramanian said...

//உங்களுடைய இந்த பின்னூட்டம் மற்றவர்களை ஓஷோ மற்றகருத்துக்களையும் படிக்க தூண்டலாம்//----
//இவ்வளவு காலம் கடந்தும் காமம் தங்களை பாடாய் படுத்துகிறது , ஏன் அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எதிர்மறையாகவேனும் , இது உண்னா விரதம் இருப்பவன் உணவை பற்றியே சிந்திப்பது போல ஆகும். காமத்தை தலைக்கு கொண்டு போகாதிர்கள்!//
ஓஷோவின் அருமையான கருத்துக்களை மற்றவர்கள் என்ன உலகிலுள்ள அனைவருமே படித்துப் பயன் பெற வேண்டும் என்பது என் போன்ற முதியவர்களின் ஆசை.
ஆனால் தாங்கள் பதிந்துள்ள பதிவுகளில் காமம் கலக்காத ஒன்றேனும் உண்டா?
எனது வயதை மறைமுகமாகக்க் குறிப்பிட்டு காமம் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது எனக் கூறியிருக்கிறீர்கள்.
என் பின்னூட்டம் தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் சினமூட்டியிருக்கிறது என்பது தெளிவாகிறது.எனக்கு இது போதும்.இனி ஓஷோவின் மகத்தான கருத்துக்களைப் பதிவீர்கள் என நம்பலாம்.
நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
கனியிருக்கக் காயை ஏன் கவருகிறீர்கள்?
" ஒரு துளி பாம்பின் விஷத்துடன் மூன்றாயிரம் துளி நீரைச் சேர்த்தால் அது விஷத்தை முறிக்கும்
சிறந்த மருந்தாகிவிடுகிறது." இது ஓஷோ சொன்னது.காமத்தைப் பொருத்தவரை இதைத் தான் அவர் போதித்தார்.
1985ம் ஆண்டு பிற்பகுதியில் நான் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஓஷோ அவர்களின் தினசரி உரையை சில தினங்கள் நேரில் கேட்கும் வாய்ப்பு பெற்றவன்.என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்பவன்.என் பின்னோட்டத்திற்கு நீங்களும்,பேராசிரியர் அவர்களும் பதிலளித்தமைக்கு ந்ன்றி.உங்கள் கருத்துகள் என்னைக் காயப்படுத்தவில்லை.
உளியால் கல்லைச் செதுக்குவது கல்லைக் காயப்படுத்த அல்ல.அதனுள் உறைந்திருக்கும் சிலையை வெளிப்படுத்த.

ஆனந்த் நிருப் said...

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி , நான் மிகவும் வருந்துகிறேன் தங்களின் வயது குறித்து நான் வேடிக்கையாக ஏழுதியதற்க்காக , இனிமேல் எத்தகைய கடும் தாக்குதல்கள் தங்களைப் போல நல்ல அனுபவமுள்ள பெரியவர்களிடம் இருந்து வந்தாலும் இன்முகத்துடன் ஏற்று கொள்வேன்…

அடிப்படையில் ஓஷோவின் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற அளவில்லா ஆதங்கம் தங்களிடம் தெரிகிறது , அந்த உணர்வை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் ..

அதேவேலையில் என்னுடைய ஆனந்தமும் அதுதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் …

தொடக்கம் முக்கியம் என்பதை தாங்கள் உணராதவரல்ல! இது ஒரு முயற்ச்சியே , இதற்க்கு முன்பே நான் இந்த தளத்தை எவ்வாறு கொண்டு போக வேண்டும் என்ற எனது எண்ணத்தை ஒரு பின்னுட்டத்தில் எழுதியிருந்தேன்.. மேலும் தியானச் செய்திகள் மற்றும் ஓஷோவின் மற்ற கருத்துக்களும் இடம் பிடிக்க ஆரம்பித்திருப்பது தங்களுக்கே தெரியும்.

இதுவரை தமிழில் மொழிபெயற்க்கப்படாத மற்ற விஷயங்களும் விரைவில் இடம் பெரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .. அதுவரை இப்படியே செல்லட்டுமே!

மேலும் இந்த தளம் தங்களைப்போல அனுபவமிக்க பெரியவர்களை அடையாளம் கான உதவியது குறித்து மகிழ்ச்சியே.. நீங்களும் இந்த தளத்தில் ஓஷோவை ப் பற்றிய தங்களுடைய அனுபவத்தை எழுத அழைக்கிறேன்..