Thursday, June 21, 2007

திருடும் கலை ….. தொடர்ச்சி

மகன் “ எங்கிருந்து எனக்கு தொன்றியது என்பது தெரியவில்லை ! ஒரு உள்ளுணர்வு என்னை இயக்கியது ! கண்டிப்பாக அது மனதில் இருந்து வெளிப்படவில்லை! நான் அதன்படியே நடக்கலானேன் . தீடிரேன நான் பூனை போல் உள்ளிருந்து சத்தமிட்டேன் அதை கேட்டு பீரோ வின் கதவை யாரோ திறப்பது தெரிந்தது திறக்கும் வரை காத்திருந்தேன் ஒரு பூனையை எதிர்பார்த்து ஒரு பெண் மிகவும் அலட்ச்சியமாக கையில் மெழுகுவர்த்தியுடன் நின்றிருந்தாள். முதல் வேலையாக அதை ஊதி அனைத்துவிட்டு நான் ஓடலானேன் அவர்கள் சுதாரித்துக் கொண்டு என்னை துரத்தினார்கள் , என்னை விடாமல் துரத்தினார்கள் , நானும் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினேன் இருப்பினும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது , வழியில் ஒரு கிணறு தென் பட்டது, அதன் அருகில் ஒரு பெரிய கல்லும் இருந்தது , அதை சாதாரணமாக தூக்கமுடியாது இருப்பினும் என்னால் எப்படி அந்த் கணத்தில் அதை தூக்கமுடிந்தது என்பதனை நான் அறியேன் அதை தூக்கி அந்த கிணற்றில் வீசினேன் . என்னை துரத்தியவர்கள் நான் கிணற்றில் விழுந்துவிட்டதாக நினைத்திருக்ககூடும் . அவர்கள் கிணற்றடியிலே நின்று விட்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நான் சுலபமாக தப்பிக்க முடிந்தது” என்றான்.

தந்தை “ இது தான் நான் உனக்கு கற்பிக்கிருந்த பாடம் , உள்ளுணர்வுடன் எவ்வாறு செயல் படுவது எண்பதை பற்றித்தான். இனி நீ தனியாக நாளை முதல் செல்லலாம் “ என்றார்

ஓஷோ :” உனது வாழ்க்கை ஆபத்தில் இருக்கும் போது உன்னுடைய முழு சக்தியையும் உன்னால் உபயோகிக்க முடியும் , அப்போது நீ மேலோட்டமாக வாழ்வதில்லை “

No comments: