Thursday, June 21, 2007

திருடும் கலை I

ஜப்பானில் ஒரு மிகத் திறமையான திருடர் வாழ்ந்து வந்தார், அவரை பற்றி அந்த நாட்டில் உள்ள அனைவரும் அறிந்திருந்தனர் – ஆனால் ஒரு முறை கூட அவர் பிடிபட்டதில்லை – இதற்க்கும் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் தான் தான் திருடியது என்பதை உணர்த்த தடயங்களையும் விட்டு வருவார் , ஆயினும் அவரை ஒரு முறை கூட பிடிக்கமுடியவில்லை. அரசனின் அரண்மனை கருவூலம் உட்பட அவர் திருடியது அனைத்தும் மிக புகழ் பெற்ற இடங்களே – சாதாரண இடங்களில் அவர் திருடுவதில்லை , எனவே அவர் ஒரு மிகவும் புகழ் பெற்ற திருடனாகவே வாழ்ந்து வந்தார்.

ஆனால் அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது . ஒரு நாள் அவரது வாலிப வயது மகன் “ அப்பா! தங்களுக்கு மிகவும் வயதாகி விட்டது அதனால் நீங்கள் தங்களது இந்த் திருடும் கலையை எனக்கு சொல்லித்தாருங்கள் , நானும் இந்த கலையை கற்றுக் கொள்கிறேன்” என்றான்.

அதற்க்கு அந்த திருடர் “ இன்று இரவே என்னுடன் வா! நீ தெரிந்து கொள்வாய், நான் இதை உனக்கு சொல்லித் தர இயலாது. ஆனால் நீ அறிவுள்ளவனாக இருந்தால் நீ இந்த கலையை கற்றுக் கொள்வாய் – இது சொல்லிதந்து கற்றுக்கொள்ள கூடிய கலையல்ல , எனவே இன்று இரவு என்னுடன் வா “ என்றார்.

இரவு வந்தது,அவர்கள் இருவரும் ஒரு மாளிகையை தேர்ந்தெடுத்து திருட சென்றனர் . மகன் நடு நடுங்கிய வாறே தந்தையுடன் சென்றான் . அவனது தந்தையோ அந்த வயதிலும் எந்த வித நடுக்கமும் இல்லாமல் கதவை சத்தமில்லாமல் உடைத்தார், அதன் வழியே இருட்டிலும் ஏதோ அவருடைய வீட்டில் நடப்பது போல் மிகச்சாதாரணமாக நுழைந்தார் எந்த பொருளின் மீதும் இடிக்காமல், சத்தமெழுப்பாமல் பூனை போல் நடந்து மிகப் பெரிய ஒரு பீரோவை அடைந்தார் , அதை அடைந்ததும் தனது மகனை கூப்பிட்டு “ உள்ளே என்ன திருடலாம் எனபதனை பார்த்து வா”என்று ச் சொன்னார் மகனும் நடுங்கிய வாரே அதனுள் சென்றான். அவன் உள் சென்றதும் அந்த திருடர் வெளிப்புறமாக அதை பூட்டிவிட்டு “திருடன்! திருடன் !எல்லோரும் எழுந்திருங்கள் !“ என்று குரல் கொடுத்தவாரே அந்த இடத்தை விட்டு தப்பி விட்டார்.

மகனின் நிலையோ மிகவும் சிக்கலாக இருந்தது என்ன தந்தை இவர் தொழில் கற்று தா என்று கேட்டதற்க்கு இப்படி என்னை மாட்டிவிட்டாறே , வெளியில் வேறு பூட்டிவிட்டதால் எப்படி தப்பிக்க முடியும் என நினைக்கலானான். வீட்டில் உள்ள அனைவரும் வேறு விழித்து விட்டனர் அனைவரும் திருடன் எங்கே என தேடிக்கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து எப்படியோ தப்பித்து தனது வீட்டிற்க்கு சென்றான் அங்கு அவனது தந்தை எந்த வித கவலையும் இன்றி குரட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார் . மகன் தனது தந்தையை பிடித்து உழுக்கி எழுப்பி “ என்ன முட்டாள்தனமான வேலையை செய்து விட்டீர்கள் இதுவா தாங்கள் கற்று தரும் இலட்சனம் “ எனக் கேட்டான்.

அவன் தந்தையோ எந்தவித சலனுமும் இன்றி “ ஆக தப்பித்து விட்டாய் ! அப்படியானால் உனக்கு அந்த கலை வந்து விட்டது ! இனி அதைப் பற்றிய பேச்சு வேண்டாம் போய் படுத்துறங்கு , எனக்கு தூக்கம் வருகிறது “என்றார்.

மகன் “ எனக்கு எப்படி தப்பித்தேன் என்பதனை சொல்லா விட்டால் தூக்கம் வராது , அதனால் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் “ என்றான்

தந்தை “ உனக்கு சொல்ல வேண்டும் என்றால் சொல் ! எனக்கு அது அவசியமில்லை ! என்னைப் பொருத்தவரை உனக்கு திருடர்களுக்கு தேவையான விழிப்புணர்வு வந்து விட்டது(உள்ளுணர்வு ) , அதற்க்கு நீ தப்பி வந்ததே சாட்சி , அதற்க்காக நான் மகிழ்கிறேன்! இப்போது சொல் எப்படி தப்பினாய் ? “ ( எப்படி தப்பினான் என்பதை தேவைப்பட்டால் பிறகு எழுதுகிறேன்)

ஒருவகையில் தியானமும் திருட்டைப் போலதான்

ஓஷோ (: taken from – Be still and know chapter #9)

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

எப்படிங்க தப்பிச்சான்?

வெங்கட்ராமன் said...

எப்படிங்க தப்பிச்சான்?