குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோட் அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாண்ம் போட்டுவிட்ட்ச் சென்றுவிட்டது.
சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாண்த்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாண்த்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.
ஓஷோ சொல்கிறார்
இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.
ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு: உன்னை சாண்த்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை
மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாண்த்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.
ஓஷோவின் குட்டிக் கதைகள்
Friday, June 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
mm. thodarunkal.
amazing site..! thamizh la ippadipatta blog irukarathu ippo than parkaren.thank u :)
no update still? Awaiting :)
ஆனந்த்
ஓஷோ காமத்தை வைத்து மட்டும் தான் வாழ்வியலை விளக்கி இருக்கிறாரா? அவருடைய முக்கியமான தத்துவங்கள் என்ன என்பதை விளக்கினால் நன்றாக இருக்குமே?..
ஓஷொ பற்றி தெரியாத என்னை போன்றோருக்கு அவர் வாழ்கையை பற்றி சுருக்கமாக விளக்கி விட்டு தத்துவங்களை கூற ஆரம்பித்தால்.. மேற்கண்டதை போன்ற கேள்விகளை தவிர்க்கலாம் அல்லவா?
மாயன் அவர்களுக்கு
ஓஷோ காமத்தைப்பற்றி மட்டும் சொல்லவில்லை , அவர் பேசிய பேச்சுக்கள் 650 ஆங்கில புத்தகங்களாக வந்துள்ளன,.அவை கிழ்கண்டவாரு வகைப்படுத்தலாம்
புத்தரைப்பற்றி
யோகா
கிருஷ்ணா
மேற்க்கத்திய ஆன்மிக குருக்கள்
தியானத்தைப் பற்றி
கபீர்
ஜேன்
தவோ
கிருஷ்தவம் பற்றி
உட்பட பல் வேறு தலைப்புகளில் வகைப்படுத்தலாம்
மேற் சொன்ன அனைத்து பகுதிகளிலிருந்தும் நாம் இடுகைகளை பதியலாம் - ஆனால் அவரை ப் பற்றிய முழுமையான தகவல்கள் ஒரே சமயத்தில் இடம் பெற வைப்பது இந்த வலைப்பில் சாத்தியமாகப்படவில்லை , ஏதொ ஒரு இடத்திலிருந்து தான் தொடங்க வேண்டீருக்கிறது. ஒவ்வொரு இடுகைகள் வரும் போதும் அது சார்ந்த சாயல்கள் தென்படுவது தவிர்க்கமுடியாதாகிவிடிடுகிறது...
இந்த இடுகைகள் ஓஷோவின் புத்தகங்களை படிக்கத்தூண்டும் ஒரு ஊக்கியாக இருந்தால் அதுவே போதுமானதாகும் .. தங்களுக்கு தேவையான தலைப்பை கேளுங்கள் அதற்க்குண்டான புத்தகங்கள் இருந்தால் பகிர்கிறேன் அல்லது பரிந்துரைக்கிறேன்
நன்றி
மாயன் அவர்களுக்கு,
ஓஷோ வாழ்வியலைப் பற்றி தத்துவங்கள் சொல்லவில்லை , வாழுவதற்க்கான வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார், அவர் பரிந்துரைத்த தியான முறைகள் மற்றும் கருத்துக்கள் நீஙகள் நீங்களாக வாழ்வதற்க்கு உதவும் மற்றபடி அவர் தனியாக தத்துவங்களைப் போதிக்கவில்லை அவ்ர் மற்ற தத்துவங்களை ப் பற்றி பேசி இருக்கிறார் அவைகளை பின்பற்றுவதால் வரும் சுதந்திரமற்ற தன்மையைப் பேசி இருக்கிறார்- அவருடைய கருத்துக்கள் மற்றும் தியான முறைகள் நீங்கள் பின்பற்றும் தத்துவங்கள் மற்றும் மதம் ஆகிய சிறைகளிலிருந்து விடுபட உதவும். அதை தவிர்த்து ஓஷோவின் கருத்துக்களை தத்துவங்களாக பார்த்தோமானால் மேலும் இது சிறையாகக் கூடும்
அவருடைய வாழ்க்கை - சிறு குறிப்பு விரைவில் இடம் பெரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
Post a Comment