Wednesday, June 20, 2007

பிரார்த்தணை , தியானம் மற்றும் பகுத்தறிவு எது மிகவும் அபத்தம் ?

பிரார்த்தணை பற்றிய எனது பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களின் தொகுப்பு

Voice on Wings said...
உங்களது இடுகைகளைப் படித்து வருகிறேன். ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்ற அளவில் உங்களுக்கு வெற்றிதான். குறிப்பாக, மதங்கள் / புனிதங்கள் / (அரசியல் கட்சி போன்ற) நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கல்லெறிவது (அல்லது உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் 'பாட்டு பாடுவது :)) என்ற அளவில் முழு உடன்பாடு. ஆனால், நீங்களும் உங்கள் அமைப்பும் மீண்டும் தியானம், குண்டலினி, ஆள் சேர்ப்பு என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் அனைத்து குணாதிசயங்களுடன் செயல்படுவதைப் பார்க்கும்போது, உங்கள் அமைப்புக்கும் சில கற்கள் / பாடல்களைப் பெறுவதற்கான தகுதி வந்து விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தியானம், chakra breathing இவற்றையெல்லாம் செய்யாமலே மனிதனால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்கிறேன்.
11:25:00 AM
ஆனந்த் நிருப் said...
இந்த பதிவகள் ஆள் சேர்ப்பு வேலைகளுக்கல்ல ! அதன் அவசியம் எனக்கிறுப்பதில்லை! இந்த பதிவுகள் தேவை உள்ளவர்களுக்கு பயன் அளித்தால் அதுவே போதும், சில பேருக்கு விஷய ஞானம் போதுமானது, அனுபவம்( தியான ) தேடும் சிலருக்கு மற்ற பதிவுகள் உபயோகபடட்டும் , எனக்குத் தெரிந்து ஓஷோவின் தியான முகாம் மற்றும் தியானம் எங்கு நடைபெருகிறது எனும் தகவல் பலருக்கு உபயோகமாக உள்ளது அதனால் அதன் செய்திகளை இடுகிறேன். ஓஷோவில் அமைப்பு (it is not a religious organaisation )என்று எதுவும் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு தனி மனிதன் மட்டுமே! மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு தியானம் என்பது இல்லாமலே தாங்கள் உண்மையான மகிழ்ச்சியொடு இருந்தால் ( இது இருட்டில் செல்பவன் தனக்கு பயம் இல்லை என்று சொல்வது போல் அல்லாமல் இருந்தால் )
8:05:00 PM
Voice on Wings said...
உங்களைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. (அவ்வாறு நினைத்து விட்டது போலத் தெரிவதால் இதைத் தெளிவுப் படுத்துகிறேன்.)உலக நடப்புகளைப் பற்றி பகுத்தறிவுடன் அணுகும் அதே நேரத்தில், நீங்கள் சாடும் 'பிரார்த்தனை'யை விட அபத்தமான செயல்களைப் பரிந்துரைப்பது போலிருந்ததால், எனது நேர்மையான கருத்துகளை வெளியிடத் தோன்றியது. எனது மகிழ்ச்சியின் நிலவரம் குறித்து நான் எதுவும் கூறவில்லை, அதற்கு இங்கு தேவையிருப்பதாகவும் நினைக்கவில்லை. தியானம், சுழற்சி (whirling), சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுவதால் இல்லாத மகிழ்ச்சியை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தை நான் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன், அவ்வளவே.
8:37:00 PM
ஆனந்த் நிருப் said...
voice on wings அவர்களுக்கு , நான் புன்படவும் இல்லை, என்னை பொருத்தவரை பகுத்தறிவு என்பது சோதனைக்கு உட்பட்டது , எல்லாவிதமான அறவியல் கண்டுபிடிப்புகளுமே சோதனை மூலமாகத்தான் உறுதிசெய்யப்பட்டது என்பது தாங்கள் அறியாததல்ல - இந்த ஓஷோவின் முறைகள் - தாங்கள் சோதித்து அறிவதற்க்கு உட்பட்டது - அதற்க்கு எந்த வித நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியது இல்லை- சோதித்து அறியாமல் கேள்விக்கு உட்படுத்த படுவது சர்க்கரை இனிக்கும்( அதை சுவைக்காமலே ) என்பதை கேள்விக்கு உட்படுத்துவதைப் போன்றது என்பது எனது தாழ்மையான கருத்து! இதை நியாயமான எந்த பகுத்தறிவு வாதியும் செய்யமாட்டார். ஒவ்வொறு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது அறிவியலின் அடிப்படை கருத்தல்லவா? அப்படியானல் நீங்கள் அதை கேள்விக்கு உட்படுத்துவீர்களா ? இந்தச் சுழற்ச்சி/ சக்ரா பிரித்திங் போன்ற விஷயங்களில் நான் கடவுள் உனக்கு அது தருவார் இது தருவார் என்று நான் கூறியிருந்த்தால் அது அபத்தம் , நான் நீங்கள் செய்யும் இந்த செயல் முறை தியானங்கள் தங்களுக்குள் அமைதி ஏற்படுத்தும் என்று தானே சொன்னேன் இது எவ்வகையில் அபத்தம்! பகுத்தறிவு என்ற போர்வைவில் யாரோ சொன்ன கருத்தை மூட நம்பிக்கையாய் பின்பற்றுவதை விட இது அபத்தமா ?( அவர்கள் கடவுள் என்ற உருவமற்றதை நம்புகிறார்கள் - நீங்கள் ஒரு மறைந்த பெரியவரை நம்புகிறீர்கள் எனக்கு விதயாசம் தெரியவில்லை - உங்களுடைய சொந்த அறிவின் மூலம் நீங்கள் எதை பகுத்தறிந்தீர்கள் எனபதே எனது கேள்வி ) நான் யாரையும் புண்படுத்தவில்லை! எனக்கு மகிழ்ச்சி தந்தது என்பதை எப்படி கேள்விக்கு உட்படுத்தமுடியும்! இது தங்களுக்கே அபத்தமாக இல்லையா ? தங்களுக்கு மாறுதல் தருகிறதா என்பதை பகுத்தறிய! நீந்கள்தான் சோதித்து பார்க்கவேண்டும் அதற்க்கான முறைகள் வேண்டுமானால் என்னால் பதிய முடியும்
10:18:00 PM
ஆனந்த் நிருப் said...
மிகவும் நன்றி! இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டும் கேள்வியில்லாமல் ஞானம் பிறப்பதில்லை



ஞாயமான (தனிமனித தாக்குதல் அற்ற ) கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது - இது எனக்கும் படிப்பவர்களுக்கும் இன்னும் ஒரு விளக்கமாகவும் இருக்கலாம்

9 comments:

Anonymous said...

Yov nee nallavanaa ? kettavanaa ? ellarukittayum vaankikattikira ?

Voice on Wings said...

உங்களுக்கு விடையளிக்க வேண்டுமென்றிருந்தேன். தனி இடுகையாகவே தொகுத்து வழங்கி விட்டீர்கள் :)

//இந்த ஓஷோவின் முறைகள் - தாங்கள் சோதித்து அறிவதற்க்கு உட்பட்டது - அதற்க்கு எந்த வித நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியது இல்லை- சோதித்து அறியாமல் கேள்விக்கு உட்படுத்த படுவது சர்க்கரை இனிக்கும்( அதை சுவைக்காமலே ) என்பதை கேள்விக்கு உட்படுத்துவதைப் போன்றது என்பது எனது தாழ்மையான கருத்து!//

சர்க்கரை இனிக்கும் என்பதை சோதித்துத் தெரிந்து கொள்ளலாம். நெருப்பு சுடும் என்பதை சோதித்தும் தெரிந்து கொள்ளலாம், அல்லது அறிவியல் ரீதியாகவும் அந்த முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது (ஒரு 500+ டிகிரி வெப்பம் உள்ள ஒன்றை தொட்டால் என்னவாகும் என்பதைத் தொட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை). ஆனால், சில சோதனைகள் தவறான முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளைத் தரக்கூடியவை. உ-ம், ஒரு பொருளை உட்கொண்டால் ஆகாயத்தில் பறக்கலாம் என்று கூறிக் கொண்டு அதை சோதனை செய்து பார்த்து, அது உண்மை என்று நம்புவதற்கான சாத்தியமும் உள்ளது. மற்றவருக்குத்தான் தெரியும் நாம் தரையிலிருந்து ஒரு அங்குலம் கூட எழவில்லை என்ற உண்மை.

நீங்கள் குறிப்பிடும் ஓஷோ முறைகளை உடற்பயிற்சி என்ற அளவில் ஒப்புக் கொள்கிறேன். அதனால் கிட்டக்கூடிய உடல் சார்ந்த ஆதாயங்களை மறுப்பதற்கில்லை. ஆனால் மன அமைதிக்கான வழியாக அது சந்தைப்படுத்தப் படுவதையே நான் விமர்சிக்கிறேன். மற்றும் குண்டலினி போன்ற நம்பிக்கைகள் (நான் படித்த வரையிலாவது) விஞ்ஞான அடிப்படையற்றவை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். மருத்துவம் படித்தவர்கள் இதை உறுதி செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

//பகுத்தறிவு என்ற போர்வைவில் யாரோ சொன்ன கருத்தை மூட நம்பிக்கையாய் பின்பற்றுவதை விட இது அபத்தமா ?( அவர்கள் கடவுள் என்ற உருவமற்றதை நம்புகிறார்கள் - நீங்கள் ஒரு மறைந்த பெரியவரை நம்புகிறீர்கள் எனக்கு விதயாசம் தெரியவில்லை - உங்களுடைய சொந்த அறிவின் மூலம் நீங்கள் எதைபகுத்தறிந்தீர்கள் எனபதே எனது கேள்வி )//

நான் 'பகுத்தறிவு' என்று குறிப்பிட்டது rational என்ற ஆங்கில சொல்லைத் தமிழ்ப்படுத்தியே. அந்தப் பெயரைக் கொண்ட அரசியல் இயக்கத்தை முன்வைத்தல்ல. அதன் மீதும் எனக்கும் விமர்சனங்களிருப்பதால், யார் சொல்வதையும் மூட நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளும் நிலையில் நானில்லை. சொல்லப்போனால், அதை உங்கள் இடுகைகளுக்கு ஒரு compliment ஆகவே குறிப்பிட்டேன். Rationalஆன கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டே மறுபக்கம் குண்டலினி, தியானம், சுழற்சி, என்று விஞ்ஞானத்திற்கு எதிரான செயல்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதிலுள்ள முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே அந்த சொல்லைப் பயன்படுத்தினேன்.

மன அமைதி பற்றி - வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. கவலைப்படுவது தவறல்ல, அது மனித இயற்கையே. நமது கவலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது நம்மால் சாத்தியமானதே. மன வலிமை, தன்னம்பிக்கை போன்ற காரணிகளை உக்குவித்து ஒருவரை கவலைப்படும் மனநிலையிலிருந்து மீட்டெடுக்கலாம். தியானம் செய்வதைவிட இந்த அணுகுமுறையை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

ஆனந்த் நிருப் said...

எதிர் வாதம் புரிவது எனது நொக்கமில்லை, ஆனால் இந்த விவாதம் ஆக்கபூர்வமாக பயனிப்பதை காண்கிறேன் அதானால் மீண்டும் எனது பதிலுறையை இங்கு சமர்ப்பிக்கிறேன்!

மேலும் தங்களுக்கு மிகவும் நன்றி - மிகவும் ஆரோக்கியமான முறையில் ஆக்கப்பூர்வமான- சிரத்தையுடன் தாங்கள் இடும் பின்னுட்டங்களுக்கு.

//(ஒரு 500+ டிகிரி வெப்பம் உள்ள ஒன்றை தொட்டால் என்னவாகும் என்பதைத் தொட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை). ஆனால், சில சோதனைகள் தவறான முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளைத் தரக்கூடியவை. உ-ம், ஒரு பொருளை உட்கொண்டால் ஆகாயத்தில் பறக்கலாம் என்று கூறிக் கொண்டு அதை சோதனை செய்து பார்த்து, அது உண்மை என்று நம்புவதற்கான சாத்தியமும் உள்ளது. மற்றவருக்குத்தான் தெரியும் நாம் தரையிலிருந்து ஒரு அங்குலம் கூட எழவில்லை என்ற உண்மை.//

ஆக தாங்கள் இது அபத்தம் என்ற கருத்திலிருந்து விலகி , இது 500+ டிகிரி வெப்பத்திற்க்கு ஒப்பானது அதனால் அதைத் தொட சிலரின் சிபாரிசுகள் தேவை எனற அளவில் வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியே ! நண்பரே 500+டிகிரி வெப்பம் தருவதாக இருந்தால் அதை செய்தவர்கள் மடிந்திருப்பார்கள் , ஆனால் அவ்வாறு நடக்காமல் நடந்து விடுமோ என்பது தேவையற்ற பயம் மட்டுமே மேலும் மருத்துவர்களின் ஆராய்ச்சி அனுபவங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தீர்கள் அதற்க்கான links : http://www.activemeditation.com/Research/Articles/Icing.html


//நீங்கள் குறிப்பிடும் ஓஷோ முறைகளை உடற்பயிற்சி என்ற அளவில் ஒப்புக் கொள்கிறேன். அதனால் கிட்டக்கூடிய உடல் சார்ந்த ஆதாயங்களை மறுப்பதற்கில்லை. ஆனால் மன அமைதிக்கான வழியாக அது சந்தைப்படுத்தப் படுவதையே நான் விமர்சிக்கிறேன். மற்றும் குண்டலினி போன்ற நம்பிக்கைகள் (நான் படித்த வரையிலாவது) விஞ்ஞான அடிப்படையற்றவை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். மருத்துவம் படித்தவர்கள் இதை உறுதி செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.//

நீங்கள் குறிப்பிட்டது போல் ஓஷோவின் முறைகள் மிக சிறந்த உடற்பயிற்ச்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் இந்த மனமும் நம் உடலில் தானே உள்ளது ?

மேலும் விஞ்ஞானயியல் என்பது ( Known ) மட்டுமே , நமக்கு இதுவரை ஆராய்ந்து கூறியவற்றை( யாரோ) மட்டுமே விஞ்ஞானம் என்கிறோம் , ஒவ்வொன்றும் உறுதி செய்யப்படுவதற்க்கு முன்பு அவை வெரும் நம்பிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொள்ள பட்டிருந்தன ( unknown ), மேலும் விஞ்ஞான முடிவுகள் மாறுதலுக்கு உட்பட்டது என்பதும் தாங்கள் அறியாததல்ல ( பல்வேறு சமயங்களில் அவை மாறி வந்திருக்கின்றன) எனவே விஞ்ஞானமே தற்ப்போதைய உண்மை என்று எடுத்து கொள்ளலாமே தவிர (Relative truth , it is not ultimate truth ) அது எப்போதும் உண்மை என்று எப்போதும் ஆகாது , எனவே தாங்கள் அடிப்படையாக எடுத்துக் கொள்ளும் விரும்பும் விஷயமே அடிப்படை அற்றது என்பதனை உணர்வீர்களா ? தாங்கள் எதற்க்கும் www.osho.com சென்று தியானமுறைகள் பற்றிய வீடியோ படத்துடன் கூடிய விளக்கத்தை கண்டு வாருங்கள்

//மன அமைதி பற்றி - வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. கவலைப்படுவது தவறல்ல, அது மனித இயற்கையே. நமது கவலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது நம்மால் சாத்தியமானதே. மன வலிமை, தன்னம்பிக்கை போன்ற காரணிகளை உக்குவித்து ஒருவரை கவலைப்படும் மனநிலையிலிருந்து மீட்டெடுக்கலாம். தியானம் செய்வதைவிட இந்த அணுகுமுறையை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்//

மனம் என்ப்தே ஒரு குழப்பம் அதை வலிமைப்படுத்துவது எவ்வாறு ? இது இருட்டை விரட்ட ( கவலையை ) இருட்டுடனே போரிடுவது போல் ஆகாதா ? இருட்டை விரட்ட வெளிச்சம் போன்றது தியானம்

மேலும் தங்களது ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்கள் தொடரட்டும் , நன்றி

வணக்கத்துடன்

Osai Chella said...

நிரூப் முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஓஷோ எதையும் புதிதாகச் சொல்லவில்லை என்பதே. அவர் நான் பகுத்தறிவு வாதியாக இருப்பதற்கும் சுதந்திரம் வேண்டும் என்கிறார். மற்றபடி குண்டலினி ஏழு சக்கரம் எல்லாம் சரியான கப்ஸா என்பதுஎனது தாழ்மையான கருத்து. அது அறிவியல் பூர்வமானதும் அல்ல!

மற்றபடி ஓஷோவின் பெயரால் வியாபாரங்கள் அங்கங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவரே கம்யூனால் ஒரு ட்ரேட் மார்க் ஆக்கப்பட்டார் என்பதும் தாங்கள் அறியாதது அல்ல!

Voice on Wings said...

நண்பரே, நான் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் (திரித்துக் கூறவில்லை என்று நம்புகிறேன்). யாராவது சிபாரிசு செய்தால் உங்கள் சித்தாந்தங்களை ஒப்புக் கொள்கிறேன் என்று ஒரு போதும் கூறவில்லை. 'குண்டலினி' போன்ற நம்பிக்கைகளுக்கு அறிவியல் அடிப்படையில்லை என்ற எனது கருத்தை உறுதி செய்யுமாறு மருத்துவம் படித்தவர்களிடம் கோரிக்கை வைத்தேன். நீங்கள் கொடுத்த active meditation சுட்டியை பிறகு படித்துப் பார்க்கிறேன். இருந்தாலும், அதை ஒரு தனிமனிதரின் கருத்தாகவே என்னால் எடுத்துக் கொள்ள முடியும், மருத்துவத் துறையின் அங்கீகாரமாக அல்ல.

நான் கொடுத்த 'நெருப்பு' உதாரணத்தையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள். நான் உங்கள் முறைகளை நெருப்புக் சமமாகக் கருதி கருத்து தெரிவிக்கவில்லை. 'சோதனை செய்து அறிவது' என்பதன் வரம்புகளை உணர்த்தவே அந்த உதாரணத்தையும், மற்றும் (மறைமுகமாக உணர்த்திய) போதைப்பொருள் உதாரணத்தையும் வழங்கினேன்.

எனது கீழ்க்கண்ட
//உ-ம், ஒரு பொருளை உட்கொண்டால் ஆகாயத்தில் பறக்கலாம் என்று கூறிக் கொண்டு அதை சோதனை செய்து பார்த்து, அது உண்மை என்று நம்புவதற்கான சாத்தியமும் உள்ளது. மற்றவருக்குத்தான் தெரியும் நாம் தரையிலிருந்து ஒரு அங்குலம் கூட எழவில்லை என்ற உண்மை.//
வரிகளை வசதியாக skip செய்து விட்டீர்கள்.
ஒரு போதைப் பொருளை உட்கொள்ளுவதால் கிடைக்கும் halucinatory அனுபவத்துக்கு நிகரானதாகவே எந்தவொரு ஆன்மீக அனுபவத்தையும் என்னால் பார்க்க முடிகிறது.

ஆனந்த் நிருப் said...

ஓசை செல்லாவிற்க்கு ! வண்க்கம்

ஓஷோவிடம் பிடித்ததே நம்ப முடியாதவற்றையும் நம்பும் படி ( லாஜிக்காக ) கூறுவதுதான்! எதற்க்கும் நீங்கள் அறிந்தவைகளுக்கும் அப்பால் (dimension beyaond Known ) என்ற புத்தகத்தை ஒரு முறை படியுங்களேன்..

//பகுத்தறிவு வாதியாக இருப்பதற்கும் சுதந்திரம் வேண்டும்// எனக்குத் தெரிந்து சுதந்திரமான பகுத்தறிவு வாதியை பார்க்கமுடியவில்லை ( பெரியாரை விடுத்து ) அவர் பெயர் சொல்லிக்கொண்டிருப்பதும் சுதந்தரத்தன்மை அற்றது தான் , நான் பெரியாரை பகுத்தறிவாளராக ஏற்று கொள்கிறேன் ஆனால் அவர் சொன்னது தான் பகுத்தறிவு என்ற மூடநம்பிக்கையின் மடமையைதான் நான் சாடுகிறேன்.//அது அறிவியல் பூர்வமானதும் அல்ல!// இதற்க்கு விளக்கம் எனது முந்தய பதிலுட்டத்தில் காண்கமற்றபடி

//ஓஷோவின் பெயரால் வியாபாரங்கள் அங்கங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவரே கம்யூனால் ஒரு ட்ரேட் மார்க் ஆக்கப்பட்டார் என்பதும் தாங்கள் அறியாதது அல்ல!//

நல்ல சரக்கு விலைபோவதில் தவறேன்ன ? வியாபாரம் என்பது செய்யக்கூடாத குற்றமா ? ஆனால் ஒன்று எனக்கு எந்த வியாபார நோக்கமும் இல்லை அது குற்றமில்லை என்ற போதும் , இப்பணி எனது பதில் நன்றி மட்டுமே

ஆனந்த் நிருப் said...

voice of wings அவர்களுக்கு நன்றி, என் வசதிக்காக பயன் படுத்த்வில்லை. தங்களின் வாதம் சென்ற தன்மையில் சென்றதால் வந்த விளைவு! அது இந்த பின்னுட்டங்களை படிப்பவர்களுக்கு பயன் பெற்றால் சரி , நாகரீகமான முறையில் ( மாற்று கருத்து இருந்தாலும் ) பின்னூட்டங்கள் இட்டமைக்காக மீண்டும் எனது நன்றி , உங்களது பின்னூட்டங்கள் விவாதிக்க ஒரு வாய்ப்பளித்தது ,

தங்களது வருகை எப்போதும் வரவேற்க்கபடுகிறது

வண்க்கம்

Osai Chella said...

நான் பகுத்தறிவு பற்றித்தான் சொன்னேன். பெரியாரை நான் சொல்லவிலை!

மற்றபடி நீங்கள் ஆயிரம் புத்தகங்களை படித்தாலும் ஓஷோ வைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் உங்களுக்கே தெரியும்.

மற்றபடி தியானத்திற்கும் வியாபாரத்திற்கும் வேறுபாடு உண்டு. ஒற்றுமையும்உண்டு.

வேறுபாடு = வியாபாரத்தில் அடுத்தவன் மனதை அறிவது (அ)வசியம்

ஒற்றுமை: இரண்டுமே ஒருவகையில் சுயநலமே!

Anonymous said...

All times truth makes certain pain but there is no way to escape. we should understand that.