Friday, July 13, 2007

அடக்க முடியாது

ஒரு சமயம் முல்லா, தம்முடைய அரச சபை அனுபவங்களைச் சீடர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்,
இளவரசரின் முன்னால் , வலிமையும், இளமையும் பெற்ற , முரட்டுத்தனமும்,முன் கோபமும் உடைய குதிரை ஒன்று நிறுத்தப்பட்டது. அக்குதிரையின் மேல் ஏறிச்சவாரி செய்யமுயன்ற வீரர்கள் எல்லாம் கீலே விழுந்து, காயமடைந்தனர்.

இதைக் கண்டு நான் சும்மா இருப்பேனா ? எனவே அவ்வீரர்களிடம் சென்று ,” இளைஞர்களே! உங்களால் இந்த குதிரையை அடக்க முடியாது! இதன் மேல் ஒரு நொடி கூட உட்கார முடியாது. தள்ளிச் செல்லுங்கள் “ என்று சொன்னேன்.

அதைக் கேட்டு வீரர்கள் விலகி நின்றனர். இளவரசர் என்னைப் பார்த்தார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் புன்னகை தவழ எழுந்த நான், குதிரையின் அருகில் சென்றேன் என்று சொல்லிய முல்லா சற்று நிறுத்தினார்.

முல்லா கூறியதை எல்லாம் கேட்ட சீடர்களில் ஒருவன் , “ பிறகு என்ன நடந்தது ? “ என்று கேட்டான்.

அதற்க்கு முல்லா , “ நான் சொன்னது மிகச் சரியாக இருந்தது ! என்னாலும் ஒரு நொடிகூட குதிரையின் மேல் உட்கார முடியவில்லை “ என்று பெருமையாக சொன்னார்

No comments: