Monday, July 23, 2007

முல்லாவின் ஆராய்ச்சி

முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது....

வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் " ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான் , நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் " என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்


-ஓஷோ

2 comments:

சிவபாலன் said...

Ha Ha Ha!

Excellent!

phoenix infomatix said...

தமிழ் தலைவா