முகாம் நடந்த இடம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8uvsq4EVqUIUd8Z72u2KowUxn-s4D8QO6f7GZWnxkFkLbLdRonfDbqytmeLJDWhr0P0jbXBU3sQHdoQEv27xiEqVsxLjk89sDrP6k2qAVF0qjV6YWM6RjROv9ZR1zogalgGZd/s400/camp01.jpg)
முகாமில் பங்கேற்றோர்!
அளவில்லா ஆனந்தம் ! ஆம் கோவை தியான முகாம் மிகவும் சிறப்பாகவும் மிகவும் ஆனந்தமாகவும் நடைபெற்றது, இந்த தியான முகாமிற்க்கு கோவை, திருப்பூர் மற்றும் தின்டுகல் ஆகிய ஊர்களில் இருந்து 71 பேர் கலந்து கொண்டனர்,
இந்த முகாமில் 3 வயது குழந்தை முதல் 63 வயது முதியவர்கள் வரை பங்குபெற்ற அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கல்ந்து கொண்டனர்.
இரம்மியமான சூழல் மற்றும் சுவை மிகுந்த உணவு மற்றும் சிறப்பான தியான முறைகள் என பங்குபெற்ற அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.
மேலும் இந்த மாதிரி குறைந்த கட்டணத்தில் தியான முகாம் மேலும் நடைபெறவேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
இந்த தியான முகாமிற்க்கு Sinora Ice Creame நிருவனத்தார் இலவசமாக ஐஸ் கிரீம் அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்கள்.
இந்த தியான முகாமிற்க்கு சுவாமி சத்த்யம் சுதர்மா, பிரேம் விபாவன் , பிரேம் டீப், பிரேம் நிரஞ்சன், ஞான் அனீக் , மணி , ஞான் ரிக்டா மற்றும் முக்கியமாக முத்தய்யா, தேவ் அஷிஸ் போன்றவர்கள் மிக அருமையான பங்களிப்பளித்தனர்.
கடைசி நேரத்தில் சுவாமி ஜீவன் அப்தகம் ( அதுதாங்க நம்ம ஓசை செல்லா) அவர்களும் கலந்து கொண்டார்.
இவர்கள் அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது நன்றியை காணிக்கையாக்குகிரோம்.
மேலும் இன்னும் அடிக்கடி இந்த மாதிரி சலுகை கட்டணத்தில் தியான முகாம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,
இப்படிக்கு
ஆனந் நிருப், பிரேம் விபாவன், முத்தையா மற்றும் ஆனந் கருநேஷ்
ஆனந் நிருப், பிரேம் விபாவன், முத்தையா மற்றும் ஆனந் கருநேஷ்
1 comment:
ஹாய் சன்யாசி ,
நீண்ட நாளாக ஓஷோ பற்றி தமிழ் செய்திகளை தேடிக்கொண்டு இருந்தேன்
உங்கள் பதிவை கண்டவுடன் ரொம்ப சந்தோசம், சென்னையில் உங்களின் தியான முகாம் நடக்கிறதா ?
Post a Comment