மாபெரும் ஞான குரு கிசானிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றும் ,கோசு என்பவரால் சமாதி நிலை அடைய முடியவில்லை.
கட்டுப்பாடுகள் பற்றிய ஏழு நாள் பயிற்சி முகாமிற்கு குரு ஏற்பாடு செய்திருந்தார் .கடைசியாகத் தனக்கு அந்த வாய்ப்பு அமையப் போகிறது என்று நினைத்தார் கோசு.
அப்போது அவர்,கோயிலின் உச்சிக்கு ஏறிச்சென்று,அங்கிருந்தபடி ஒரு சபதம் செய்தார்.
”என் கனவு நிறைவேற வேண்டும்.இல்லாவிட்டால்,என் உயிரற்ற உடல்தான் கீழே கிடக்கும்”,என்று கூவினார் அவர்.
உணவு,உறக்கமில்லாமல் அவர் அங்கே ஒரு வாரம் நின்று கொண்டிருந்தார். ”இவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு எதுவும் சித்திக்கவில்லையே! இது ஏன்?என் கர்ம பலன் தான் என்ன?”:என்று அங்கிருந்து கதற ஆரம்பித்தார்.
ஒன்றும் நிகழவில்லை.தாம் தோற்றுப்போனதை உண்ர்ந்த அவர்,கீழே எட்டிக் குதிக்க,ஒரு காலை மெதுவாகத் தூக்கினார்.
அந்தக் கணத்தில் அவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது.
ஆனந்தப் பெருக்கில் அவர் கீழே இறங்கி ஓடினார்.மழையில் நனைந்து கொண்டே குருவின் இல்லம் நோக்கி ஓடினார்.
குருவிடம் அவர் பேச வாய் திறப்பதற்குள்,குரு.’வாழ்க! நீ சாதித்து விட்டாய் ”என்று கூறினார்.
வெளிப்பிரதேசம் முடிந்து போன விஷயம்.அகம் உள்ளே இருக்கிறது.அந்த உலகை காண உங்கள் பார்வை மாறினால் போதும். - ஓஷோ
Wednesday, May 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment