Wednesday, May 07, 2008

வருமான வரி ;- ஓஷோ

நான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, நிர்வாகம் எனது சம்பளத்தை உயர்த்தித் தர விரும்பியது , நான் வேண்டாம் என மருத்துவிட்டேன். துனை-அரசரால் அதை நம்ப முடியவில்லை அவர் என்னைப் பார்த்துக் கேட்டார் “ ஏன் வேண்டாம் ? “

நான் “இப்பொழுது வாங்கும் சம்பளத்திற்க்கு மேல் உயர்த்தினால் நான் வருமான வரி கட்ட வேண்டியது வரும் , எனக்கு வரி விதித்தல் (taxation ) எனக்கு வெருப்பானது , அதற்க்கு பதில் நான் வருமானவரி உச்ச வரம்பிற்க்கு குறைவாகவே சம்பளம் பெற்றுக்கொள்கிறேன் “ என்றேன்
நான் அங்கு இருக்கும் வரை வருமானவரி உச்ச வரம்பைத்தாண்டி சம்பளம் பெறவில்லை.

நான் வருமானவரி கட்டியதேஇல்லை, உண்மையில் வ்ருமானமே இருந்ததில்லை . நான் இந்த உலகிற்க்கு கொடுத்துக்கொண்டே இருந்தேன் , இந்த உலகில் இருந்து எதையும் எடுத்துக்கொள்ளவில்லை, இது எனது வாழ்வின் வெளிப்பாடு , வருமானமல்ல , நான் கொடுத்ததெல்லாம் எனது இதயத்திலிருந்தும் இருப்பிலிருந்தும் (being ) தரப்பட்டது.

மலர்வதற்க்கு வரி விதித்தால் மலர்வது நின்றுவிடும்’பனிகளுக்கு வரிவிதித்தால் பொழிவது நின்றுவிடும். - osho
taken from
Glimpses of a Golden ChildhoodChapter #1

1 comment:

Voice on Wings said...

வரி விதிக்காமல் அந்தப் பல்கலைக் கழகத்தை எவ்வாறு துவங்கி நடத்தியிருக்க முடியும், அவரைப் போன்ற பேராசிரியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்கியிருக்க முடியும் என்பது பற்றி ஓஷோ எதாவது கருத்து தெரிவித்திருக்கிறாரா?