Wednesday, May 16, 2007

முல்லா


பறக்கும் யானை
முல்லா ஒரு முறை சர்க்கசில் வேலை செய்து கொன்டிறுந்தார் அப்போது அவர் ஒரு யானையை பயிர்ச்சியின் மூலம் ஒரு காலை தூக்கியபடி நிற்க்க பழக்கினார், சிறிது நம்பிக்கை வந்தது மேலும் யானைக்கு பயிற்ச்சி கொடுத்தார் யானை இரன்டு காலையும் தூக்கியபடி நின்றது, மேலும் பயிற்ச்சி கொடுத்தார் யானை முன்று கால்களையும் தூக்கியபடி நிற்க்க பழகியிருந்தது அதோடு விட்டாரா? அவருக்கு தன் பயிர்ச்சியின் மேல் அதிகப்படியான நம்பிக்கை பிறந்தது அதனால் அந்த பாவப்பட்ட யானயை அனைத்துகால்களயும் தூக்கவைக்கமுடியும் என்று! பாவம் யானை! அவர் தொடர்ந்து பயிர்ச்சி கொடுத்துகொன்டே இருந்தார் இது நடக்காத காரியம் என்று உணரும் வரை
உட்னே அவருக்கு ஒரு யோசனை ப்த்திரிக்கையில் ஒரு அறிவிப்பு செய்தார் " யார் எனது யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைக்கிறார்றோ அவறுக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும் அத்ற்க்கான் போட்டி கட்டணம் 100/- ரூபாய் "
போட்டிக்கு அதிகமான கூட்டம் கூடியது, பலர் பல்வேறு முறைகளில் முயற்ச்சித்தனர், சிலர் ஹிப்னாட்டிஷம்,யோகா என எனென்ன முறைகள் தங்களுக்கு தெரியுமோ அனைத்தயும் முயற்ச்சித்தனர் , ஆனால் யாராலும் யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைக்கமுடியாவில்லை, முல்லாவின் கல்லா நிரம்பியது அந்த சமயத்தில் ஒரு குட்டையான நபர் காரில் இருந்து இறங்கிவந்தார் " யார் எனக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்போவது, நான் யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைத்தால்?" என்றான்
முல்லா" நான் தான் , முதலில் போட்டிகட்டனம் செலுத்தவேண்டும் "
அந்த குட்டை மனிதர் தனது பாக்கட்டில் இருந்து 100/- ரூபாய் கொடுத்துவிட்டு தனது காரில் இருந்து ஒரு இரும்பு தடியை எடுத்தார், முல்லா இவன் என்ன புதிதாக செய்யபோகிறான் எத்தனயோ பேர் என்னெவெல்லமோ செய்து பார்த்துவிட்டார்கள் என்று யோசித்தார்.
அந்த குட்டை மனிதர் யானையின் முன் சென்றார் அதன் கண்களையே சிரிது நேரம் பார்த்தார், பின் நேராக யானையின் பின் சென்று அதன் கொட்டையில் ஒரு போடு போட்டார். யானை நான்கு கால்களையும் தூக்கி பிளிரிக்கொன்டு குதித்தது முல்லாவும் தான்!
முல்லா கண்னிர் விட்டார் அவர் 8,000 ரூபாய் தான் வசூல் செய்திருந்தார் தனது பணத்தை 2,000/ ருபாய் சேர்த்து அந்தகுட்டை மனிதனுக்கு கொடுத்தார் அவன் தன்னை ஏமற்றிவிட்டதாக நினைத்தார் அந்த பணதை எப்படியாவது திரும்ப சம்பாரிப்பது என உறுதி கொன்டார்
யானைகள் தனது தலையை மேலும் கிழூமாக தான் தலயை ஆட்டும் அவை பக்கவாட்டில் தலையை ஆட்டது என்பதை உணர்ந்தார். உடனே பத்திரிக்கையில் ஒரு அறிவிப்பு கொடுததார் " யார் தனது யானையை பக்கவாட்டில் தலயை ஆட்ட வைக்கிறார்களோ அவருக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும் அதற்க்கான் போட்டி கட்டணம் 100/- ரூபாய் மேலும் யாரும் யானயை அடிக்ககூடாது "
மீண்டும் மக்கள் குவிந்தனார், வந்தவர்கள் வழக்கம் போல் முல்லாவிற்க்கு கல்லா கட்டிகொண்டிருந்த்னர், யாரளும் யானையை பக்கவாட்டில் தலை ஆட்டவைக்கமுடியவில்லை அப்போது நமது குட்டை மனிதர் அதே போல் இரும்பு தடியுடன் வந்தார்
முல்லா இவன் இப்பொது என்ன செய்யமுடியும் என பார்த்தார் அவன் இவரிடம் வந்து இன்னும் நீ திருந்தவில்லையா ? நீ தான் பணம் தரப்போகிராயா? என்றான்.
முல்லா ஆமாம்! நான் தோற்த்தது அப்போது! விளம்பரத்தில் சொன்ன மாதிரி யானயை நீ அடிக்ககூடாது- போட்டிகட்டனம் ரூ 100/- என்றார்
குட்டை மனிதர் பணத்தை தந்து விட்டு தனது தடியுடன் யானயின் முன்னே சென்றார் அதன் கண்களை உற்று பார்த்தார் பின் அதனிடம் " நான் யாரென்று தெரிகிறதா? " என கெட்டார். யானை மேலும் கிழூம் த்லயை ஆட்டியது " ஆமாம்" என்பது போலஅவர் யானையை பார்த்து " மீண்டும் அந்த அனுபவம் வேண்டுமா ?" எனக்கேட்டார். யானை " வேண்டவே வேண்டாம் " என்பது போல் தலையை பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டே இருந்தது.

-ஒஷோ


Book : beyond enlightnment Chapter 23

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

பாவம் யானை... :(((