Monday, May 14, 2007

பறக்கும் குதிரை ?


ஒரு சீன கதை : ஒர் அரசன் தனது முதன் மந்திரி மேல் படுகோபம் ( காரணம் அவசியம் இல்லை) கொன்டு அவனை தூக்கில் போடுமர்று ஆனை பிரப்பிதான், அந்த ஊரின் வழக்கப்படி, தூக்கில் போடும் முன் அரசன் தூக்கில் போடுவதற்க்கு முதல் நாள் குற்றவாளியை சந்திக்கவேண்டும், அவ்வாறு சந்திதித்து அவனுடைய கடைசி ஆசை என்ன என்பதை தெரிந்து அதை நிறைவேற்ற முடிந்தால் நிறைவேற்றுவது என்பது மரபு, அது மட்டும் அல்ல குற்றம் சட்டப்பட்ட மந்திரி அரசனிடம் மிக நீண்ட காலம் வேலை செய்தவன் - நல்ல நன்பன் - சிறந்த தளபதியாக சில போர்களிலும் வெற்றி பெற்று உலைத்தவன், ஏதோ காலத்தின் கோலம் அவன் அரசனின் எதிரியாகி விட்டான், அதனால் அரசன் தன்டனைக்கு முதல் நாள் சிரைச்சாலை வருகிறான்,
அங்கு அவன் கண்ட காட்சி அவனால் நம்பமுடியவில்லை, அவனது மந்திரி புரண்டு புரண்டு அழுது கோண்டு இருந்தான்,
அரசன் : " இதை நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லை! நீ இவ்வளவு உயிர் பயம் கொண்டவனா? இது தெரிந்திருந்தால் உண்னை முதலிலேயே கொன்ற்றிருப்பென்! வெட்கம் வெட்கம் "
முதல் மந்திரி " உயிர் பயம்! அது எனக்கு கனவிலும் இருக்காது, நான் அழுதது அதற்ககாக அல்ல , இது வேறு, காலம் கடந்து விட்டது அதை பற்றி பேசி இனி பயனில்லை " என்றான்
அரசனுக்கு மந்திரி அழுவதின் காரணம் தெரிய உண்டான ஆவலை அடக்கமுடியவில்லை,
அரசன் " உனது தண்டனை தவிர்த்து வேரு ஆசை ஏதாவது இருந்தால் சொல் நான் நிரைவேற்றுவேன்" என்றான்
அதற்க்கு முதல் மந்திரி " எனது தண்டனை பற்றி எனக்கு கவலை இல்லை, நான் இப்பொழுதெ சாக தாயார்! எனது கவலை எல்லாம் நான் தெறிந்து வைத்திருந்த ஒரு அற்ப்புதமான கலை என்னுடன் யாருக்கும் பயன் இன்றி மடிவதை ப்ற்றித்தான் "
அரசனுக்கு ஆவலை அடக்கமுடியவில்லை " சொல் உனது கலையைப்பற்றி!முடிந்தால் உனது கலை காப்பாற்றபடும் "
" அரசே! எனது இளமை காலத்தில் ஒரு முக்தி அடைந்த சித்தரிடம் இருந்தேன்! அவர் பல கலை விததகர்! நான் அவரிடமிருந்து சில வகையான குதிரைகளை பறக்கவெய்க்கும் கலையை கற்றிருந்தேன் , எனது கடந்த காலம் முலுவதும் அத்தகய குதிரையை இரகசியமாக தேடிக்கொன்டே இருந்தேன், இதுவரை அப்படி ஒரு குதிரை நான் கான முடியவில்லை, ஆனால் , இந்த நிமிடம் அந்த குதிரை எனது கண்முன் இருந்தும் , நான் கற்ற கலை என்னுடன் மடிவதை நினைத்தால் நான் அழுவதை தவிர என்ன செய்யமுடியும் ? எல்லாம் விதி ! " என்றான்
அரசனுக்கு ஆச்சர்யம் " நீ என்ன சொல்கிறாய்? அந்த குதிரை இப்பொழுது இங்கு இருக்கிறதா? அப்படியனால் அதை உன்னால் பறக்க வைக்கமுடியுமா ? சொல் ! " அரசன் வினவினான்
முடியும் அரசே! நிங்கள் வந்த குதிரை அத்தகைய தன்மையுடையது , அதற்க்கு உரிய பயிற்ச்சி கொடுத்தால் அதனை வானத்தில் பறக்கவைக்கமுடியும் ! ஆனால் கலாம் கடந்து விட்டதே என்று மந்திரி பதிலுறைத்தான்
அரசன் ஆஹா நான் குதிரையில் பறந்தால் எப்படி இருக்கும் குதிரையில் பறந்த முதல் அரசன் நானாகத்தான் இருப்பேன் என நினைத்தான் அவன் அமைச்சரிடம் " அப்படியானால் ! நீ அந்த குதிரையை பறக்கவைக்கும் பயிர்ச்சியை இன்றே ஆரம்பி அதற்க்கு எவ்வளவு காலம் வேண்டும் ? என கேட்டான்
முதல் மந்திரி " ஓரு வருடம் அரசே" என சொன்னான்
அதற்க்கு அரசன் " அப்படியே ஆகட்டும்! நீ குதிரையை பறக்கவைத்துவிட்டால் எனது அரசில் பாதி உனக்கு, அது மட்டும் இல்லை எனது மகளையும் உனக்கு திருமணம் செய்துவைப்பேன். ஆனால் ஒன்று உன்னால் குதிரையை பறக்கவைக்கமுடியவில்லை என்றால், உனது தண்டனை நிரவேற்றபடும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்னை யாரும் ஏமாற்றமுடியாது இப்போது நீ சிறையிலிருந்து செல்லலாம் " என்றான்
முதல் மந்திரி அரசனின் குதிரையுடன் வீடு வந்தான் அங்கு அவனது மனைவி அழுது சிவந்த கண்கலுடன் அவனை கண்டதும் அச்சர்யதுடன் கட்டி அனைத்து " ஏப்படி இது நடந்தது! நான் கன்வு காண்கிறேனா? என்றாள் முதல் மந்திரி நடந்த கதையை சொன்னான் அதை கேட்டதும் அவனது மனைவி மீன்டும் கதறினாள் " சொன்னதே சொன்னீர்கள் ஒரு 50 வருடம் அல்லது 10 வருடம் ஆகும் என்று சொல்லியிருக்ககூடாதா ? மீன்டும் 1 வருடம் முடிந்தால் சொன்னது பொய் என்று தெரியும் , நிங்கள் தண்டனயிலிருந்து தப்பமுடியதே , அது மட்டும் இன்றி இந்த ஒரு வருடம் நாம் பயத்துடனே வழ்வோமே " என கண்ணிர் வடிதாள், அதற்கு முதல் மந்திரி " ஒரு வருடம் என்பது மிக நீண்ட காலம் - நானே மரணம் அடையலாம், அல்லது எனக்கு தண்டனை கொடுத்த மன்னன் மடியலாம் அல்லது கடைசிக்கு அந்த குதிரையே செத்து போகலாம் யார் கண்டது வாழ்வில் அடுத்து என்னவென்று ? அதனால் நாம் இன்றை மட்டும் , இந்த கனத்தை மட்டும் இனிதே வாழ்வோம் " என சிரித்தான் -
ஓஷோ


Tao: The Three treasures vol -3 , Chapter 7

( Note : still such ministers exist , only difference is the king has become poor people and they wait for five years to see their horses fly )

1 comment:

Anonymous said...

Dear guru,

Nice to read these kind of stories. Keep it up.