Thursday, June 14, 2007

இராமன் தேடிய பொன்மான்!


மாயப் பொன்மான்

மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது .இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை ; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது.

சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். இராமன் காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறார்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறார். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது( அது மனதில் தோன்றும் ஆசை ). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும் .” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார்.

இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்சியாகும் (witness ). சீதைதான் உங்கள் மனம்(mind ). சீதை பிடிவாதம் பிடித்தாள். அந்த பொன்மான் எனக்கு வேண்டும்,. பிடித்து தாருங்கள் . இராமனும் மானின் பின்னால் ஓடினார். சிக்கலில் மாட்டிக்கொண்டார். அமைதியை இழந்தார்

இப்படித்தான் நம் மனம் ஆசையை துரத்தி செல்லும் போது , அமைதி இழக்கப்படுகிறது.

நீங்கள் இல்லாத ஒன்றைத் தேடிச் செல்லும்போது உங்களிடம் இருக்கும் ஒன்றை தொலைத்துவிடுகிறீர்கள்
.- ஓஷோ

( Taken from : Showering without clouds )

No comments: