முன்னுரை : “ தந்திராவின் பொருள், நீ கடந்து செல்வதற்குறிய ஒன்றாக காமத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான்.காமத்தை நீ முழுமையாக புரிந்துகொண்டுவிட்டால்,ஞானிகள் பேசிய பேரின்பம், எல்லையற்ற ஆனந்தம் ஆகியவைகளையும் நீ புரிந்துகொளள முடியும்” – ஓஷோ
முதல் சூத்திரம் :- “ புணர்ச்சியின் துவக்கத்தில் உன் கவனத்தை ஆரம்ப நெருப்பின் மீது வை. தொடர்ந்து அப்படிச் செய்வதன் மூலம் முடிவிலிருக்கும் கனலை தவிர்த்துவிடு “
இதுதான் மிகப் பெரிய வேறுபாடு- உனக்கு காமம் ஒரு வெளியேற்றும் செயல் . நீ அதனுள் அவசரமாகச் செல்கிறாய். உனக்கு விடுதலை தேவை- நிரம்ப வழியும் சக்தி வெளியேற்றப்படவேண்டும். நீ சங்கடத்திலிருந்து விடுபடுவாய். இந்த நிலை ஒரு வலுவற்ற நிலை. நிரம்பி வழியும் சக்தி ஆவலை , இருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய். சக்தி வெளியேற்றப்பட்டதும் நீ வலுவிலந்து விடுகிறாய். இந்த வலுவின்மையை ஓய்வு என்று நினைக்கிறாய். ஏனென்றால் ஆவல் இல்லை ; நிரம்பி வழியும் சக்தி இல்லை. நீ இளைப்பாறலாம்.ஆனால் இந்த ஓய்வு எதிமறையானது.நீ உன் சக்தியனத்தையும் வெளியே கொட்டுவதன் மூலம் இந்த ஓய்வுக்கு மிகப்பெரிய விலை கொடுக்கிறாய். இந்த ஓய்வு உடலில் மட்டுமே. இது ஆழமாகச் சென்று இறைத்தன்மையாக மாறாது.
இந்த முதல் சூத்திரம் அவசரப்படாதே; முடிவை அடையத் துடிக்காதே என்று கூறுகிறது. துவக்க நிலையிலேயே இரு. கலவியில் இரண்டு பகுதிகள் உள்ளன.துவக்கம், முடிவு என்று. துவக்கத்திலேயே இரு. துவக்க நிலை அதிக ஓய்வும் கதகதப்பும் தருவது- முடிவுக்குச் செல்ல அவசரங் காட்டதே. முடிவை முற்றிலும் மறந்துவிடு.
புணர்ச்சியின் துவக்கத்தில் உன் கவனத்தை ஆரம்ப நெருப்பின் மீது வை.
நீ நிரம்பி வழியும்போது, வெளியேற்றத்தப் பற்றி சிந்திக்காதே. இந்த னிரம்ப வழியும் சக்தியோடு இரு . விந்தை வெளியேற்ற நினைக்காதே. அதை மறந்துவிடு.ஆரம்ப நிலையில் இருக்கும் கதகதப்பிலேயே இரு. உன் காதலன் அல்லது காதலியோடு ஒன்றாகி விட்டதைப் போல் இரு. ஒரு வட்டத்தை உருவாக்கு..
( தொடர்ச்சி அடுத்த பதிப்பில் )
ஓஷோ;- தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இந்த பதிவு 'சூடான' இடுகை பகுதியில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
பதிவை இன்னும் படிக்கலைங்க... இது டைட்டிலுக்கான கமெண்ட்
நன்றி கண்ணன் அவர்களே !
தலப்பு சூடானது மட்டுமல்ல அதன் பதிப்பும் பயன் தரக்கூடியதே
நல்லதொரு துவக்கம், முடிந்தால் ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகளையும் தரவும்...
திரு குசும்பன் அவர்களுக்கு
மிகவும் நன்றி !
கட்டாயமாக பதிவேன்
Good Post!
நன்றி சிவபாலன் அவர்களே ! மீண்டும் வருக
பதிவைப் படிச்சுட்டேன். பயனுள்ள தகவல்.
தொடங்குதல் மிக எளிது
முடிப்பதுதான் பெரிய தொல்லை
என்று வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நன்றி
ராகவன் அவர்களே ! முடிப்பதும் எளிதாகத்தான் இறுக்கும் , இது விஞ்ஞான பயிரவ தந்திராவில் வரக் கூடிய தியான ( கலவி சம்பந்தப்பட்ட) தியான முறைகள் தான் ( இது சம்பந்தமாக 5 சூத்திரங்கள் மட்டுமே ) அதனால் இது எளிதாக இருக்கும் என் நம்புகிறேன்
விஞ்ஞான பயிரவ தந்திரா பற்றி : இது முழுவதும் பார்வதியிடம் சிவன் விளக்குவதாக மொத்தமாக 112 தியான முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன இதைப்பற்றிய ஒஷோவின் உரை the books of secreat என்ற தலப்பில் வந்துள்ளது.
Post a Comment