Wednesday, July 11, 2007

முல்லா

"முல்லா மிகவும் புத்திசாலி " என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.
ஒரு நாள் அரச சபை கூடியபோது, அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, முல்லா, " உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும்; பொய்யாயின், உங்களைத் தூக்கிலிடுவேன் , எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள் " என்றார்.

"முல்லா உண்மையைக் கூறினாலும் இறந்து விடுவார்; பொய்யைக் கூறினாலும் இறந்துவிடுவார். ஆதலால்; முல்லா இன்று தொலைந்தார்" என்று சபையோர் வருந்தினர்கள்.

முல்லா மன்னரைப் பார்த்துப் அமைதியுடன், " மன்னரே , நீங்கள் என்னைத் தூக்கில் போடிவீர்கள் " என்று சொன்னார்.

முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.

முல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்படவேண்டும் , அவ்வாறு வெட்டப்பட்டால், அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல், தூக்கில் போட வேண்டும்.
முல்லா கூறியது பொய்யாயின் முல்லாவத்தூக்கில் போடவேண்டும்
அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் , உண்மையை கூறினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையயை வெட்டவேண்டும்.

எனவே, புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை மன்னர் பாராட்டினார், சபையோர் மகிழ்ந்தனர்

முல்லாவின் வேடிக்கை கதைகள்

3 comments:

வெங்கட்ராமன் said...

Good One

வெட்டிப்பயல் said...

அருமை...

ஆனந்த் நிருப் said...

நன்றி திரு.வெங்கட்ராமன் மற்றும் வெட்டிபயல் அவர்களே

மீன்டும் வருக!