கபீரின் குடும்பம் மிகவும் கவலைப்பட்டது.அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையானது .அவர் வீட்டிற்கு யார் வந்தாலும்,கபீர் அவர்களை சாப்பாட்டிற்கு அழைப்பார்.தினமும் 200 பேராவது அவரை தரிசிக்க வருவார்கள்.அவர் ஒவ்வொருவரையும் உணவு உண்ண அழைப்பார்.
அவருடைய மகன் கமால் ஒரு நாள் இரவு,”இதையெல்லாம் நிறுத்துஙகள்!நாமோ ஏழை,நாங்களோ பிச்சை எடுக்கிறோம்.கடனும் வாங்கி விட்டோம் .இனி யாரும் எதுவும் கொடுக்கப் போவதில்லை.நீங்கள் எங்களை திருடர்களாக ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறது”என்று கூறினான்.
அவன் கடுப்பாக இருந்தான்.ஆனால் கபீர் சிரித்தார்.”ஏன் இதைப்பற்றி முன்பே யோசிக்கவில்லை?திருடனாக இரு!இது ஒரு நல்ல வழி”என்று கூறினார்
ஆனால் கமால் அவர் மகன் –கபீரின் மகன். ”திருடனாக இரு என்று கூறுவது கபீர்தானா?அவர் சுய நினைவில்தான் உள்ளாரா?,நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அவர் புரியவில்லையோ?”என்று எண்ணினான்.
உடனே அவன் நகைப்பாய் அவரைப் பார்த்து ,”சரி, நீங்கள் அப்படி சொல்வதானால் போய்,நான் திருடுகிறேன்.ஆனால் நீங்களும் என்னுடன் வர வேண்டும்” என்றான்.
கபீர் திருடச்செல்வாரா?இப்போதாவது அவர் உணர்வார் என்று கமால் எண்ணினான்.
ஆனால் கபீர் எழுந்தார்,”சரி நானும் வருகிறேன்” என்றார்
கமாலும் விடுவதாக இல்லை.கடைசி நிமிஷத்திலாவது கபீர் சிரித்துக்கொண்டே”நான் விளையாட்டிற்கு கூறினேன்” என்று கூறுவான் என கமால் நினைத்தான.ஆனால் என்ன நடந்தது
கமால் ஒரு வீட்டினுள் புகுந்தான்.சொந்தக்காரரின் பொக்கிஷங்களில் சிறிது எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.கபீர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்.இதுதான் கடைசி நேரம்.இதற்குப் பிறகு காரியத்தை மாற்ற முடியாது.அப்போது கமால்,”என்ன செய்ய வேண்டும்?இதை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமா?”எனக் கேட்டான்.
அதற்கு கபீர்,”சரி,நீ திரும்பிப்போ, திருடிய வீட்டில் உள்ளவர்களை எழுப்பி சொல்லிவிட்டு வா,”என்று கூறினார்.
கமால்,” இது என்ன திருட்டு?,”என்று கேட்டான்.
அதற்கு கபீர்,”நாம் சொல்லிவிட்டாவது போக வேண்டும்.இல்லையெனில் அவர்கள் அனாவசியமாக வருத்தப்படுவார்கள்”என்றார்.
கமால் அவரிடம் ”அய்யோ!அப்பா!”அப்படியானால் அவர்கள் நம்மைத் திருடர்கள் என்று நினைப்பார்களே” என்று கூறினான்.
அதற்கு கபீர்,”அவர்கள் கூறுவது சரிதான்.ஆமாம் நாம் திருடர்கள் தானே!”என்று கூறினார்
.உடனே கமால்”அப்படியானால் மறுநாளே- உங்களது மரியாதையெல்லாம் பறந்து விடுமே,ஒருவரும் உங்களை மதிக்கமாட்டார்கள்”என்றான்
அதற்கு கபீர்,”அது சரிதான்!ஏன் அவர்கள் திருடர்களை மதிக்க வேண்டும்?” என்றார்
”திருடுவது தவறில்லை ,பாவமில்லை என்றால் மக்கள் அவமதிக்காமல் இருந்தால் திருட நினைக்கிறாய்.இல்லை ,மக்கள்
நீ திருடுவதால் என்னென்ன செய்வார்களோ அதயும் ஏற்றுக்கொள். ”
முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் வாழ்வின் உயிரோட்டமான வழி.எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது எந்த நிலையிலும் மறுத்தல் என்பது கிடையாது-ஓஷோ
Saturday, May 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment