Thursday, May 31, 2007

துண்டைக் காணோம் துணியைக் காணோம்


முல்லா தனது நன்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார், வழியில் ஒரு சிங்கத்தை அவர்கள் கண்டுவிட்டனர், அந்த சிங்கமும் இவர்களைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். ஆனால் பாவம் முல்லாவினால் சிங்கத்தின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை, சிங்கம் அவரை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

நண்பர்கள் முல்லாவின் கதை முடிந்தது என்றே நினைத்தனர். மிகவும் கவலையுடன் ஊருக்குள் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்னால் முல்லா ஊருக்குள் வந்து சேர்ந்திருந்தார்,நண்பர்களுக்கு தங்களின் கண்களையே நம்ப முடியவில்லை . அவர்கள் முல்லாவை பார்த்து “அடப்பாவி! எப்படி சிங்கத்திடம் இருந்து தப்பித்தாய் ! ” என வினவினர்

முல்லா “ நான் வந்த திசையிலே விடாமல் துரத்தி வந்தது சிங்கம் ! நானும் விடாமல் ஓடிவந்தேன் , எனக்கும் சிங்கத்திற்க்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது, சிங்கம் என் மிக அருகில் நெருங்கி என் மீது பாயும் சமயம் ஒரு சிறிய பள்ளத்தாக்கு குருக்கிட்டது , நான் அதை உயிரைக்கொடுத்து தாண்டினேன் ! சிங்கம் தாண்டும் போது வழுக்கிவிழுந்தது! “ எனச் சொன்னார்

அப்போது அந்த நண்பரில் ஒருவர் “ முல்லா நீங்கள் மிகவும் தைரியசாலி , நாங்களாக இருந்தால், பயத்தில் பேன்டு ஒழப்பியிருப்போம் “ என்றார்

முல்லா “ பின்னே சிங்கம் எப்படி வழுக்கிவிழுந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் ?! “ என்றார்


-ஓஷோ

எனது தாத்தாவுக்கு ஆறு இஞ்ச்!

முல்லா நசுருதீன் ஒரு பரம்பரை பிரியர்.

குளிருக்காக ஒரு அதிசய கருப்பு நிறக் கோட்டை அணிந்திருந்தார் இதை கண்ட அவரது நண்பன் , “ என்ன முல்லா உனது கோட் மிகவும் பழையதாக் உள்ளது “ என்று கேட்டான்.

முல்லா “ இதை அணிந்து கொள்ளும் பழக்கம் எங்கள் இல்லத்தில் பரம்பரையாக உள்ளது ,என்னுடைய தாத்தாவும் இதை அணிந்திருந்தார். என்னுடைய தந்தையும் இதையே அணிந்திருந்தார்; இப்போது இதனை நான் அணிந்துள்ளேன் “ என்று பெருமையுடன் கூறினார்.

“நீ ஏன் தாடி வைத்துள்ளாய் ? “என்று கேட்டான் முல்லாவின் நண்பன்.

“ தாடி வளர்ப்பதும் எமது பரம்பரை வழக்கமே ! எனது தாத்தாவிற்க்கு ஆறு இஞ்ச் தாடி இருந்தது . எனது தந்தைக்கும் ஆறு இஞ்ச் தாடி இருந்தது!”. என்றார் முல்லா.

“ முல்லா, இதுவரை நீ ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை ? அது கூட உன்னுடய குடும்பத்தின் ஏதாவது பழைய பரம்பரை பழக்கமா ? “ என்று கேட்டான் நண்பன்.
“ அதில் என்ன சந்தேகம் ! “ என்ற முல்லா உணர்ச்சிவசப்பட்டு , “ என்னுடைய தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவராக இருந்தார். பிறகு எனது தந்தையும் அவ்வாறு திருமணம் இல்லாதவராக இருந்தார். நானோ எனது பரம்பரை பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன்!”என்றார் பெருமையுடன்!

-ஓஷோ

Wednesday, May 30, 2007

மேலே ஏறுவது மிக கஷ்டம்

முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விசயம் எதற்க்காக என்னை கிழே வருமாறு அழைத்தீர்கள் “ எனக்கேட்டார்.

அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் “ என்றார்

உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார்.

அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்

சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.

சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக

முல்லா “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்

சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ! “

முல்லா “ என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! ஹீ ஹி… “ என்றார்

அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது”-ஓஷோ

இன்று இரவை வித்யாசமாக அனுபவிப்போமா ?

முல்லா தனது மனைவியிடம் “ இன்று இரவை நாம் சற்று வித்யாசமாக முற்றிலும் நேர் மாறாக அனுபவிப்போமா ? “

அவரது மனைவி “ ???? , சொல்லித்தொலை எப்படியென்று ! “ என்றாள்

முல்லா “ இன்றைக்கு நீ எனக்கு முத்தம் கொடு, ஒரு மாறுதலுக்காக நான் உன் கன்னத்தில் அறைகிறேன் “ என வழிந்தார்

-osho

Tuesday, May 29, 2007

ஹெல்மெட் போடாத அரசர்

ஒரு அரசருக்கு நாட்டு மக்கள் மேல் தீடிரென பாசம் வந்தது, உடனே ஒரு ஆனை பிறப்பித்தார் “ நாளை மறுநாள் முதல் அனைவரும் தலைகவசம் அனிந்து தான் தேர் ஓட்டவேண்டும் “ என

முல்லாவிற்க்கு ஒரு சந்தேகம் “ அரசே ! என்ன திடீர் பாசம் , ஏதாவது ஹெல்மெட் கம்பனியிடம் காசு வாங்கிவிட்டிர்களா? ஊரேல்லாம் சோம பானம் சுராபானம் என விற்றுக்கொண்டிருக்கிறோம் அதையெல்லாம் விட்டு விட்டு திடீர் என ஹெல்மெட் பற்றிய அக்கரை? “ எனக் கேட்டார்

அரசர் “ ச்சீ வாயை மூடு ! அநியாயமாக உயிர்கள் பலியாவதை தடுக்கவே இந்த சட்டம்! “ என்றார்

முல்லாவிற்க்கு அச்சர்யம் , ஏனேனில் ,அரசரின் ஏகப்பட்ட வாரிசுகளின் சண்டையால் அநியாயமாக தினம் பல உயிர்கள் பலியாவதை நாடே அறியும். அதனால் அவர் தனக்குத்தானே “ போடவேண்டிய நேரங்களில் இவர் மறக்காமல் ஹெல்மெட் போட்டிருந்தால் இத்தனை வாரிசுகள் இறுந்திருக்காது! ஹ்ம் எத்த்னையோ உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கும், எல்லாம் காலம் கடந்த யோசனை! “ என முனுமுனுத்தார்

எங்கேயோ படித்த நினைவு- ஆனந் நிருப்

ஒரு பிரன்ஞ்சு நடிகையும் ஜார்ஜ் பெர்னாட்ஸ்சாவும்

ஒரு பிரன்ஞ்சு நடிகை ஜார்ஜ் பெர்னாட்ஸ்சா விடம் கூறினாள் “ நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிரேன் “

பெர்னாட்ஸ்சா : “ எதற்க்காக ? “

நடிகை : “ என்னைப் பார்! எனது அழகைப்பார்! எனக்கு அருமையான உடம்பு அழகான எனது முகம் , எனது கண்கள் மற்றும் எனது உருவம் மிகவும் இரசிக்கத்தக்கது. நீங்கள் மிகவும் அறிவுள்ளவர் , புத்தி கூர்மைக்கு பெயர் பெற்றவர் , நாம் திருமண்ம் செய்து கொண்டால் , நமக்கு பிறக்கும் குழந்தை என்னைப் போல மிக அழகானதாகவும் தங்களைப் போல் அறிவுள்ளதாகவும் இருக்கும்”

பெர்னாட்ஸ்சா “ என்னைப் போல் அழகும் உன்னைப்போல் அறிவும் கொண்டதாக குழ்ந்தை பிறந்துவிடுமோ என எனக்கு பயமாக உள்ளது “

-OSHO , The Art of Dying , Chapter # 10

முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!

முல்லாவும் அவரது நன்பர் ஷேக் அப்துல்லாவும் அடர்ந்த காட்டில் வழிதவறி மாட்டிக்கொண்டனர், மாலை கடந்து இரவும் வந்தது. அந்தக் காடு மிகவும் கொடிய மிருகங்கள் நிறைந்த காடு , அதனால் அன்று இரவு முழுதும் அவர்கள் முழித்திருக்க வேண்டிய கட்டாயம், அல்லது ஏதாவது மிருகங்கள் அவர்களை கொன்றுவிடக்கூடும். அதனால் அவர்கள் இருவரும் நாம் முழித்திருப்போம் என உறுதி கொண்டனர்.

நேரம் கடந்து கொண்டிருந்தது , அவர்கள் எவ்வள்வோ முயன்றும் தூக்கம் வந்தது. முல்லா சொன்னார் “ நாம் இப்படியே இருந்தால் தூக்கம் வருவதை தடுக்க முடியாது ! அதனால் இதற்க்கு ஏதாவது கண்டுபிடி , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது பகல் முழுதும் நடந்த களைப்பு ! “

அப்துல்லா “ என்னை என்ன செய்ய சொல்கிறாய் ? “எனக் கேட்டார்

அதற்க்கு முல்லா “ நாம் இப்படி செய்தால் என்ன ? நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம், கண்டுபிடிக்கும் விளையாட்டு – ஏதாவது ஒரு நடிகையைப் பற்றிய குறிப்பு சொல்வது அதை மற்றவர் கண்டுபிடிப்பது ! “ என சொன்னார்

அப்துல்லா “ சூப்பர் ஐடியா ! இதை எப்படி ஆரம்பிப்பது ? “ எனக் கேட்டார்

முல்லா “ ம்.. முதலில் நீ உன்னை ஒரு நடிகையாக நினைத்து விவரி நான் கண்டுபிடிக்கிறேன், பிறகு நான் விவரிக்கும் போது நீ கண்டுபிடி “

அப்துல்லா “okey! wait “என்றார் பிறகு சிறிது நேரம் யோசித்துவிட்டு “ எனது கண்கள் சிநேகாவின் கண்கள் போன்றது, இடை சிம்ரன் போன்றது , தொடை ரம்பா போன்றது மற்றும் எனது இத்யாதி இத்யாதி “என விவரித்தார்

அவரது வர்ணனை கேட்க கேட்க முல்லா மிகவும் உண்ர்ச்சிவயப்பட்டார்,அவரது இரத்த நாளங்கள் துடித்தது . இருட்டிலும் அவரது கண்களில் அது பிரதிபலித்தது . அப்துல்லா மேலும் தொடர்ந்தார் “ எனது உடம்பின் அளவுகள் 36-24-36 இப்போது சொல் நான் யார்” என்று அப்துல்லா முடிக்கும் முன் முல்லா எழுந்து அப்துல்லாவின் மீது பாய்ந்தார்.

அப்துல்லா “ பொறு ! நான் யார் கண்டுபிடி “ என்று சொன்னார்.

முல்லா “ கண்டுபிடிப்பதைப் பற்றி யாருக்கு கவலை! நீ யார் என்பது பற்றிய கவலை எனக்கில்லை ! முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!” என்றார்

ஓஷோ கூறுகிறார் : “மனிதனின் மனதின் நிலை இதுதான் , கனவு மற்றும் ஆசைகளால் உண்மையை உண்ர்வதில்லை ! மனிதன் கனவுகானத் துவங்குகிறான் பிறகு அதன் பிடியில் மாட்டிக்கொண்டு தன்னை இழக்கிறான்! “

தழுவல் : osho

Vedanda : Seven Steps to Samathi


(குறிப்பு :- இந்தக்கதையை என்னால் முடிந்த வரை மொழி மாற்றம் செய்தேன் – நடிகைகள் பெயரையும் தற்க்காலதிற்க்கு ஏற்ப்ப மாற்றினேன் – உங்களுக்கு இந்த கதையின் சாரம் புரிந்ததா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும், )

Monday, May 28, 2007

நமிதாவிடம் என்ன இருக்கிறது ?


அத்தனைக்கும் ஆசைப்படும் ஒரு சாமியார் அவரின் ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் “உலகே மாயம் ! இப்போது அனைவரும் நமிதா நமிதா என அழைந்து கொண்டிருக்கினர் ! அவளிடம் என்ன இருக்கிறது ! பள பளக்கும் அந்த த் தோலை எடுத்துவிடு, அந்த கண்களை எடுத்துவிடு சுண்டி இழுக்கும் அந்த உதடுகளையும் எடுத்துவிடு மற்றும் ______ களையும் எடுத்து விடு இப்போது சொல் எஞ்சி யிருப்பது என்னவேன்று !

அதற்க்கு சீடர் மிகவும் வருத்ததுடன் “ எஞ்சியிருப்பது என் மனைவி -அப்படித்தான் எனது மனைவியின் உருவம் இருக்கும் அதனால்தான் அங்கிருந்து தப்பித்து ஓடிவந்தேன்! “

தழுவல் ( சிறிது மாறுதல்களுடன்) –osho - A Bird on the Wing , Chapter #3

நானும் ஒரு விபச்சாரி

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடல்பாதையில் வியாபாரம் செய்ய லைசென்ஸ் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்துவரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் லைஸன்ஸ் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் லைஸன்ஸ் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய லைஸன்ஸ் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிராயா ?“

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நிதிபதி “ உணக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , லைஸன்ஸ் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உண்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு லைஸன்ஸ் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , லைஸன்ஸ் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்


தழுவல் : ஓஷோ – A Bird on the Wing , Chapter #3

Saturday, May 26, 2007

ஒரு பாதிரியாரின்……………………….?


வாழ்க்கையில் வெறுப்புற்ற வாலிபன் ஒருவன், ஒரு அடுக்கு மாடி கட்டடத்தின் நாற்ப்பதாவது மாடி விளிம்பில் நின்று கொன்டு கீழே குதிக்கத் தயாராக நின்றான். பக்கத்து வீட்டு மாடி அதற்க்கு கிழே பல அடி தூரத்திலேயே நின்று விடுகிறது. போலிஸ் அதன் வழியே சென்று பார்த்தும் அவனைக் காப்பாற்றுவதற்க்கு வழி தெரியவில்லை. கிழே கூடிய மக்கள் , அவனை கிழே இறங்குமாறு பலவாறு சொல்லிக் கெஞ்சினார்கள் . எதுவும் பிரயோசனப்படவில்லை.

பக்கத்திலிருந்த தேவாலயத்தின் பாதிரியார் இதை கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்தார்.

“ மகனே ! உன் தாயாரை நினைத்துப்பார், உன் தந்தையை நினைத்துப்பார், அவர்கள் எல்லாம் உன்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தார்கள் . அதையேல்லாம் நினைத்துப்பார்” என்று அன்பொழுகக் கெஞ்சினார்.

அதற்க்கு அவன், “ அவர்கள் ஒன்றும் என்னிடம் அன்பு செலுத்தவில்லை . நான் கிழே குதிக்கத்தான் போகிறேன் “ என்றான்.

மறுபடியும் அந்த பாதிரியார், “ இல்லை , வேண்டாம்.இப்பொழுது உன் காதலியையாவது நினைத்துப்பார் “ என்று கெஞ்சினார்.

“யாருமே என்னிடம் அன்பு செலுத்தவில்லை . நான் சாகத்தான் போகிறேன் “ என்றான், அவன்.

நீ மறுபடியும் எண்ணிக் கொள். ஜீசஸ், மேரி மற்றும் ஜோசப் உன்னை எவ்வளவு நேசித்தார்கள் தெரியுமா? அவர்களை நினைத்துப்பார் !” என்றார்.

“ஜீசஸ்?, மேரி? , ஜோசப் ? யார் இவர்கள் ?” என்றான்.

உடனே அவர் மிகவும் கோபமடைந்து, “கிழே குதியடா, யூத முண்டமே!” என்று கத்தினார்.


ஓஷோ கூறுகிறார்

“நீங்கள் அன்பைப் பற்றிப் பேசுவது மிகவும் மேலோட்டமானது. போலித்தனமானது“

Friday, May 25, 2007

புத்தருக்கு அவமானம் ?


ஒரு கிராமத்தின் வழியாக புத்தர் சென்றபோது அவ்வூர் மக்கள் அவரை அவமதித்தார்கள். மிகவும் மோசமாக ஏசினார்கள்.

அவற்றையெல்லாம் அமைதியாக கேட்டார், பிறகு, “ நீங்கள் இன்னும் ஏதாவது கூற விரும்புகிறிர்களா ? ஏனென்றால் அடுத்த கிராமத்திற்க்கு நான் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும். அங்கு எனக்காகப் பலர் காத்திருப்பார்கள். தாங்கள் இன்னும் ஏதேனும் சொல்ல விரும்பினால் இவ்வழியே நான் வரும்போது நேரம் ஒதுக்குகிறேன்.அப்போது நீங்கள் வந்து சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லுங்கள்” என்றார்.

அவ்வூர் மக்கள் ஆச்சரியமடந்தனர்” நாங்கள் ஏதோ ஒன்றை உங்களிடம் சொல்லவில்லை. உங்களை அவமானப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்? “ என்றனர்.

புத்தர் சிரித்தார். “ அப்படியா! என்னை அவமானப்படுத்த நீங்கள் கொஞ்ச காலம் தாழ்த்தி வந்துவிட்டீர்கள், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டும் ! இப்போது நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை ! நீங்கள் என்னை அவமானப்படுத்துங்கள். அது உங்களுக்குள்ள சுதந்திரம், ஆனால் அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் எனது சுதந்திரம்.இப்போது அதை நான் ஏற்றுக்க்கொள்ளவில்லை ! ” என்றார்.

அவர் மேலும் கூறினார் “ உங்களது கிராமத்திற்கு வருவதற்கு முன்பு ஒரு கிரமத்தைக் கடந்து வந்தேன் அங்கிருந்த மக்கள் எனக்குத் தருவதற்காக இனிப்புகள் கொண்டுவந்தனர் நான் அவர்களுக்கு நன்றி கூறினேன் அவர்களிடம் நான் இனிப்பு உண்பதில்லை எனவே எனக்கு இனிப்புகள் வேண்டாம் என்று கூறினேன் எனவே அந்த இனிப்புகளை அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? “ என்று கேட்டார்.

அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் “அவர்கள் அதனை திருப்பி வீட்டிற்கு எடுத்துச்சென்றிருப்பார்கள்” என்றார் .

உடனே புத்தர் “ இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனக்கு ஏற்படுத்திய அவமானங்களை இப்போது நீங்களும் திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்லவேண்டியது தான்.
நான் உங்களது அவமதித்தலை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லை.” என்று கூறினார்- ஓஷோ

Thursday, May 24, 2007

கூடாரத்தில் ஒரு ஆங்கிலேய அழகி


ஜீலு நாட்டில் மாவீரன் ஒருவன் இருந்தான். அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து தருமாரு கேட்டான்.


" நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் செய்கிறானோ, அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்" என்று அந்த மன்னன் அவனுக்கு பதில் அளித்தான்.

" அந்த முன்று கட்டாளைகள் என்னென? சொல்லுங்கள் மன்னவா! உடனே அவற்றை நிறைவேற்றிவைக்கிறேன்!" என்றான் அந்த மாவீரன்.

" நான் முன்று கூடாரங்களை ஏற்ப்டுத்தி வைத்திருக்கிறேன், முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட வேண்டும் "

" இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்க்குச் செல்ல வேண்டும் அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த கொரில்லா குரங்கு ஒன்று இருக்கும். ஏழு அடி உயரம் உள்ள அந்த கொரில்ல குரங்கிற்க்கு தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டுபிடித்து , அந்த பல்லை வெறுமனெ கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்."

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்க்கு செல்லவேண்டும். அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். எந்த ஒரு ஆண்மனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். அவளோடு உடலுறவு கோண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும் " என்றான் மன்னன்

" இது எனக்கு சாதாரணம் இப்போதே இதை செய்கிரேன்" என கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் காலி செய்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த கொரில்லாக் குரங்கு இறுக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்த க் கொரில்லாக்கும் ஒரு பயங்கரமான் சண்டை நடந்து. அந்த சண்டையில் அந்த கூடாரமே ஆட்டம் கண்டது. வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்துது.அந்தக் கொரில்லாவின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன.மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்து.
இந்த கூச்சலும் கூக்குரலும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.சற்று அமைதி, பின் அந்தக் கூடாரத்திலிருந்து மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

" சரி அரசே! இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மனி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா ?"-ஓஷோ

Wednesday, May 23, 2007

வேலையாலின் லீலை


இங்கிலாந்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் பெரிய பண்ணை நடத்தும் ஒருவருக்கு திடிரென்று இலண்டன் சென்று பல மாதங்கள் தங்க வேண்டி நேரிட்டது.
என்வே பண்ணையில் பணியாற்று, தலை சிறந்த வேலைக்காரன் ஒருவனை தாம் திரும்பி வ்ரும் வரையில் தமக்கு பதிலாகப்பொறுப்பேற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என தீர்மானித்து அவனை அழைத்தார் " நான் இங்கிருந்தால் எதுமாதிரி செய்வேனோ, அதெ மாதிரி நீ காரியஙகளைப் பொறுப்பேற்று நடத்தி செல்ல வேண்டும்" என்று அவனிடம் பொருப்பை ஒப்படித்தார்.
4 மாதம் கழித்து அந்த பண்ணை முதலாளி திரும்பி வந்து பாரித்தபோது,அனைத்தும் நல்ல முறையில் உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
தாம் செய்த சாமர்த்தியமான காரியங்களைக் குறித்து வேலைக்காரன் விளக்கிக் கூற்னான்:
" அந்த கோழிகள் முன்பு இருந்ததைவிட இப்போது ஏராளமாக முட்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.அந்த கோதுமைப் பயிர் இரட்டிப்பு வலிமையுடையதாய் வ்ள்ர்ந்திருக்கிறது.அந்த காய்கறிச் செடிகள் முன்பு எப்போதும் இருந்ததைவ்ட த்ற்ப்போது நல்ல நிலையில் இருக்கின்றன. அவ்வளவு ஏன்? நீங்கள் மிகவும் சிரமப்பட்டு நிருத்த முயற்சி செய்த - மாத மாதம் த்ஙகள் மனைவிக்கு வரும் மாதவிடாயைக் கூட நிருத்தி விட்டேன் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்"

ஓஷோ : " இதுதான் அதிக பிரசங்கித்தனம். இதுதான் அத்து மீறிய செய்கை "

கோட்டயை பிடிக்கும் நாய்

கொரில்லா குரங்குகளை பிடித்து விற்க்கும் ஒரு நபருக்கு மேலும் கொரில்லாகள் தேவைப்படுகிறது, அதற்க்காக அவர் ஆப்ரிக்கா பயனம் செய்தார், அங்கு ஒரு வேட்டைகாரரை சந்தித்து "ஒரு கொரில்லா பிடிக்க எவ்வளவு செலவு ஆகும் ?" எனக்கேட்டார்

வே :" எனக்கு 500 டாலர், துப்பாக்கி வைத்திருக்கும் எனது உதவியாளனுக்கு 500 டாலர் மற்றும் எனது நாய்க்கு 500 டாலர்"

கொரில்லா வியாபாரிக்கு ஏன் அனைவரும் சமாக பிரித்துக்கொள்கிறார்கள் என புரியவில்லை, ஆனால் ஒரு கொரில்லவிற்க்கு மொத்தமாக 1500 டாலர் என்பது அவருக்கு மிகவும் கம்மியான் செலவு என்பதனால் ஒத்துக்கொண்டார்.

பயனம் தொடங்கியது , வேட்டைகாரர் முதலில் ஒரு கொரில்லாவை கண்டார் அது மரத்தின் மீது அமர்ந்திருந்தது. அவர் கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் மீது ஏறி கொரில்லாவின் மன்டையில் ஒரு போடு போட்டார், கொரில்லா மரத்திலிருந்து விழுந்தது , உடனே நாய் தாவிச்சென்று அதன் கொட்டயை தனது கூரிய பர்க்கலாள் கவ்வி பிடித்தது பவர் ப்ரேக் போட்ட சான்ட்ரொ கார் மாதிரி கொரில்லா ஆடாமல் அசையாமல் இருந்தது-வேட்டைக்காரர் மரத்திலிருந்து குதித்து ஒரு கூண்டு எடுத்து வந்து கொரில்லாவை அடைத்தார்.

கொரில்லா வியாபாரி "வாவ் ! இது போல் எங்கும் கண்டதில்லை! சுப்பர்! ஆனால், ஒரு சந்தெகம் நீயும்,உனது நாயும் த்லா 500 டாலர் பிரித்துகொள்வது என்பது சரி.உனது துப்பாக்கி உதவியாளன் ஒன்றுமே செய்யவில்லையெ ? அவருக்கு 500 டாலர் என்பது எதற்க்கு ?

வேட்டைக்காரர் " அவருக்கும் வேலை இருக்கிறது "

இதே போல் மேலும் மேலும் கொரில்லாக்களை பிடித்துக்கொண்டே இருந்தனர் , கடைசியாக இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு கொரில்லாவை சந்திக்கும் வரை, வேட்டைக்காரர் மரத்தில் ஏரினார் அவ்ர் கொரில்லாவின் மன்டையில் ஒரு போடு போடும் முன் அந்த கொரில்லா அவரின் மன்டையில் ஒரு போடு போட்டது,

வேட்டைக்காரர் தனது உதவியாளனிடம் " நாயை சுடு! நாயை சுடு!" எனக்கதறியவாரே மரத்திலிருந்து விழுந்தார்.

கொரில்லா வியாபாரிக்கு உதையாளனுக்கு பணம் எதற்க்கென்று புரிந்தது! உங்களுக்கு?-
OSHO

BOOK : The Art of Dying , Chapter 4



Tuesday, May 22, 2007

புதர் மறைவில் ஒரு காதல் ஜோடி


அந்த பூங்காவில் இரண்டு வெண்கலச் சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.ஒரு ஆணும் பெண்ணும் காதலால் ஏங்கித்த்விப்பது போன்ற உணர்ச்சி பாவத்துடம் வார்க்கப்பட்டிருந்தன்.முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிலைகள் ஓன்றை ஒன்று தொடாதவாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஒரு நாள் அவ்வழியே சென்ற ஒரு மந்திரவாதி இந்த அழகிய சிலைகளை கண்டான்.
" என் மந்திர சக்தியால் இவர்களுக்கு ஒரு மணி நேரமாவது உயிர் கொடுத்து விட்டால் இவர்களது காதல் ஏக்கம் நிறைவடையும். அவர்கள் அனைத்துக்கொள்ளலாம் ; ஒருவரை ஒருவர் காதலித்துக் கொள்ளலாம்" என்று நினைத்தன். அது புண்ணியம் என் நினைத்து தன் மந்திர சக்தியல் அவற்றை உயிர்ப்பித்தான்.
உயிர் பெற்றவுடன் இருவரும் கைகொர்த்துக் கொண்டு அங்கிருந்த புதருக்குப் பின்புரம் மறைந்தனர்.
புதர்க்குப் பின்னால் ஆனந்த ஆரவராம் உண்டாயிற்று. ஆவலை அடக்கம்டியாத மந்த்ரவாதி புதரின் இலைகளை ஒதுக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தான் .
அங்கே அந்த அழகி குத்துக்காலிட்டுக்குந்தியிருந்தாள். அவன் ஒரு பறவையை அவளுக்கு அடியில் பிடித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் பொறுத்து அவன் திடிரெனக் குதித்தெழுந்தான்.
" இப்பொழுது உன்முறை. அந்தப் பறவையை என் அடியில் பிடித்துக் கொள்.அதன் மீது மலம் கழிக்கிறேன்!" என்றான்.

ஓஷோ கூறுகிறார் : " காதல் புரிவதைப் பற்றி யார் கவலைப் படப் போகிறீர்கள்? முன்னூறு ஆண்டுகளாக அவர்கள் மீது பறவைகள் எச்சமிட்டுக் கொண்டிருந்தன. இது அடக்கப்பட்டதன் விளைவு! "


-ஓஷோவின் குட்டிக்கதைகள்

முறை தவறி நடந்த நாய்


அயர்லாந்திலுள்ள ஒரு ஹோட்டலுக்கு ஒருவர் கடிதம் எழுதினார்.அதில் தனது நாயையும் அங்கு தங்க அனுமதிப்பார்களா எனக் குறிப்பிட்டுக் கேட்டிருந்தார். அதற்க்கு அந்த ஹோட்டலின் உரிமையாளர் எழுதிய பதில் கடிதம்
"அன்புள்ள அய்யா, நான் 30 வருடங்களாக இந்த ஹோட்டலை நடத்தி வருகிரேன். இதுவரையில் நான் அதிகாலை வேளையில் முறை தவறி நடந்த நாயை வெளியேற்ற வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்ததில்லை.எந்த நாயும் இதுவரை படுக்கை விரிப்புகளை தான் புகைப்பதன் மூலம் சீரழிக்கவில்லை.அதன் பெட்டியில் ஹோட்டலின் துணிமணிகளை நான் கண்டதில்லை.அதனால் உஙகளது நாய் வரவேற்கப்படுகிரது "
பின் குறிப்பு
அது உங்களுக்காக வாக்குறுதியளித்தல் , நீங்களும் வரலாம்
- ஓஷோ

ஓஷோவின் குட்டிக்கதைகள்

முக்தானந்தாவும் மர்லின் மன்ரோவும்





சில வருடங்களுக்கு முன்பு ஒரு இந்து துரவி சுவாமி முக்தானந்தா இறந்துவிட்டார்,உங்களில் பல பேர் அவரைப்பப்ற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்,சிலர் அவரை கண்டிருக்கவும் கூடும். ஆனால் சொர்க்கத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்காது.

அவரின் சிஷ்யர்களில் ஒருவர் மிகவும் வருத்த்முற்றார், அவரின் குருவின் இறப்பை தாஙக முடியாமல் தற்கொலை செய்து கொன்டார்,அவரும் சொர்க்கத்திர்க்கு செல்கிறார்- சிறிது தாமதமாக அங்கு அவர் கண்ட காட்சியை அவரால் நம்ப முடியவில்லை-முக்தனந்தா அம்மனமாக ஒரு மரத்தடியில் படுத்திருக்கிறார் அவரின் மேல் அவரின் மேல் மர்லின் மன்ரோ அம்மனமாக ப்டுத்தவாரே உடலுறவு செய்து கொண்டிருக்கிறார்.

(சிறு குறிப்பு:சுவாமி முக்க்தனந்தா தனது புத்தகம் - "சித்விலாஷ்" இல் தனது பரம்மச்சரிய ஒழுக்கத்தினால் தனது ஆன்குறி தொப்புள் வரை தூக்கும் என்று விவரித்திருந்தார் அதையும் அந்த சிஷ்யர் படித்திருந்தார்-அது மட்டுமின்றி வாழ்க்கை முழுதும் பரம்மச்சரியத்தையே போதித்தார்)


சிஷ்யர் தனது குரு செய்யும் லீலைகலை கண்டு மனமுடைந்தாலும் ,அதை வெளியில் கான்பிக்காமல் குருவை புகழ்ந்தார் ( பழக்க தோசம் )


" சுவாமி! இது நிஙகள் வாழ்க்கை முழுதும் கடைபிடித்த ஒழுக்கத்தின் பரிசு" என்றார்

அத்ற்க்கு மர்லின் மன்ரோ " யூ இடியட்! இது அவரின் பரிசல்ல! எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை "

-ஓஷோ :
Book : Communism and Zen Fire, Zen Wind , Cheapter : 5

Monday, May 21, 2007

அதிபரின் மனைவி


ஒரு பெரிய தொழில் அதிபரின் மனைவி இறந்து வ்ட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது. நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவைகளும் வந்து துக்கம் கொன்ண்டாடினர்.
அவ்ர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விடக் கவலை கொன்ண்டவனாகக் காணப்பட்டான். சடங்குகள் முடியுமுன் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் தேம்பி அழ் ஆரம்பித்து விட்டான்.

மனவியை இழந்தவர் கேட்டார் :
" தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார் ?"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :" தெரியாதா உஙகளுக்கு ? இறந்து போன உஙகள் மனைவியின் காதலன் அவன் ! "
மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார். அவனது தேள்களைத் தட்டிகொடுத்தார். பிறகு கூறினார் :
"கவலைப்படாதே! உற்சாகமாக இரு. ஒருவேலை நான் மறுமணம் செய்து கொள்ளக்கூடும்."- ஓஷோ
ஓஷோவின் குட்டிக் கதைகள்

Saturday, May 19, 2007

ஓஷோ மூன்று நாள் தியான முகாம்


ஓஷோ மூன்று நாள் தியான முகாம்
கோவையில் மூன்று நாள் தியானம்காம் நடைபெற உள்ளது இடம் ஆனைகட்டி சாலை , மாங்கரை,கோயமுத்தூர்,
காலம் : 24 மே மாதம் மாலை 5 மணி-முதல் 27 மே பகல் 2 மணி வரை
கட்டணம் : ரூ 1,700 ( முவரில் ஒருவர் அரை )ரூ 2,000 ( இருவரில் ஒருவர் அரை )ரூ 2,300 ( தனி அரை )
இந்த முன்று நாள் தியான முகாமில் , ஓஷோ வின் செயல் தியானங்கள் மற்றும் நடனம் அவரது சொற்ப்பொழிவு அகியவை இடம்பெறும்
தொடர்பு கொள்ள : 9834237793,9443164565

Wednesday, May 16, 2007

பிள்ளை வரம்


கமலாவும் விமலாவும் நெறுங்கிய தோழிகள் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்து கொள்கிறார்கள்
க : " விமலா எப்படி இருக்கிறாய் ?"
வி : " ம் நல்லத்தான் இருக்கேன் , ஆன்டவன் குழந்தை வரம் மட்டும் இன்னும் கொடுக்கமாட்ட்ன்கிறான்"
க : " புரியுது உன்னுடய வருத்தம், நானும் என்னுடைய கனவரும் அடையாத வருத்தமா ? எப்படியோ இப்ப நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிரேன் "
வி : " நீ ஏதாவது சிறந்த டாக்டரை பார்த்தயா ? எனக்கும் சொல்லுடி! "
க : " நான் ஒரு சக்திவாய்ந்த சாமியாரை பார்தேன்"
வி : " ம் நானும் எனது கனவருடன் ஒரு சாமியாரை பார்த்துக்கொன்டுதான் இருக்கிறேன் இன்னும் ஒன்னும் நடக்கவில்லை எல்லாம் எனது நேரம் "
க : " நேரமாவது ஒன்னாவது , முட்டாள் ! சாமியாரை தனியாக போய் பார் ! கண்டிப்பாக குழ்ந்தை பிறக்கும் "-- ஒஷோ


Book : Ecstasy : The Forgotten Language

முல்லா


பறக்கும் யானை
முல்லா ஒரு முறை சர்க்கசில் வேலை செய்து கொன்டிறுந்தார் அப்போது அவர் ஒரு யானையை பயிர்ச்சியின் மூலம் ஒரு காலை தூக்கியபடி நிற்க்க பழக்கினார், சிறிது நம்பிக்கை வந்தது மேலும் யானைக்கு பயிற்ச்சி கொடுத்தார் யானை இரன்டு காலையும் தூக்கியபடி நின்றது, மேலும் பயிற்ச்சி கொடுத்தார் யானை முன்று கால்களையும் தூக்கியபடி நிற்க்க பழகியிருந்தது அதோடு விட்டாரா? அவருக்கு தன் பயிர்ச்சியின் மேல் அதிகப்படியான நம்பிக்கை பிறந்தது அதனால் அந்த பாவப்பட்ட யானயை அனைத்துகால்களயும் தூக்கவைக்கமுடியும் என்று! பாவம் யானை! அவர் தொடர்ந்து பயிர்ச்சி கொடுத்துகொன்டே இருந்தார் இது நடக்காத காரியம் என்று உணரும் வரை
உட்னே அவருக்கு ஒரு யோசனை ப்த்திரிக்கையில் ஒரு அறிவிப்பு செய்தார் " யார் எனது யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைக்கிறார்றோ அவறுக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும் அத்ற்க்கான் போட்டி கட்டணம் 100/- ரூபாய் "
போட்டிக்கு அதிகமான கூட்டம் கூடியது, பலர் பல்வேறு முறைகளில் முயற்ச்சித்தனர், சிலர் ஹிப்னாட்டிஷம்,யோகா என எனென்ன முறைகள் தங்களுக்கு தெரியுமோ அனைத்தயும் முயற்ச்சித்தனர் , ஆனால் யாராலும் யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைக்கமுடியாவில்லை, முல்லாவின் கல்லா நிரம்பியது அந்த சமயத்தில் ஒரு குட்டையான நபர் காரில் இருந்து இறங்கிவந்தார் " யார் எனக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்போவது, நான் யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைத்தால்?" என்றான்
முல்லா" நான் தான் , முதலில் போட்டிகட்டனம் செலுத்தவேண்டும் "
அந்த குட்டை மனிதர் தனது பாக்கட்டில் இருந்து 100/- ரூபாய் கொடுத்துவிட்டு தனது காரில் இருந்து ஒரு இரும்பு தடியை எடுத்தார், முல்லா இவன் என்ன புதிதாக செய்யபோகிறான் எத்தனயோ பேர் என்னெவெல்லமோ செய்து பார்த்துவிட்டார்கள் என்று யோசித்தார்.
அந்த குட்டை மனிதர் யானையின் முன் சென்றார் அதன் கண்களையே சிரிது நேரம் பார்த்தார், பின் நேராக யானையின் பின் சென்று அதன் கொட்டையில் ஒரு போடு போட்டார். யானை நான்கு கால்களையும் தூக்கி பிளிரிக்கொன்டு குதித்தது முல்லாவும் தான்!
முல்லா கண்னிர் விட்டார் அவர் 8,000 ரூபாய் தான் வசூல் செய்திருந்தார் தனது பணத்தை 2,000/ ருபாய் சேர்த்து அந்தகுட்டை மனிதனுக்கு கொடுத்தார் அவன் தன்னை ஏமற்றிவிட்டதாக நினைத்தார் அந்த பணதை எப்படியாவது திரும்ப சம்பாரிப்பது என உறுதி கொன்டார்
யானைகள் தனது தலையை மேலும் கிழூமாக தான் தலயை ஆட்டும் அவை பக்கவாட்டில் தலையை ஆட்டது என்பதை உணர்ந்தார். உடனே பத்திரிக்கையில் ஒரு அறிவிப்பு கொடுததார் " யார் தனது யானையை பக்கவாட்டில் தலயை ஆட்ட வைக்கிறார்களோ அவருக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும் அதற்க்கான் போட்டி கட்டணம் 100/- ரூபாய் மேலும் யாரும் யானயை அடிக்ககூடாது "
மீண்டும் மக்கள் குவிந்தனார், வந்தவர்கள் வழக்கம் போல் முல்லாவிற்க்கு கல்லா கட்டிகொண்டிருந்த்னர், யாரளும் யானையை பக்கவாட்டில் தலை ஆட்டவைக்கமுடியவில்லை அப்போது நமது குட்டை மனிதர் அதே போல் இரும்பு தடியுடன் வந்தார்
முல்லா இவன் இப்பொது என்ன செய்யமுடியும் என பார்த்தார் அவன் இவரிடம் வந்து இன்னும் நீ திருந்தவில்லையா ? நீ தான் பணம் தரப்போகிராயா? என்றான்.
முல்லா ஆமாம்! நான் தோற்த்தது அப்போது! விளம்பரத்தில் சொன்ன மாதிரி யானயை நீ அடிக்ககூடாது- போட்டிகட்டனம் ரூ 100/- என்றார்
குட்டை மனிதர் பணத்தை தந்து விட்டு தனது தடியுடன் யானயின் முன்னே சென்றார் அதன் கண்களை உற்று பார்த்தார் பின் அதனிடம் " நான் யாரென்று தெரிகிறதா? " என கெட்டார். யானை மேலும் கிழூம் த்லயை ஆட்டியது " ஆமாம்" என்பது போலஅவர் யானையை பார்த்து " மீண்டும் அந்த அனுபவம் வேண்டுமா ?" எனக்கேட்டார். யானை " வேண்டவே வேண்டாம் " என்பது போல் தலையை பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டே இருந்தது.

-ஒஷோ


Book : beyond enlightnment Chapter 23

Monday, May 14, 2007

பறக்கும் குதிரை ?


ஒரு சீன கதை : ஒர் அரசன் தனது முதன் மந்திரி மேல் படுகோபம் ( காரணம் அவசியம் இல்லை) கொன்டு அவனை தூக்கில் போடுமர்று ஆனை பிரப்பிதான், அந்த ஊரின் வழக்கப்படி, தூக்கில் போடும் முன் அரசன் தூக்கில் போடுவதற்க்கு முதல் நாள் குற்றவாளியை சந்திக்கவேண்டும், அவ்வாறு சந்திதித்து அவனுடைய கடைசி ஆசை என்ன என்பதை தெரிந்து அதை நிறைவேற்ற முடிந்தால் நிறைவேற்றுவது என்பது மரபு, அது மட்டும் அல்ல குற்றம் சட்டப்பட்ட மந்திரி அரசனிடம் மிக நீண்ட காலம் வேலை செய்தவன் - நல்ல நன்பன் - சிறந்த தளபதியாக சில போர்களிலும் வெற்றி பெற்று உலைத்தவன், ஏதோ காலத்தின் கோலம் அவன் அரசனின் எதிரியாகி விட்டான், அதனால் அரசன் தன்டனைக்கு முதல் நாள் சிரைச்சாலை வருகிறான்,
அங்கு அவன் கண்ட காட்சி அவனால் நம்பமுடியவில்லை, அவனது மந்திரி புரண்டு புரண்டு அழுது கோண்டு இருந்தான்,
அரசன் : " இதை நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லை! நீ இவ்வளவு உயிர் பயம் கொண்டவனா? இது தெரிந்திருந்தால் உண்னை முதலிலேயே கொன்ற்றிருப்பென்! வெட்கம் வெட்கம் "
முதல் மந்திரி " உயிர் பயம்! அது எனக்கு கனவிலும் இருக்காது, நான் அழுதது அதற்ககாக அல்ல , இது வேறு, காலம் கடந்து விட்டது அதை பற்றி பேசி இனி பயனில்லை " என்றான்
அரசனுக்கு மந்திரி அழுவதின் காரணம் தெரிய உண்டான ஆவலை அடக்கமுடியவில்லை,
அரசன் " உனது தண்டனை தவிர்த்து வேரு ஆசை ஏதாவது இருந்தால் சொல் நான் நிரைவேற்றுவேன்" என்றான்
அதற்க்கு முதல் மந்திரி " எனது தண்டனை பற்றி எனக்கு கவலை இல்லை, நான் இப்பொழுதெ சாக தாயார்! எனது கவலை எல்லாம் நான் தெறிந்து வைத்திருந்த ஒரு அற்ப்புதமான கலை என்னுடன் யாருக்கும் பயன் இன்றி மடிவதை ப்ற்றித்தான் "
அரசனுக்கு ஆவலை அடக்கமுடியவில்லை " சொல் உனது கலையைப்பற்றி!முடிந்தால் உனது கலை காப்பாற்றபடும் "
" அரசே! எனது இளமை காலத்தில் ஒரு முக்தி அடைந்த சித்தரிடம் இருந்தேன்! அவர் பல கலை விததகர்! நான் அவரிடமிருந்து சில வகையான குதிரைகளை பறக்கவெய்க்கும் கலையை கற்றிருந்தேன் , எனது கடந்த காலம் முலுவதும் அத்தகய குதிரையை இரகசியமாக தேடிக்கொன்டே இருந்தேன், இதுவரை அப்படி ஒரு குதிரை நான் கான முடியவில்லை, ஆனால் , இந்த நிமிடம் அந்த குதிரை எனது கண்முன் இருந்தும் , நான் கற்ற கலை என்னுடன் மடிவதை நினைத்தால் நான் அழுவதை தவிர என்ன செய்யமுடியும் ? எல்லாம் விதி ! " என்றான்
அரசனுக்கு ஆச்சர்யம் " நீ என்ன சொல்கிறாய்? அந்த குதிரை இப்பொழுது இங்கு இருக்கிறதா? அப்படியனால் அதை உன்னால் பறக்க வைக்கமுடியுமா ? சொல் ! " அரசன் வினவினான்
முடியும் அரசே! நிங்கள் வந்த குதிரை அத்தகைய தன்மையுடையது , அதற்க்கு உரிய பயிற்ச்சி கொடுத்தால் அதனை வானத்தில் பறக்கவைக்கமுடியும் ! ஆனால் கலாம் கடந்து விட்டதே என்று மந்திரி பதிலுறைத்தான்
அரசன் ஆஹா நான் குதிரையில் பறந்தால் எப்படி இருக்கும் குதிரையில் பறந்த முதல் அரசன் நானாகத்தான் இருப்பேன் என நினைத்தான் அவன் அமைச்சரிடம் " அப்படியானால் ! நீ அந்த குதிரையை பறக்கவைக்கும் பயிர்ச்சியை இன்றே ஆரம்பி அதற்க்கு எவ்வளவு காலம் வேண்டும் ? என கேட்டான்
முதல் மந்திரி " ஓரு வருடம் அரசே" என சொன்னான்
அதற்க்கு அரசன் " அப்படியே ஆகட்டும்! நீ குதிரையை பறக்கவைத்துவிட்டால் எனது அரசில் பாதி உனக்கு, அது மட்டும் இல்லை எனது மகளையும் உனக்கு திருமணம் செய்துவைப்பேன். ஆனால் ஒன்று உன்னால் குதிரையை பறக்கவைக்கமுடியவில்லை என்றால், உனது தண்டனை நிரவேற்றபடும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்னை யாரும் ஏமாற்றமுடியாது இப்போது நீ சிறையிலிருந்து செல்லலாம் " என்றான்
முதல் மந்திரி அரசனின் குதிரையுடன் வீடு வந்தான் அங்கு அவனது மனைவி அழுது சிவந்த கண்கலுடன் அவனை கண்டதும் அச்சர்யதுடன் கட்டி அனைத்து " ஏப்படி இது நடந்தது! நான் கன்வு காண்கிறேனா? என்றாள் முதல் மந்திரி நடந்த கதையை சொன்னான் அதை கேட்டதும் அவனது மனைவி மீன்டும் கதறினாள் " சொன்னதே சொன்னீர்கள் ஒரு 50 வருடம் அல்லது 10 வருடம் ஆகும் என்று சொல்லியிருக்ககூடாதா ? மீன்டும் 1 வருடம் முடிந்தால் சொன்னது பொய் என்று தெரியும் , நிங்கள் தண்டனயிலிருந்து தப்பமுடியதே , அது மட்டும் இன்றி இந்த ஒரு வருடம் நாம் பயத்துடனே வழ்வோமே " என கண்ணிர் வடிதாள், அதற்கு முதல் மந்திரி " ஒரு வருடம் என்பது மிக நீண்ட காலம் - நானே மரணம் அடையலாம், அல்லது எனக்கு தண்டனை கொடுத்த மன்னன் மடியலாம் அல்லது கடைசிக்கு அந்த குதிரையே செத்து போகலாம் யார் கண்டது வாழ்வில் அடுத்து என்னவென்று ? அதனால் நாம் இன்றை மட்டும் , இந்த கனத்தை மட்டும் இனிதே வாழ்வோம் " என சிரித்தான் -
ஓஷோ


Tao: The Three treasures vol -3 , Chapter 7

( Note : still such ministers exist , only difference is the king has become poor people and they wait for five years to see their horses fly )

Sunday, May 13, 2007

ஓட்டகத்தை கட்டிக்கோ

ஒரு பயனியின் கதை

ஒரு பயனி சாகாரா பாலைவனத்தின் வழியாக நெடும் பயனம் மேர்க்கொன்டான் , மாதங்கள் இரண்டு உருண்டோடின, அவனுக்குள் காமத்தீ உருவாகி காட்டுதீயாய் மாறியது ,அய்யோ பாவம்! அவனுடய என்னமெல்லாம் அழகான பெண்னை பற்றிய கனவு ஆனால் பாலைவனதில் பெண்னுக்கு எங்கே செல்வான், அப்பொது அவனுக்கு தான் ஓட்டி வந்த ஒட்டகதை அனுபவிததால் என்ன ? என்ற விசித்திரமான எண்ணம் உருவானது, அதற்க்கான முயற்ச்சியில் ஈடுபட்டான்

ஓவொரு முயர்ச்சியும் வினாகி போனது , இவன் முயர்ச்சி செய்யும் போது ஓட்டகம் விலகி விலகி போனது, நிரைவெராத முயர்சிகளுடன் மின்டும் பயனத்தை தொடர்தான் அப்பொளுது அங்கு ஒரு விமானம் ஒன்று விழுந்து கிடப்பதயும் அருகே ஒர் அழகிய இளம் பெண் மயங்கிய நிலையில் இறுபதையும் கண்டான் , அவளை தன்னிடம் இருந்த தண்ணிர் கொண்டு மயக்கதிலிருந்து விடுபடச்செய்தான் அவளுக்கு உனவு அளித்தான் , இரண்டு தினஙகள் சென்றன, அவளுக்கு இவன் மேல் காதல் பிறந்தது எவனை கட்டி அனைத்தவரெ " நான் உன்னை மிகவும் நெசிக்கிறென் உன்னை என்னக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னிடம் என்னவென்டுமொ தயங்காமல் கேள் நான் உனக்காக என்ன வெண்டுமென்றாலும் செய்வேன் நான் என்னையே உனக்கு தருவேன் " என்றாள்

பயனிக்கோ அளவிடமுடியா ஆனந்தம் , "இரைவா எனது ப்ரார்த்னை இவ்வள்வு சீக்கிரம் நிரைவேரும் என நினைக்கவில்லை" என்றான் பின் தயங்கிய படியே " அந்த பெண்ணை பார்த்து " பேரழகியே எனது விருப்பதை நிரைவெற்ற உடன்படுவயா ? " எனக்கேட்டான்

அவ்ள் " புரிகிறது , நீ நெடும் பயனம் மேற்க்கொன்டுள்ளாய், உனது ஆசை என்னவாக இருக்கும் என்று, நான் அதை நிரைவெற்ற மகில்ச்சியுடன் உடன் படுகிறேன் இருந்தாலும் நான் பெண்னளவா அதனால் உன் வாயால் கேள் எதுவாக இருந்தாளும் நான் தயார்" என்றாள்

பயனி " மிகவும் நன்றி, இந்த ஒட்டகத்தை சிறிது நேரம் ஆடாமல் பிடித்துக்கொள்வயா? நான் எனது ஆசையை அதனிடம் தீர்க்கும் வரை ?


Osho -Book : Hidden Splendor , Chapter 14 “ No time left for any device “ Question no :1

Saturday, May 12, 2007

It is not current politics

ஒர் அரசன், தனது வயதான காலதில் தனக்குப்பின் தன்னுடைய அரசை தனது மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என்று குலம்பினான், ஒவ்வருவரும் ஒவ்வரு வகையில் சிறந்தவர்களாக இருந்தனர், அதனால் தனது அரச குருவிடம் கறுத்து கேட்டார், அதற்க்கு குரு அரசனிடம் நீ மூன்று பேருக்கும் ஒரு பரிசோதனை வை எனறார் அதன்படி மூவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து " நிங்கள் மூவரும் இந்த பணத்தை கொன்டு ஒரு வாரத்தில் அவரவர் அரன்மனையை நிரப்பவென்டும்! உங்களில் யார் மாறவர்கலை விட அதிகமக நிரப்புகிரிர்களோ ! அவரை எனது அரசியல் வாரிசாக ஏற்று எனது அரசை கொடுப்பேன் என்ரார்" முவரும் ஒப்புகொண்டனர்.
முதல் மகன் யோசித்து பார்த்தான் இருப்பதோ குறைந்த பணம் இதை வைத்து எப்படி அரன்மனையை நிரப்புவது என்று யோசனையின் முடிவில் அவனுக்கு ஒரு அற்புதமான யோசனை ? உதித்தது அதன்படி கர்ப்பரெசன் அதிகாரியை அனுகி ஊரில் விலும் குப்பைகளை ஒரு வார காலத்துக்கு தனது அரன்மனையில் கொட்டும்படி சொன்னான் அவரும் அவனது அரன்மனையை நிரப்பினர் அவனது அருகாமை விட்டுக்காரர்கள் சன்டைக்கு வந்தனர் என்னசெய்யமுடியும்? அவந்தான் அரசனின் மகனாயிர்ரெ?
இரண்டாவது மகன் அண்னன் செய்ததை பார்தான் அதன் மூலம் வரும் எதிர்ப்பயும் பார்தான் அதுமட்டுமின்றி அவனுக்கு குப்பை வேறு கிடைக்காது மிகவம் யோசித்து கடைசியில் ஒன்றுக்கும் உதவாத புல்களை அவனிடம் இருந்த பணத்திர்க்கு கொல்முதல் செய்தான் அது தனது அரன்மனயை எப்படியொ நிரப்பியது கண்டு மக்ழ்ந்தான்
மூன்ராம் வாரிசோ எதை பற்றியும் கவலை படாமல் இருந்தான் எதையும் அவன் வாஙகவில்லை மற்றவர்கள் மிகவும் , வியப்படைந்தனர் அதுபோக இருப்பதை வேரு காலிசெய்தான்
காலக்கெடு முடிந்தது அரசன் தனது குருவுடன் முதலில் முதல் மகனின் அரன்மனைக்கு சென்றான் அவன் போகும் முன்பே நாற்றம் அரம்பித்தது முதல் மகன் செய்த செயர்க்கரிய செயலை நினைத்து மிகவும் கலங்கினான் அவனது அரன்மனயை பார்க்காமலே திரும்ப நினைத்தான் ஆனல் குருவோ ஒப்பந்தபடி நீ அவனது அரன்மனயை பார்த்துதான் ஆகவேண்டும் என கூறி அவனை முதல் மகனின் அரன்மனையின் லட்ச்சனதை பார்க்கவைத்தார் மன்னன் விதியை நொந்தபடி பார்துவிட்டு தனது 2ம் மகனின் லிலைகலை கான ஆவலுடன் புறப்பட்டான் அவனது அரன்மனை அடைந்ததும் அவனது மகன் செய்த அறிவு பூர்வமான சேர்க்கைகளை கண்டு துனுக்குற்றான் மிகவும் மனமுடைந்து அரன்மனை திரும்பலாம் என்ற போது குருவொ நீ வருத்தபட தேவை இல்லை உனக்கு பிறந்தது உன்னை போலதான் இறுக்கும் அத்னால் நாம் மூன்ராம் வாரிசின் செயல்கலையும் பார்த்துவிட்டு முடிவுசெய்வோம் என்றார் மன்னனும் உடன்பட்டு மூன்றாம் வாரிசின் அரன்மனைக்கு சென்றனர்
அங்கு அவனது அரன்மனயில் ஒன்றுமே இல்லாதது கண்டு " ஏன் நீ ஒன்றுமே செய்யவில்லை என கேட்டார் ? அதற்க்கு அவனது முன்றர்ம் வாரிசு " நன்றாக பாருங்கள் இந்த அரன்மனை முழுவதும் ஒளி நிறம்பி இருப்பது தெரியும் என்றான் " குருவும் அதனை அமோதித்தார் அவன் அனைது பொருள்களையும் எடுத்துவிட்டு ஒவ்வொரு மூலையிலும் ஒரு ஒளி விலக்கை ஏற்றி வெய்த்திருந்தான் மன்னனும் மனம் மகிழ்ந்து அவனை அவரது வரிசாக எற்று கொன்டார்-OSHO : From Beyond enlightment - CHAPTER 14